அன்பரே, விஷயங்களை ஆண்டவர் பார்ப்பதுபோல் பார்க்கக் கற்றுக்கொள்
"சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது." (வேதாகமத்தில் 1 கொரிந்தியர் 1:18ஐப் பார்க்கவும்)
இன்று, சில காரியங்களை நினைவில்கொள்ளும்படி நாம் சிறிது நேரம் செலவிடுவோம்.
உன் கண்ணை மூடி கற்பனை செய்து பார்... சிலுவையின் மீது இயேசு தொங்கிக்கொண்டிருக்கிறார், உலர்ந்த மரத்தின் மீது அவரது இரத்தம் பாய்ந்து ஓடிக்கொண்டிருக்கிறது, அவரது வாழ்க்கையின் கடைசி மூச்சை விடுகிறார், வானத்தில் இருள் சூழ்கிறது...
உன் இருதயக் கண்களைத் திறந்து பார்... இயேசு உயிர்த்தெழுந்துவிட்டார், சிங்காசனத்தில் இயேசு வீற்றிருக்கிறார், அவர் ராஜரீகம் பண்ணுகிறார். பாவம் அழிக்கப்பட்டது, மரணம் விலகியோடுகிறது...
தோல்விக்கு ஏதுவான சாராம்சத்தைக் கொண்டிருந்த அனைத்தும் கெம்பீர சத்தத்துடனான ஒரு ஜெயமாக மாறின. நம்பிக்கையற்றதாகத் தோன்றின காரியங்கள் இப்போது நம்பிக்கையளிப்பதாகத் தோன்றி, மரணத்தை பகிரங்கமாக ஜெயித்துக் காட்சிப்படுத்துகிறது!
ஒருவேளை இன்று, நீ நம்பிக்கையை இழந்து, உள்ளத்தில் குழப்பத்தோடு இருக்கும் ஒரு நபராகவோ அல்லது மனச்சோர்வடைந்த ஒரு சூழ்நிலையிலோ இருக்கலாம்.
கண்களை உயர்த்திப் பார்... நீ அவருடைய கரத்தில் இருக்கிறாய்… நீ செல்லும் இந்தப் பாதையில் அவர் உன்னுடன்தான் இருக்கிறார்.
அன்பரே, விஷயங்களை ஆண்டவர் பார்ப்பதுபோல் பார்க்கக் கற்றுக்கொள்.
என்னுடன் சேர்ந்து ஜெபிக்க நான் உன்னை அழைக்கிறேன்: "பிதாவே, இந்தச் சூழ்நிலையை உமது கண்களால், உமது பார்வையில் பார்க்க எனக்கு உதவுமாறு நான் ஜெபிக்கிறேன். எனது தற்போதைய பிரச்சினையைத் தாண்டி, அதற்கு அப்பால் உள்ள நன்மையைக் காணவும், உம் மீதும் உமது வாக்குத்தத்தங்கள் மீதும் என் கண்களை வைக்கவும் எனக்கு உதவுவீராக... கர்த்தாவே, உமது பலி மற்றும் உயிர்த்தெழுதலுக்கு நன்றி! இன்று நீர் என் பட்சமாக செயல்படுவீர் என்று நான் நம்புகிறேன். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்."
