• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FA Farsi
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • HY Armenian
    • ID Bahasa
    • IT Italian
    • JA Japanese
    • KO Korean
    • MG Malagasy
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • RO Romanian
    • RU Russian
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UK Ukrainian
    • UR Urdu
வெளியீட்டு தேதி 8 ஏப்ரல் 2024

அன்பரே, எல்லாம் சரியாகிவிடும்

வெளியீட்டு தேதி 8 ஏப்ரல் 2024

ஒரு தாய் தன் குழந்தை கீழே விழுந்து அழத் தொடங்கும்போது உடனே என்ன சொல்லுகிறாள் என்பதை நீ எப்போதாவது கேட்டிருக்கிறாயா?

அவள் தன் குழந்தைக்கு ஆறுதல் கூறும்போது அதிகமாக பயன்படுத்தும் இந்த வார்த்தைகள் எனக்கு மிகவும் பிடிக்கும் : "சரி போகட்டும், அழாதே, இது சரியாகிவிடும்..."

அன்பரே, இன்று காலை உன் தந்தை உன்னிடம் என்ன சொல்கிறார் என்பதை கவனி...“எல்லாம் சரியாகிவிடும்”.

  • உன் பிள்ளைகளை சமாளிக்க முடியவில்லையா? எல்லாம் சரியாகிவிடும்.
  • 'எப்படி செலுத்தப்போகிறேன்' என்று நீ தவித்து யோசிக்கும் ஒரு கட்டண ரசீது வந்துள்ளதா? எல்லாம் சரியாகிவிடும்.
  • உன்னை நினைத்தோ, உன் குழந்தைகளை நினைத்தோ அல்லது உன் அன்புக்குரியவர்களை நினைத்தோ பயப்படுகிறாயா? எல்லாம் சரியாகிவிடும்.
  • என்ன முடிவு எடுப்பது என்று தெரியாத கடினமான சூழ்நிலையை எதிர்கொண்டிருக்கிறாயா? எல்லாம் சரியாகிவிடும்.

அன்பரே, உன் அற்புதமான, நல்ல தந்தை உன்னை கவனித்துக் கொண்டிருப்பதனால் எல்லாம் சரியாகிவிடும். அவர் உன்னுடன் இருக்கிறார், அவர் உனக்காக இருக்கிறார். அவர் உன்னைப் பாதுகாக்கிறார், அவர் உன்னைத் தயாராக்குகிறார், அவர் உன்மீது அக்கறை செலுத்துகிறார்.

என் அன்பரே, எல்லாம் சரியாகிவிடும். எல்லாம் நன்றாய் விளங்கும். உன் தேவன் இந்த நாளிலும், முழு பிரபஞ்சத்தையும் ஆளுகிறவர், உன் வாழ்க்கையை ஆளுகிறவர். அவருடைய சமாதானத்தை, ஷாலோமைப் பெற்றுக்கொள். இதுவே இன்று உனக்கான என்னுடைய ஜெபம்.

Eric Célérier
எழுத்தாளர்

Eric Célérier is a French pastor and author, and president of Jesus.net. He's recognized for his innovative use of cutting-edge technology to spread the Gospel and connect people worldwide with the Bible.