• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FA Farsi
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • HY Armenian
    • ID Bahasa
    • IT Italian
    • JA Japanese
    • KO Korean
    • MG Malagasy
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • RO Romanian
    • RU Russian
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UK Ukrainian
    • UR Urdu
வெளியீட்டு தேதி 30 மார்ச் 2024

புனித வாரம் நாள் 6: அமைதி மற்றும் தியானம்

வெளியீட்டு தேதி 30 மார்ச் 2024

நிசப்தம் நிறைந்ததும்  சிந்தித்துப் பார்க்க வேண்டியதுமான இந்த நாளுக்கு உன்னை வரவேற்கிறேன்.

நேற்று இரவு இயேசு சிலுவையிலிருந்து கீழே இறக்கப்பட்டார். நமது பாவத்திற்கான தண்டனை முழுமையாக செலுத்தப்பட்டாயிற்று. போராட்டம் முடிந்துவிட்டது, மரணம் வென்றுவிடும் என்பதுபோலத்தான் தோன்றியது. சீஷர்கள் சிதறி இங்கும் அங்குமாக ஓடிவிட்டனர். இயேசுவைப் பின்பற்றியவர்கள் நம்பிக்கையிழந்து, ஏமாற்றமடைந்தனர். சனிக்கிழமைக்கான நம்பிக்கை எங்கேபோனது? அது பிதாவினிடத்தில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தது!

சனிக்கிழமையன்று, இயேசுவின் சரீரமானது கல்லறையில் வைக்கப்பட்டு ரோமானிய வீரர்களால் பாதுகாக்கப்பட்டது, அதுவும் ஓய்வுநாளாக இருந்தது; மாலை 6 மணிக்கு ஓய்வுநாள் முடிவடைந்ததும், நிக்கொதேமு வாங்கிய வாசனைத் திரவியங்களுடன் இயேசுவின் சரீரம் அடக்கம் செய்யத் தயார் செய்யப்பட்டது.

"ஆரம்பத்திலே ஒரு இராத்திரியில் இயேசுவினிடத்தில் வந்திருந்த நிக்கொதேமு என்பவன் வெள்ளைப்போளமும் கரியபோளமும் கலந்து ஏறக்குறைய நூறு இராத்தல் கொண்டுவந்தான். அவர்கள் இயேசுவின் சரீரத்தை எடுத்து, யூதர்கள் அடக்கம்பண்ணும் முறைமையின்படியே அதைச் சுகந்தவர்க்கங்களுடனே சீலைகளில் சுற்றிக் கட்டினார்கள்."  (யோவான் 19:39-40)

சனிக்கிழமைக்கான நம்பிக்கை உன் இருதயத்தில் உண்டாகும் மாற்றத்திலிருந்து வருகிறது! அன்றைய தினம் நாம் நினைத்ததுபோல எதுவும் நடக்கவில்லை என்று தோன்றியபோது, ஜீவனுக்கும் மரணத்துக்குமான திறவுகோலைப் பாதுகாக்கும் அவரது பணியை இயேசு நிறைவேற்றிக்கொண்டிருந்தார்! நமது ஜீவனும் மரணமும் அந்தத் திறவுகோலில்தான் உண்டு!

நண்பனே/தோழியே, நீ நம்பிக்கை இழந்துவிட்டாயா? உனக்குள் ஏதோ மரித்துவிட்டதாக உணர்கின்றாயா? மனம் தளராதே! கல்லறையை விட இயேசுவின் அன்பு பெரியது என்பதையும் நீ இப்போது எதிர்கொள்ளும் எந்தப் பிரச்சனையையும் விட இயேசு பெரியவர் என்பதையும் அவரது வரலாறு நிரூபிக்கிறது.

காத்திருக்கும் இந்த நாளில், நான் வீணாகக் காத்திருக்கவில்லை என்று சொல்லி இந்தக் காத்திருப்பு நாளைக் கொண்டாடு! இயேசு மீண்டும் தமது சுவாசக் காற்றை உன் மீது ஊதுவார், உலகின் நம்பிக்கை மீண்டும் தழைத்து எழும்!

இந்தக் காத்திருப்பு நாளில், தேவனுடைய திட்டத்தைப் பற்றிக்கொண்டு, எதிர்பார்ப்புடன் காத்திரு. (ஏசாயா 40:31) இந்த தேவனுடைய வாக்குத்தத்தத்தை ஒருபோதும் மறந்துவிடாதே.

"கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்."

இயேசுவின் மீதான நம்பிக்கையைப் பற்றிக்கொள். உயிர்த்தெழுதல் நிகழப்போகிறது. அதற்கு உன்னை ஆயத்தப்படுத்திக்கொள்!

Eric Célérier
எழுத்தாளர்

Eric Célérier is a French pastor and author, and president of Jesus.net. He's recognized for his innovative use of cutting-edge technology to spread the Gospel and connect people worldwide with the Bible.