• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FA Farsi
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • HY Armenian
    • ID Bahasa
    • IT Italian
    • JA Japanese
    • KO Korean
    • MG Malagasy
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • RO Romanian
    • RU Russian
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UK Ukrainian
    • UR Urdu
வெளியீட்டு தேதி 6 டிசம்பர் 2024

‘வணக்கம்’ என்று சொல்லலாமா? அல்லது ‘சமாதானம் என்று சொல்லலாமா?’ 🤔

வெளியீட்டு தேதி 6 டிசம்பர் 2024

ஒவ்வொரு நாளும் 'வணக்கம்' என்று சொல்வதை விட 'சமாதானம்' என்று சொல்லி உங்களை வாழ்த்துவதையே நாங்கள் விரும்புகிறோம். 'வணக்கம்' என்று சொல்வது நமது கலாச்சாரத்தின் அடையாளமாக இருக்கிறது, மத்திய கிழக்கு நாடுகளில் பெரும்பாலும் "ஷாலோம்" என்று வாழ்த்துகிறார்கள், இது 'வணக்கம்' என்ற சொல்லுடன் தொடர்புடையதாகும்.

வேதாகமத்தின் அடிப்படையில், உங்களுக்கு சமாதானம் என்று சொல்லி வாழ்த்துவதே எங்கள் விருப்பமாகும்.

‘வணக்கம்’ என்பது தமிழ் சொல், இதன் பொருள் ‘நான் உனக்கு மரியாதை அளிக்கிறேன்’ என்பதாகும். இதைச் சொல்லும்போது நமது கலாச்சாரப்படி, நம் இரு கைகளையும் கூப்பி மற்றவருக்கு வணக்கம் சொல்கிறோம். கிறிஸ்தவர்களில் சிலர் ஆண்டவரை மட்டுமே நாம் வணங்க வேண்டும் என்று வாதிடலாம் (பிலிப்பியர் 2:10-11) அதேவேளையில், மற்றவர்கள், ஒரு நபருக்கு மரியாதை அளிக்கும் வகையில் அவர்களை வணங்குவது என்று சுட்டிக் காட்டுகிறார்கள். மரியாதைக்குரிய அடையாளமாக, கலாச்சார ரீதியாக பொருத்தமானது என்று சொல்லும்போது, ஆபிரகாம், யாக்கோபு மற்றும் யோசேப்பு ஆகியோராலும் இது நடைமுறைப்படுத்தப்பட்டது. 

‘வணக்கம்’ என்ற சொல்லின் பயன்பாடு, ‘ஷாலோம்’ என்ற எபிரேய வார்த்தைக்கு இணையானது, இயேசுவும் இப்படித்தான் மக்களை வாழ்த்தினார்! "உங்களுக்கு சமாதானம்" என்று இயேசு சொன்னார். (யோவான் 20:19)  

‘ஷாலோம்’ ஆங்கிலத்தில் 'அமைதி' என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது, ஆனால், ஒரு சாதாரண வாழ்த்துதலை விட இது மேலானது. இது பரிபூரணம், நிறைவு, முழுமை, மகிழ்ச்சி, ஆரோக்கியம், பாதுகாப்பு மற்றும் செழிப்பு ஆகியவற்றின் ஆழ்ந்த அர்த்தத்தை உள்ளடக்கியதாகும் - இவை அனைத்தும் ஆண்டவரால் மட்டுமே வழங்கப்படக்கூடிய ஆசீர்வாதங்களாகும். (யாக்கோபு 1:17)  

"உம்மை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்." (ஏசாயா 26:3

இந்த வசனத்தில், 'பூரண' மற்றும் 'சமாதானம்' ஆகிய இரண்டு வார்த்தைக்கும் 'ஷாலோம்' என்ற வார்த்தையே பயன்படுத்தப்பட்டுள்ளது 🤯. "உம்மை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனை சமாதானத்தின்மேல் சமாதானம் தந்து (ஷாலோம் ஷாலோம்) காத்துக்கொள்வீர்" என்று கூறப்பட்டுள்ளது. 

‘ஷாலோம்’ என்று நாங்கள் உன்னை வாழ்த்தும்போது, ஆண்டவருடைய பரிபூரண சமாதானத்தையும் அவருடைய அனைத்து ஆசீர்வாதங்களையும் உன் வாழ்வில் நீ பெற்றுக்கொள்கிறாய், அப்படியானால், ‘வணக்கம் - நான் உங்களுக்கு தலைவணங்குகிறேன்’ என்று சொல்வதற்குப் பதிலாக ‘ஷாலோம்’ என்று நாம் சொல்லலாமே!

இன்று, இயேசு உன்னிடம் கூறுகிறார்: அன்பரே, உனக்கு ஷாலோம், என் சமாதானத்தை நான் உனக்குக் கொடுக்கிறேன்; எனது பரிபூரணத்தையும் மகிழ்ச்சியையும் நான் உனக்குத் தருகிறேன். உன் இதயம் கலங்க வேண்டாம், பயப்பட வேண்டாம். நீ என்னை உறுதியாகப் பற்றிக்கொண்டதால், நான் உனக்கு ஆரோக்கியத்தையும் செழிப்பையும் கட்டளையிடுவேன் (யோவான் 14:27) மற்றும் (ஏசாயா 26:3).

Cameron & Jenny Mendes
எழுத்தாளர்

Directors and visionaries of Yeshua Ministries, in love with each other, their son and above all, Jesus.