அன்பரே, உனக்கு அளித்த வாக்குத்தத்தங்களை நான் மறந்துவிடவில்லை!
"காத்திருப்பு என்பது பெரும்பாலும் தெய்வீக ஆசீர்வாதங்களின் ஆயத்தத்திற்கான தளமாகும்!"
அன்பரே, கர்த்தர் இன்று உனக்கு விசேஷமான ஒன்றைச் சொல்ல விரும்புகிறார் என்று நான் நம்புகிறேன். இந்த வார்த்தைகள் உன்னை உற்சாகப்படுத்தி பலப்படுத்தட்டும்!
“ஒவ்வொரு நாள் காலையிலும் சூரியன் உதிப்பதுபோலவே இன்று காலையும் அது உதயமானது.
இன்று, உனக்கான என் அன்பும், உனக்கான என் வாக்குத்தத்தங்களும் மாறிவிடவில்லை.
உனக்காக வைக்கப்பட்ட உன் நாட்கள் ஒவ்வொன்றும் என் கரத்தில் உள்ளன.
‘என் கருவை உம்முடைய கண்கள் கண்டது;
என் அவயவங்களில் ஒன்றாகிலும் இல்லாதபோதே
அவைகள் அனைத்தும், அவைகள் உருவேற்படும் நாட்களும்,
உமது புஸ்தகத்தில் எழுதியிருந்தது.’ (சங்கீதம் 139:16)
அன்பரே, நான் உனக்கு அளித்த வாக்குத்தத்தங்களை மறந்துவிடவில்லை. உனக்காக நான் வைத்திருந்த கனவுகளை நான் ஒதுக்கி வைத்துவிடவில்லை.
என் மகனே/மகளே, உனக்காக நான் வைத்திருக்கும் திட்டங்களை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்படுகிறது என்று நீ நினைப்பாயானால், அது உண்மையில் அதற்கான ஆயத்த களத்தில் உள்ளது என்பதுதான் அர்த்தம். இது உனக்கான பயிற்சி! நான் உன்னை நேசிப்பதால், என் ஆசீர்வாதங்களை வரவேற்கவும் அவற்றைப் பெற்றுக்கொள்ளவும் உன்னை ஆயத்தப்படுத்த விரும்புகிறேன்.
நீ என்னைப் பின்பற்றி, என் வழிகளில் நடக்கும்போது, நானே உன்னை வடிவமைத்து, உன்னுடன் சேர்ந்து நடக்கிறேன்.
ஆசீர்வாதங்கள், மகிழ்ச்சி மற்றும் ஜீவனின் ஆதாரமாக நீ இருக்கும்படி, விசேஷித்த விதத்தில் நான் உன்னைத் தேர்ந்தெடுத்ததால், உனக்காக நான் முன்கூட்டியே திட்டமிட்டுள்ள எல்லாவற்றிலும் நீ முழுமையாக பிரவேசிக்க வேண்டும் என்பதே எனது விருப்பமாகும்!
உனது கையை எனது கரத்தின் மீது வைத்து என்னைப் பின்பற்றி வா.”
நீ சிறிது நேரம் ஆராதனை செய்து கர்த்தரைத் துதிக்க விரும்பினால், ஆண்டவர் உண்மையுள்ளவர் என்பதையும் அவர் தம் வாக்குத்தத்தங்களை நிறைவேற்றுகிறார் என்பதையும் நினைவூட்டும், "வாக்குரைத்தவரே, நீர் உண்மையுள்ளவரே, நீர் வாக்குமாறாதவர்" எனும் இந்தப் பாடலைப் பாடி ஆராதனை செய்வாயாக!
