• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FA Farsi
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • HY Armenian
    • ID Bahasa
    • IT Italian
    • JA Japanese
    • KO Korean
    • MG Malagasy
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • RO Romanian
    • RU Russian
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UK Ukrainian
    • UR Urdu
வெளியீட்டு தேதி 1 மே 2024

அன்பரே, ​கர்த்தர் உன் மேய்ப்பராய் இருக்கிறார்!

வெளியீட்டு தேதி 1 மே 2024

சங்கீதம் 23ன் தொடர் தியானத்திற்கு உன்னை வரவேற்கிறேன்!

“கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்.” (பரிசுத்த வேதாகமம், சங்கீதம் 23:1)

இது தாவீது எழுதிய சங்கீதத்தின் முன்னுரை, இது உலகத்தில் அநேக மக்களின் இதயத்தை தொட்ட வார்த்தை என்பதில் சந்தேகமில்லை. இந்த வார்த்தையின் செய்தி உனக்கு ஒரு அபரிவிதமான ஆசீர்வாதத்தின் ஊற்றாக இருக்க வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன்.

இந்த சங்கீதம் கர்த்தரைப் பற்றி பேசுகிறது, நித்திய தேவனை, சர்வவல்லவரைப் பற்றி பேசுகிறது. அந்த தேவனை தாவீது ராஜா தனது மேய்ப்பனாக நமக்கு அறிமுகப்படுத்துகிறார்.

அரசனாவதற்கு முன்பு, தாவீது தானும் மேய்ப்பனாய் இருந்தான். ஒரு மேய்ப்பன் தன் ஒவ்வொரு ஆட்டையும் தனித்துவமாக நேசிக்கிறான் என்று தாவீதுக்குத் தெரியும். இருண்ட இரவின் மத்தியிலும் தொலைந்துபோன, காயப்பட்ட, ஆபத்தில் இருக்கிற தனது ஆட்டை மீட்க ஒரு மேய்ப்பன் தயங்கமாட்டான் என தாவீதுக்குத் தெரியும்.

வேட்டையாடும் மிருகங்களிடம் இருந்து தன் மந்தையைக் காக்க தாவீது தனது உயிரைப் பணயம் வைத்தான். தன் ஆடுகளைப் பற்றி சவுல் ராஜாவிடம் சொல்லும்போது, தாவீது இவ்வாறாக சொல்கிறான்,

“உம்முடைய அடியான் என் தகப்பனுடைய ஆடுகளை மேய்த்துக்கொண்டிருக்கிறபோது, ஒரு விசை ஒரு சிங்கமும் ஒரு விசை ஒரு கரடியும் வந்து, மந்தையிலிருக்கிற ஒரு ஆட்டைப் பிடித்துக்கொண்டது. நான் அதைத் தொடர்ந்துபோய், அதை அடித்து, அதை அதின் வாய்க்குத் தப்புவித்தேன்; அது என்மேல் பாய்ந்தபோது, நான் அதின் தாடியைப் பிடித்து, அதை அடித்துக் கொன்று போட்டேன்.” (பரிசுத்த வேதாகமம், 1 சாமுவேல் 17:34‭-‬35ஐ வாசித்துப் பார்க்கவும்)

ஒரு மேய்ப்பன் தனது ஒவ்வொரு ஆட்டையும் தனித்தனியாக அறிவான், தனித்துவமாக நேசிக்கிறான் என்பது தாவீதுக்குத் தெரியும்.

தாவீதைப் பொறுத்தவரை: கர்த்தரே அவனது மேய்ப்பர். நல்ல மேய்ப்பர். மேய்ப்பர்களிலே சிறந்தவர். தெய்வீக மேய்ப்பர். மேய்ப்பர்களுக்கெல்லாம் மேய்ப்பர் என்பதை உறுதியாக நம்பினான்!

தாவீது, தனது மேய்ப்பரை சார்ந்திருக்கும் ஒரு ஆடாகத் தன்னைக் கருதினான். ஒரு ஆட்டுக்கு கோரைப் பற்கள் கிடையாது; தனது மேய்ப்பனைத் தவிர வேறு பாதுகாப்பு அதற்குக் கிடையாது. பாதுகாப்பாக உணர மேய்ப்பன் மாத்திரம் அதற்குத் தேவைப்படுகிறது.

இயேசு சொன்னார்: "திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன். நானே நல்ல மேய்ப்பன்: நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான். மேய்ப்பனாயிராதவனும், ஆடுகள் தனக்குச் சொந்தமல்லாதவனுமான கூலியாள் ஓநாய் வருகிறதைக் கண்டு ஆடுகளை விட்டு ஓடிப்போகிறான்; அப்பொழுது ஓநாய் ஆடுகளைப்பீறி, அவைகளைச் சிதறடிக்கும். கூலியாள் கூலிக்காக வேலைசெய்கிறவனாகையால் ஓடிப்போகிறான், ஆடுகளுக்காக அவன் கவலைப்படான். நானே நல்ல மேய்ப்பன்; பிதா என்னை அறிந்திருக்கிறதுபோலவும், நான் பிதாவை அறிந்திருக்கிறதுபோலவும், நான் என்னுடையவைகளை அறிந்தும் என்னுடையவைகளால் அறியப்பட்டுமிருக்கிறேன்; ஆடுகளுக்காக என் ஜீவனையும் கொடுக்கிறேன்.” ( பரிசுத்த வேதாகமம், யோவான் 10:10‭-‬15)

இயேசுவே நல்ல மேய்ப்பர். அவர் உன்னை அறிந்திருக்கிறார், அன்பரே. நீ அவருடைய விலையேறப்பெற்ற ஆடாக இருக்கிறபடியால், அவர் உனக்காக தமது ஜீவனையே கொடுத்திருக்கிறார். உன்னை அளவிற்கு அதிகமாக நேசிக்கிறார்!

இயேசுவுக்கே துதி உண்டாவதாக: “நான் எரிக்கின் தினசரிப் பதிவுகளால் உற்சாகமடைகிறேன்! நான் பல பிரச்சனைகளை சந்திக்கிறேன், சில நேரங்களில் நான் யார் என்பதை மறந்து போகிறேன். பின்பு இந்த தினசரி பதிவின் மூலமாக நான் தனித்துவமானவள், நேசிக்கப்பட்டவள், அழைக்கப்பட்டவள் பாதுகாக்கப்பட்டவள் என்பதை உணருகிறேன். நன்றி எரிக்!” (லியா, ஊட்டி)

Eric Célérier
எழுத்தாளர்

Eric Célérier is a French pastor and author, and president of Jesus.net. He's recognized for his innovative use of cutting-edge technology to spread the Gospel and connect people worldwide with the Bible.