நீ தாழ்ச்சி அடைய மாட்டாய், அன்பரே.
“... நான் தாழ்ச்சியடையேன்.” (வேதாகமத்தில் சங்கீதம் 23:1ஐ பார்க்கவும்)
தன்னை அழிக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளோடு தன்னைத் தாக்குபவர்கள் நிமித்தம் தாவீது அநேக நேரங்களில் வேதனை அடைந்தான். தாவீதின் மாமனாராகிய சவுல் ராஜா, தாவீதைப் பல முறை கொல்லப் பார்த்தான். வீரமிக்க தாவீதைக் கண்டு சவுல் பொறாமை கொண்டான், அரச பதவி தாவீதுக்கு சென்றுவிடும் என பயந்தான். இதனால் தாவீது பல முறை பாலைவனங்களில் தண்ணீரின்றி உணவின்றி தனிமையாக ஓடி ஒளிய வேண்டியிருந்தது.
ஆனால் தாவீது, தன் மேய்ப்பரும் தேவனுமாகிய கர்த்தர் தன்னை தாழ்ச்சி அடைய விடமாட்டார் என்ற உறுதியான நம்பிக்கையில் கர்த்தரில் இளைப்பாறினான்.
வேதம் சொல்கிறது, “என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்.” (பிலிப்பியர் 4:19)
என் தேவன் உன் தேவைகள் யாவையும் சந்திப்பார்…
- அவருடைய ஐசுவரியத்தின்படி: ஐசுவரியம் என்ற வார்த்தைக்கு பவுல் உபயோகப்படுத்திய கிரேக்க பதமான “ப்ளோடஸ்” என்பதன் பொருள், மிகுதி அல்லது திரளான என்பதாகும்.
- மகிமையிலே: மகிமை என்னும் வார்த்தைக்கு அப்போஸ்தலனாகிய பவுல் “டோக்சா” என்ற கிரேக்க பதத்தைப் பயன்படுத்துகிறார். இதற்கு “மகிமை, பிரகாசம், மேன்மை, மிகவும் மகிமையான நிலை, உயர்ந்த நிலை” என்று அர்த்தமாகும்.
- கிறிஸ்து இயேசுவுக்குள்: வேதம் இப்படிச் சொல்கிறது, “சகல துரைத்தனங்களுக்கும் அதிகாரத்துக்கும் தலைவராயிருக்கிற அவருக்குள் நீங்கள் பரிபூரணமுள்ளவர்களாயிருக்கிறீர்கள்.” (வேதாகமத்தில் கொலோசெயர் 2:10ஐ பார்க்கவும்)
அன்பரே, உனது வாழ்விலும் நீ இப்படியே இருப்பாய் என்று விசுவாசித்து அறிக்கையிடுகிறேன்: நித்திய தேவன் உனது மேய்ப்பராயிருக்கிறபடியால் நீ தாழ்ச்சி அடைவதில்லை!
