• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FA Farsi
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • HY Armenian
    • ID Bahasa
    • IT Italian
    • MG Malagasy
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • RO Romanian
    • RU Russian
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UK Ukrainian
    • UR Urdu
வெளியீட்டு தேதி 7 ஏப்ரல் 2024

அன்பரே, இந்தப் பாலைவனத்தைக் கடக்க ஆண்டவர் உனக்கு உதவுவார்

வெளியீட்டு தேதி 7 ஏப்ரல் 2024

“உன்னுடைய பின்நாட்களில் உனக்கு நன்மை செய்யும்பொருட்டு, உன்னைச் சிறுமைப்படுத்தி, உன்னைச் சோதித்து, கொள்ளிவாய்ச் சர்ப்பங்களும் தேள்களும், தண்ணீரில்லாத வறட்சியுமுள்ள பயங்கரமான பெரிய வனாந்தரவழியாய் உன்னை அழைத்துவந்தவரும், உனக்காகப் பாறையான கன்மலையிலிருந்து தண்ணீர் புறப்படப்பண்ணினவரும், உன் பிதாக்கள் அறியாத மன்னாவினால் வனாந்தரத்திலே உன்னைப் போஷித்துவந்தவருமான உன் தேவனாகிய கர்த்தரை நீ மறவாமலும்…” (உபாகமம் 8:15-16)

பழைய ஏற்பாட்டில், எகிப்தில் அடிமைப்படுத்தப்பட்ட இஸ்ரவேல் புத்திரரின் வரலாற்றை நாம் படிக்கலாம். அவர்கள் பாலைவனத்தில் 40 வருடங்கள் மாற்றுப்பாதையில் இருந்தபோதிலும், இந்த வருத்தத்திலிருந்து அவர்களை மீட்டு வாக்குத்தத்தம் பண்ணின தேசத்திற்கு அழைத்துச் செல்ல ஆண்டவர் ஒரு மீட்பரைஅனுப்புகிறார்.

ஒரு வறண்ட, வற்றிய இடத்தை நாம் விரும்பி நாடமாட்டோம்... இருப்பினும் எகிப்தை விட்டு வெளியேறி இந்தப் பாலைவனத்திற்குள் நுழைந்தபின் தான் இஸ்ரவேல் மக்கள் அற்புதத்தை அல்லது அற்புதங்களை அனுபவித்தார்கள்!

எந்த வழியும் இல்லாமல் ஒரு மூலையில் தள்ளப்பட்ட நிலைமையில் இருக்கும்போதுதான், ஆண்டவரின் அற்புதத்தை அனுபவிப்பது பெரும்பாலும் இடம்பெறுகிறது. அன்பரே, இன்றைக்கு உன் நிலைமை இதுவாக இருந்தால், என்னுடன் அறிக்கையிடு: “ஆண்டவரே, நான் உம்மையும் உமது அன்பையும் விசுவாசிக்கிறேன். இன்று எனக்கு பாலைவனமாகத் தோன்றும் இந்த இடம் தான் நீர் உம்முடைய அற்புத வல்லமையை வெளிப்படுத்தப்போகும் இடம் என்பதற்காக நன்றி.  இன்று சாத்தியமில்லாததை சாத்தியமாக்கியதற்கு நன்றி. மனித இயலாமை இருக்கும் இடம் தான், நீர் செயல்பட ஒரு அற்புதமான வாய்ப்புள்ள இடம் என்பதற்காக நன்றி. உமது வல்லமையுள்ள நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்!”

Eric Célérier
எழுத்தாளர்