அன்பரே, கர்த்தர் தமது இளைப்பாறுதலை உனக்குத் தருகிறார்.
“அவர் என்னைப் புல்லுள்ள இடங்களில் மேய்த்து...” (வேதாகமத்தில் சங்கீதம் 23:2ஐ பார்க்கவும்)
தேவன் இளைப்பாறினார் என்பது உனக்குத் தெரியுமா? ஆறு நாட்கள் பரபரப்பாக உலகத்தைப் படைத்த பின்பு ஏழாம் நாள் கர்த்தர் இளைப்பாறினார் (ஓய்வெடுத்தார்). மேலும் 10 கட்டளைகளில் ஒரு கட்டளையாக தமது மக்களை ஓய்வெடுக்குமாறு வலியுறுத்தினார்: அதுவே ஓய்வு நாள் எனப்படுகிறது.
இந்த வாராந்திர ஓய்வு, இயேசு இந்தப் பூமியில் கொண்டு வந்த பூரணமான நித்திய ஓய்வினைக் காட்சிப்படுத்துகிறது. இந்த இளைப்பாறுதல் என்பது நாம் செய்யும் வேலையினால் நமக்குக் கிடைத்தது அல்ல. இயேசுதான் இதற்கு அஸ்திபாரமாக இருக்கிறார். இங்கே குறிப்பிட்டுள்ள ஓய்வு, இயேசு கிறிஸ்துவில் மாத்திரமே கிடைக்கக் கூடியது! இயேசு சொன்னார், "வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.” (வேதாகமத்தில் மத்தேயு 11:28ஐ பார்க்கவும்)
அன்பரே, சோர்வடைந்து, மன பாரத்தினால் களைப்படைந்துவிட்டாய் என்பதுபோல் உணர்கிறாயா? இப்போதே இயேசுவிடம் வா. அவரே உன் மேய்ப்பர், அவர் உனக்கு இளைப்பாறுதலை தருவார். உடல் சார்ந்த ஓய்வு மாத்திரம் அல்ல, உன் உள்ளத்திலும், உணர்வுகளிலும், ஆவியிலும் தெய்வீக இளைப்பாறுதலைத் தருவார்.
இயேசுவால் வழிநடத்தப்பட உன்னை விட்டுக்கொடு - அவர் சாந்தமும் மனத்தாழ்மையுமானவர்.
அவர் உனக்கு போதிக்க விட்டுக்கொடு - அவர் சிறந்த போதகர்.
இந்த தெய்வீக இளைப்பாறுதலினால் உன் வாழ்வு முழுமையைக் கண்டடையும்! (வேதாகமத்தில் காண்க, மத்தேயு 11:29)
இயேசுவுக்கே துதி உண்டாவதாக: “உங்களது வார்த்தை எனக்கு உத்வேகம் அளிக்கிறது. நான் வேலை பார்க்கும் இடத்தில் தேநீர் இடைவேளையின்போது உங்களது செய்திகளை வாசிப்பேன். உற்சாகமளிக்கும் வார்த்தைகளை சொல்ல தேவன் உங்களைப் பயன்படுத்துகிறார் என்பதற்கு நான் சாட்சி. கடந்த சில மாதங்களாக, எனது வாழ்வில் பயங்கரமான ஆவிக்குரிய போராட்டம் இருந்துவந்தது, பிசாசு என்னையும் எனது குடும்பத்தையும் தாக்கினான். உங்களது வார்த்தைகள், யுத்தம் கர்த்தருடையது என்பதையும் நான் கலங்காமல் தேவ கரத்தில் இளைப்பாறலாம் என்பதையும் எனக்கு நினைவூட்டியது.நான் தனியாக இல்லை, என்னுடன் தேவன் இருக்கிறார் என்பதை நினைவுபடுத்தி என்னை ஊக்கப்படுத்தியதற்காக நன்றி. எனக்காகவும், என்னைப் போன்றவர்களுக்காகவும் ஜெபித்துக் கொள்ளுங்கள். ஆறுதலளிக்கும், அறிவுறுத்தும் உங்கள் வார்த்தைகளுக்காக தேவனை ஸ்தோத்தரிக்கிறேன்." (காவ்யா, சிவகாசி)
