• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FA Farsi
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • HY Armenian
    • ID Bahasa
    • IT Italian
    • MG Malagasy
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • RO Romanian
    • RU Russian
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UK Ukrainian
    • UR Urdu
வெளியீட்டு தேதி 10 மே 2024

அன்பரே, நீ ஆசீர்வாதமான பாத்திரம்!

வெளியீட்டு தேதி 10 மே 2024

“எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, என் தலையை எண்ணெயால் அபிஷேகம்பண்ணுகிறீர்; என் பாத்திரம் நிரம்பி வழிகிறது.” (பரிசுத்த வேதாகமத்தில் சங்கீதம் 23:5ஐ பார்க்கவும்)

அபிஷேகம் எனப்படும் எண்ணெய், ஆவியானவருக்கு அடையாளமாய் வேதத்தில் சொல்லப்படுகிறது. (பரிசுத்த வேதாகமத்தில் லூக்கா 4:18ஐ பார்க்கவும்)

ஆசாரியர்களும் ராஜாக்களும், அவர்கள் அழைக்கப்பட்ட அழைப்பையும் ஸ்தானத்தையும் உறுதிப்படுத்த அபிஷேகம் பண்ணப்பட்டனர். (உதாரணத்திற்கு, யாத்திராகமம் 29:7 மற்றும் 1 சாமுவேல் 16:13ஐ பார்க்கவும்) 

சாமுவேல் தீர்க்கதரிசி அபிஷேக தைலத்தை இளைஞனான தாவீதின் மேல் ஊற்றியபோது, கர்த்தருடைய ஆவியானவர் அவன் மேல் இறங்கினார் என்று  வேதம் சொல்கிறது. ஆவியானவருடைய பலத்தினாலே தாவீது கோலியாத்தை எதிர்த்தான், மேலும் இன்னும் அநேக காரியங்களை தேவனுக்காக செய்தான். இந்த சங்கீதம் 23ஐ எழுதியதைப் போலவே, ஆவியானவராலே அநேக சங்கீதங்களை எழுதினான்.

நீ பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டு இருக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார்! அப்படி நிரப்பப்படும்போது, உன்னுடைய வாழ்வு ஆசீர்வதிக்கப்படுவது மாத்திரமல்ல, உன் மூலமாக அநேகருடைய வாழ்வு தொடப்படும். நீ ஆசீர்வாதத்தின் பாத்திரமாய் இருப்பாய்!

Eric Célérier
எழுத்தாளர்