• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FA Farsi
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • HY Armenian
    • ID Bahasa
    • IT Italian
    • JA Japanese
    • KO Korean
    • MG Malagasy
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • RO Romanian
    • RU Russian
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UK Ukrainian
    • UR Urdu
வெளியீட்டு தேதி 15 டிசம்பர் 2022

விலகி ஓடாதே!

வெளியீட்டு தேதி 15 டிசம்பர் 2022

எப்போதாவது இதை கவனித்திருக்கிறீர்களா? நாம் கஷ்டங்களின் வழியாகக் கடந்து செல்லும்போது நம்மை முதலில் ஆட்கொள்வது விரக்தியடைதலே. 

நீங்கள் பேசுவதை மிகவும் கவனமாக செவிகொடுத்துக் கேட்க வேண்டிய நேரங்களில்,  உங்கள் மனைவியோ அல்லது கணவரோ தன் கையில் செல்போனை வைத்து அதையே பார்த்துக்  கொண்டு இருக்கிறார்கள், ஏன் என்று நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஏன் நமது உடன் வேலையாட்கள் சுலபமாய் செய்ய  வேண்டியதை  கடினமான ஒன்றாக மாற்றி விடுகிறார்கள்?  ஏன் நமது போதகர்கள் நாம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்குத் தீர்வு கூறி உதவி செய்வதில்லை?

இதனால், களத்தில் நின்று போராடுவதா அல்லது தூரமாய்ப் பறந்து செல்வதா என்ற எண்ணம் நம் வாழ்க்கையில் நம்மை  நெருக்கிக் கொண்டிருக்கிறது.  எனவே,  நாம் விலகி ஓடுகிறோம்.   

நாம் இவைகளை மாற்றுகிறோம்...

  • சபையை 
  • வேலையை  
  • அண்டை அயலகத்தாரை
  • நண்பர்களை
  • கணவன்  அல்லது மனைவியை (விவாகரத்து)
  • இது போன்ற பல விஷயங்கள்....

கஷ்டங்கள் திரும்ப வரும்போது அவைகளை நாம் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருப்பதில்லை. நம் கண்களை மூடிக் கொள்கிறோம். 

எப்படியாயினும், இப்படிப்பட்ட கஷ்டமான சூழ்நிலைகளில் இருந்து நீங்கள் விடுபட்டு, விலகி ஓடுவதை ஒருபோதும் நினையாமல், ஆண்டவர் அளிக்கும் இன்பத்தை அடையவும், மகிழ்ச்சியைப் பெறவும் அவர் உங்களுக்கு அறிவுறுத்துகிறார்.

“அந்தப்படி நான் பலவீனனாயிருக்கும்போதே பலமுள்ளவனாயிருக்கிறேன்; ஆகையால் கிறிஸ்துவினிமித்தம் எனக்குவரும் பலவீனங்களிலும், நிந்தைகளிலும், நெருக்கங்களிலும், துன்பங்களிலும், இடுக்கண்களிலும் நான் பிரியப்படுகிறேன்.” (வேதாகமம் 2 கொரிந்தியர் 12:10)

ஏன் தெரியுமா?  இப்படிப்பட்ட  சோதனைகள் எப்போதும் உங்களுக்கு ஒரு செய்தியை வைத்திருக்கின்றன.

அன்பரே, உங்களுக்கான ஆண்டவருடைய செய்தி என்ன?

உங்களது பரமபிதா உங்களுக்காக யாவற்றையும் ஏற்கனவே செய்து முடித்து விட்டபடியால், நீங்களும் அவருடன் ஜெயம் பெற்ற வாழ்க்கையில் நடக்க வேண்டும் என விரும்புகிறார்.  அவரது கிருபை மட்டும் நமக்குப் போதுமானது. உங்களது கசப்பை, மன்னிக்கும் மனப்பான்மையாக மாற்ற உங்களால் கூடும்.  உங்களால் கூடாது என்று தோன்றும் காரியங்கள் எல்லாம் அவரால் கூடும். ஒருவேளை நீங்கள் ஒத்துழைக்கும் விஷயத்தில் இன்னும் வளர வேண்டிய சூழ்நிலையில் இருக்கலாம், உங்கள் முன்னுரிமைகளை மீண்டும் அலசி ஆராய்ந்து திருத்திக்கொள்ளவேண்டியிருக்கலாம், அல்லது சிறந்த முறையில் மற்றவர்களுடன் உரையாட கற்றுக்கொள்ள வேண்டியிருக்கலாம். இவைகளை ஆண்டவர் உங்களுக்கு வெளிப்படுத்தி உங்களை முழுமையாக்க முயற்சிக்கலாம்.

இந்த நம்பிக்கையின் செய்தியை மிகுந்த அன்புடன் ஆண்டவர் உங்களுக்கு அனுப்புகிறார்.  “நீ இருக்கிற வண்ணமே நான் உன்னை நேசிக்கிறேன்.  நான் உன்னை மிகவும் நேசிக்கிற படியால், நீ இருக்கிற இந்த இடத்திலேயே உன்னை விட்டு விட மாட்டேன்.  நான் உன்னை  மேலான இடத்திற்குக் கொண்டு செல்வேன்.  முன்னேறிச் செல்...  உன் பலவீனத்திலே என் பலம் வல்லமையாய் வெளிப்படுத்தப்படும். நான் உன்னோடு கூட இருக்கிறேன். பயப்படாதே!"

Eric Célérier
எழுத்தாளர்

Eric Célérier is a French pastor and author, and president of Jesus.net. He's recognized for his innovative use of cutting-edge technology to spread the Gospel and connect people worldwide with the Bible.