• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FA Farsi
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • HY Armenian
    • ID Bahasa
    • IT Italian
    • JA Japanese
    • KO Korean
    • MG Malagasy
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • RO Romanian
    • RU Russian
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UK Ukrainian
    • UR Urdu
வெளியீட்டு தேதி 28 மார்ச் 2024

புனித வாரம் நாள் 4: ஒருவரையொருவர் நேசியுங்கள்!

வெளியீட்டு தேதி 28 மார்ச் 2024

வியாழக்கிழமையாகிய இன்றைய தியானத்திற்கு உன்னை வரவேற்கிறேன். நாம் அனைவரும் சேர்ந்து ஜெபிப்போம்.

“இயேசுவே, இன்று உமது ஊழியக்காரராகிய இயேசுவினுடைய விசுவாசத்தின் முன்மாதிரியையும் உமது இருதயத்தின் திட்டத்தையும் கொண்டாடுகிறோம். இன்று நீர் என் நண்பர்களுக்காக வைத்திருக்கும் ஒவ்வொரு அற்புதத்தையும் அவர்கள் முழுமையாகப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதே எனது ஜெபமாகும். இயேசுவே, உம்மைப்போல அன்பு செய்வது எப்படி என்பதை எங்களுக்குக் கற்றுக் கொடுப்பீராக! ஆமென்.”

அன்று இரவு ஓய்வெடுத்த பிறகு, இயேசு பேதுருவையும் யோவானையும் பஸ்கா விருந்துக்கு ஆயத்தம் செய்யும்படி முன்னதாக அனுப்பிவைத்தார். அன்று மாலை, இயேசு தம்முடைய சீஷர்களின் பாதங்களைக் கழுவி, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் ஒரு அதிசயமான ஊழியத்தைச் செய்தார். இந்த மனத்தாழ்மையான ஊழியத்தைச் செய்து அவர் எதைக் காட்டினார்? விசுவாசிகள் ஒருவரையொருவர் எப்படி நேசிக்க வேண்டும் என்பதை இயேசு மாதிரியாக செய்து காட்டினார்.

நண்பனே/தோழியே, இப்போது நீ யாருடைய கால்களைக் கழுவ வேண்டியுள்ளது? இன்று ஒருவரின் கால்களைக் கழுவுவது என்பது அவர்களுக்கு உணவைக் கொண்டு செல்லுதல், ஊக்கமளிக்கும் ஒரு வார்த்தையை எழுதுதல் அல்லது அவர்களது அன்றைய நாளையோ அல்லது உன்னுடைய அன்றைய நாளையோ மாற்றும் ஒரு இரக்கம் காட்டும் செயலைச் செய்தல் போன்றவையாக இருக்கலாம்! தேவன் யாரை உனக்கு நினைவுபடுத்துகிறாரோ, இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றி இன்று அவர்களுக்கு ஊழியம் செய்!

"அவர் அவர்களை நோக்கி: நான் பாடுபடுகிறதற்கு முன்னே உங்களுடனேகூட இந்தப் பஸ்காவைப் புசிக்க மிகவும் ஆசையாயிருந்தேன். தேவனுடைய ராஜ்யத்திலே இது நிறைவேறுமளவும் நான் இனி இதைப் புசிப்பதில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்" என்று சொல்லி, இயேசு தம்முடைய சீஷர்களுடன் பஸ்கா உணவைப் பகிர்ந்துகொண்டார்‌. (லூக்கா 22:15-16)

இயேசு தமது நெருங்கிய தோழர்களுடன் திருவிருந்து ஐக்கியத்தைப் பகிர்ந்துகொண்டு, "என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்" என்று அவர்களுக்கு அறிவுறுத்தினார்.

நண்பனே/தோழியே, இந்த பஸ்கா நாட்களில், இயேசுவின் வேதனைகளை நினைவுகூரும்படி இந்தத் தருணத்தை நீ பயன்படுத்துவாயாக. அவருடைய அன்பையும் அவருடைய வாழ்க்கையையும் நினைவுகூரு. அவரது பாடு மரணத்தையும் ஜெபத்தையும் நினைவுகூரு. அவருடைய இரட்சிப்பையும் அவரது ஆதரவையும் நினைவில் வைத்துக்கொள். உன் வாழ்க்கையில் தேவன் உனக்காகச் செய்த அனைத்தையும் நினைவுகூர்ந்து நன்றி சொல்ல இந்த நேரத்தைப் பயன்படுத்திக்கொள். இயேசு செய்ததையும் அவர் யார் என்பதையும் நினைவுகூரும்போது நமக்கு மிகுந்த நம்பிக்கை உண்டாகிறது!

நீயும் நானும் இரட்சிப்பு என்னும் அற்புதத்தையும் நம்பிக்கை நிறைந்த எதிர்காலத்தையும் அனுபவிப்பதற்காக இயேசு சிலுவையில் மிகுந்த வேதனையை ஏற்றுக்கொண்டார்!

இந்த சம்பவம் தியானிப்பதற்குக் கடினமான ஒன்றாக இருக்கலாம், ஆனால் நம்பிக்கையையும் இயேசு அளித்திருக்கும் வாக்குத்தத்தத்தையும் பற்றிக்கொள். நாம் கிட்டத்தட்ட உயிர்த்தெழுதல் நாளுக்கு மிக அருகில் வந்துவிட்டோம்!

Eric Célérier
எழுத்தாளர்

Eric Célérier is a French pastor and author, and president of Jesus.net. He's recognized for his innovative use of cutting-edge technology to spread the Gospel and connect people worldwide with the Bible.