• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FA Farsi
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • HY Armenian
    • ID Bahasa
    • IT Italian
    • MG Malagasy
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • RO Romanian
    • RU Russian
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UK Ukrainian
    • UR Urdu
வெளியீட்டு தேதி 9 ஜூலை 2024

வாழ்க்கையானது செல்போன் திரைபோலவே இருக்கிறது...

வெளியீட்டு தேதி 9 ஜூலை 2024

சில நேரங்களில், கிறிஸ்தவ வாழ்க்கையானது செல்போன் தொடுதிரைபோல இருக்கிறது. செல்போன் தொடுதிரை புதிதாக இருக்கும்போது, அழகாக இருக்கும்; ஆனால் காலப்போக்கில், அது தேய்மானமடைந்து, கீறல் விழுந்து, எதிர்பாராத விதமாக உடைந்துவிடுகிறது.

சில சமயங்களில் நம் மொபைல் போனை கை நழுவி கீழே விழும்படி விட்டுவிடுகிறோம், பிறகு கவலையுடன், “அது உடைந்திருக்கக் கூடாது” என்று நினைக்கிறோம். பின்னர், துரதிர்ஷ்டவசமாக, ஒரு மூலையில் அது உடைந்து, திரை முழுவதும் ஒரு விரிசல் இருப்பதைக் கண்டறிகிறோம். முதலில், அந்த விரிசல் அவ்வளவு மோசமாக இல்லை என்றும், அது ஒரு பெரிய விஷயமில்லை என்றும் நமக்கு நாமே சொல்லிக்கொள்கிறோம்... ஆனால், அதைத் தொடர்ந்து பயன்படுத்துகையில், உடைந்து நொறுங்கிய கண்ணாடித் துண்டுகள் நமக்கு இடையூறு விளைவிக்கின்றன; இறுதியில் நாம் அந்தத் தொடுதிரையை மாற்றிவிட முடிவு செய்கிறோம்.

சில சமயங்களில், வாழ்க்கை கடுமையாக நம்மைத் தாக்குகிறது... அது நம்மை உடைந்துபோகச் செய்கிறது, நாம் மனமடிவாகும் சூழ்நிலைகளை ஏற்படுத்துகிறது. இது போன்ற பின்னடைவுகளை சந்திக்கும்போது, நாம் என்ன செய்ய வேண்டும்? அது மிகவும் எளிது... அவற்றை சரிசெய்யக்கூடிய ஒருவரிடம் நாம் செல்ல வேண்டும்! நம் வாழ்வின் விரிசல்களையும், உடைக்கப்பட்டு நொறுங்கியவைகளையும் சரிசெய்ய வல்லவர் இயேசு ஒருவரே ஆவார். நம்மால் கூடாதது அவரால் நிச்சயம் கூடும்! ஆனால் நம் உடைந்த இதயத்துடன் அவர் மீது நம்பிக்கைகொள்வது நம் கரத்தில்தான் இருக்கிறது.

வேதாகமம் நமக்கு இதைத்தான் கற்பிக்கிறது: “அவர் [இயேசு] நியாயத்திற்கு ஜெயங்கிடைக்கப்பண்ணுகிறவரைக்கும், நெரிந்த நாணலை முறிக்காமலும், மங்கியெரிகிற திரியை அணைக்காமலும் இருப்பார்." (மத்தேயு 12:20)

நெரிந்த நாணலை இயேசு முறிக்க மாட்டார்... ஆம், நிச்சயமாக அப்படிச் செய்யமாட்டார். திரையில் இன்னும் ஒளிர்ந்துகொண்டிருக்கும் இந்த ஒளியை அவர் நிச்சயம் அணைக்கமாட்டார்! கர்த்தருடைய நோக்கம் உன்னை உடைத்து காயப்படுத்துவது அல்ல; மாறாக, உன்னை சரிசெய்து மீண்டும் ஒளிதரும்படி பிரகாசிக்க வைப்பதே ஆகும்... உன்னை மட்டுமல்ல, உன் மூலமாக மற்றவர்களையும் பிரகாசிக்க வைக்க வேண்டும் என்பதே அவரது நோக்கம் ஆகும்!

அன்பரே, இன்று இயேசு உன் இருதயத்தை சரிசெய்வார் என்று நம்ப நான் உன்னை ஊக்குவிக்கிறேன்!

Eric Célérier
எழுத்தாளர்