வெளியீட்டு தேதி 25 மார்ச் 2024

புனித வாரம் நாள் 1: இரட்சிப்பிற்கான சாத்தியம்!

வெளியீட்டு தேதி 25 மார்ச் 2024

உண்மையிலேயே, மரித்தவர் மீண்டும் ஜீவனைப் பெறுவார் என்ற ஒரு வாக்குறுதியை, மரித்தவருக்காக  அழுது புலம்புபவர்கள் பெற்றுக்கொள்ளாத வரைக்கும்... ஒரு இறுதிச் சடங்கு நடைபெறும் நேரத்தில் நம்பிக்கை என்ற ஒன்றைக் கொண்டிருப்பது என்பது மிகக் கடினமானதுதான்! அந்த நம்பிக்கைதான் இந்த வாரம் நமக்கு முன்னால் வைக்கப்பட்டிருக்கிறது. இயேசு காட்டிக்கொடுக்கப்பட்டபோதும், இயேசுவின் சிலுவைப் பாடுகளிலும் மற்றும் அவரது மரணத்திலும் கூட நன்மை இருப்பதாக நமக்கு நம்பிக்கை உண்டு, ஏனென்றால் அதற்குப் பின்பு நடந்த அற்புதங்கள் இந்த நம்பிக்கையை நமக்கு உருவாக்குகின்றன.

திங்களன்று கிடைத்த நம்பிக்கையினால் உன்னை ஊக்குவிக்கும் முன், 24 மணிநேரம் பின்னோக்கிச் செல்வோம்.

தம்முடைய மரணத்துக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமையன்று, நம்முடைய பாவங்களுக்காகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்க வேண்டும் என்பதை அறிந்திருந்தவராகிய இயேசு, கழுதைக் குட்டியின் மீது அமர்ந்து, மெதுவாகவும் பணிவுடனும் எருசலேமுக்குள் பிரவேசிக்கும் தமது வெற்றிகரமான பயணத்தை மேற்கொண்டு, அதை நிறைவேற்றினார்.

"சீயோன் குமாரத்தியே, மிகவும் களிகூரு; எருசலேம் குமாரத்தியே, கெம்பீரி; இதோ, உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார்; அவர் நீதியுள்ளவரும் இரட்சிக்கிறவரும் தாழ்மையுள்ளவரும், கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறி வருகிறவருமாயிருக்கிறார்." (சகரியா 9:9)

திரளான மக்கள் பனைமரக் கிளைகளைத் தங்கள் கைகளில் ஏந்தி அவற்றை அசைத்து, "தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா! கர்த்தருடைய நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்தரிக்கப்பட்டவர், உன்னதத்தில் ஓசன்னா!" என்று சொல்லி ஆர்ப்பரித்து இயேசுவை வரவேற்றனர். "ஓசன்னா" என்றால் "தேவன் இரட்சிப்பவர்" என்று அர்த்தம், அவர் நம் இரட்சிப்புக்கு ஒரு வழியை உருவாக்கிவிட்டார் என்பதை  இப்போது நாம் அறிந்திருக்கிறோம்!

மறுநாள் காலை, இயேசு தம் சீஷர்களுடன் எருசலேமுக்குத் திரும்பினார். அவர் திரும்பிச் செல்லும் வழியில், கனி தராமல் இருந்த ஒரு அத்தி மரத்தைக் கண்டு, அதைச் சபித்தார். இங்கே இயேசு நமக்கு ஒரு பாடத்தைக் கற்பிக்கிறார் : ஒரு நபர் கொண்டிருக்கும் உண்மையானதும் ஜீவனுள்ளதுமான விசுவாசமானது அவரது வாழ்வில் ஆவிக்குரிய கனிகளைத் தர வேண்டும் என்பதே அந்தப் பாடமாகும். 

சகோதரனே/சகோதரியே, சிறிது நேரம் ஒதுக்கி, உன் வாழ்க்கையில் நீ பெற்றிருக்கிற ஆவியின் கனிகளுக்காக ஆண்டவருக்கு நன்றி செலுத்து! அவர் உன்னில் கிரியை செய்யும் விதத்தை எண்ணி தேவனுக்கு நன்றி சொல்வாயாக. இன்று அவர் உனக்குக் கொடுத்திருக்கும் குறிக்கோள் மற்றும் வல்லமையின் மூலம் உன் வாழ்வில் நல்ல கனிகளைக் கொடுப்பாயாக.

நாம் ஜெபிப்போம் :

“இயேசுவே, நான் உம்மை என் ராஜாவாக கனம்பண்ணுகிறேன். நீர் மனத்தாழ்மையும் வல்லமையும் உள்ளவர்; இன்றும் நீர் என்னை ஆளுகை செய்து வருகிறீர் என்பதை எண்ணி உம்மைப் போற்றுகிறேன். நல்ல கனிகளைத் தர எனக்கு உதவுமாறு மன்றாடுகிறேன்! என் வாழ்வில் நான் கொடுக்கிற கனியானது மற்றவர்களை இயேசுவை அறியும் அறிவிற்கு நேராகக் கொண்டுவர வேண்டும் என்று நான் விரும்புகிறேன். கர்த்தராகிய இயேசுவே, இப்போதும் நான் ஜெபத்தின் மூலம் உம்மிடம் வர வாய்ப்பளித்ததற்கு உமக்கு நன்றி. நான் ஜெப வீட்டிற்குள் பிரவேசிக்கும்போது, என் இருதயம் நன்றியுடனும் நம்பிக்கையுடனும் நிறைந்திருக்கட்டும்! இந்தப் புனித திங்கட்கிழமை தினம் அன்று நான் உம்மைப் போற்றித் துதிக்கிறேன். ஆமென்.”

Eric Célérier
எழுத்தாளர்