வெளியீட்டு தேதி 8 மே 2024

அன்பரே, இயேசு உனக்கு ஆறுதலளிக்க விரும்புகிறார்!

வெளியீட்டு தேதி 8 மே 2024

“உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்.” (வேதாகமத்தில் சங்கீதம் 23:4ஐ பார்க்கவும்)

அவரது கோலிற்காக நன்றி சொல்கிறேன், அதைக் கொண்டு ஒரு மேய்ப்பர் தமது ஆட்டை மென்மையாக சரியான பாதைக்கு திருப்புகிறார். 

நான் எத்தனை முறை வழி தவறி இருக்கிறேன்? எத்தனை முறை விழுந்திருக்கிறேன்? எத்தனை முறை தவறிழைத்திருக்கிறேன் மற்றும் பாவம் செய்திருக்கிறேன்? 

ஆனாலும் தேவன், தமது தயவின் நிமித்தம், அன்பின் நிமித்தம், கிருபையின் நிமித்தம், தமது பாதைக்கு நேராக என்னைத் தமது கோலைக் கொண்டு திருப்பினார்…

அப்படியானால் தடி எதற்கு? அது பாதுகாக்கிறது, உறுதியளிக்கிறது. அது ஒருபோதும் ஆட்டை அடிக்கப் பயன்படுத்தப்படுவதில்லை: மாறாக வேட்டையாடும் மிருகங்களிடம் இருந்து ஆட்டைப் பாதுகாக்கப் பயன்படுத்தப்படுகிறது.

“உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான். விசுவாசத்தில் உறுதியாயிருந்து, அவனுக்கு எதிர்த்து நில்லுங்கள்.” (வேதாகமத்தில் 1 பேதுரு 5:8‭-‬9ஐ பார்க்கவும்)

“ஏனெனில் உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர்.” (வேதாகமத்தில் 1 யோவான் 4:4ஐப் பார்க்கவும்)

ஆறுதலடைவாயாக. இயேசு எப்போதும் உன்னைப் பாதுகாத்து வழி நடத்துவார். அவர் இப்பொழுதே அப்படி செய்கிறார்!

Eric Célérier
எழுத்தாளர்