வெளியீட்டு தேதி 12 மே 2024

அன்பரே, நீ தேவனுடைய வீடு!

வெளியீட்டு தேதி 12 மே 2024

கடந்த சில நாட்களாக நாம் தியானித்த இந்த மகத்துவமான 23ம் சங்கீதத்தின் முடிவுக்கு வந்து விட்டோம். நீ வாசித்த தியான பகுதிகள் எவ்வளவாய் இயேசு உனது மேய்ப்பராயிருக்கிறார் என்பதை உன்னை உணர வைத்திருக்கும் என்று விசுவாசிக்கிறேன்! 

நீ இந்த தியானங்களையும் படங்களையும் மகிழ்ந்து அனுபவித்தாயா? 

தாவீது தனது சங்கீதத்தை இப்படியாக முடிக்கிறார், "நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாள்களாய் நிலைத்திருப்பேன்.” (பரிசுத்த வேதாகமத்தில் சங்கீதம் 23:6ஐ பார்க்கவும்) 

தாவீது தேவனுடைய வீட்டிலே இருப்பதை மிகவும் விரும்பினார். அவர் தேவ சமூகத்தில் இருப்பதை மிகவும் விரும்பினார். 

"ஆயிரம் நாளைப்பார்க்கிலும் உமது பிராகாரங்களில் செல்லும் ஒரே நாள் நல்லது; ஆகாமியக் கூடாரங்களில் வாசமாயிருப்பதைப் பார்க்கிலும் என் தேவனுடைய ஆலயத்தின் வாசற்படியில் காத்திருப்பதையே தெரிந்துகொள்ளுவேன்." (பரிசுத்த வேதாகமத்தில் சங்கீதம் 84:10ஐ பார்க்கவும்)

இந்த வசனத்தை எழுதிய தாவீதைப் பொறுத்தவரை, அது அவனது வாழ்வில் உண்மை அனுபவமாக இருந்தது.

இன்று, தேவ சமூகத்தை அனுபவிப்பதற்கு புனித ஸ்தலங்களுக்குச் செல்ல வேண்டியதில்லை. இயேசு சிலுவையிலே நமக்காக செய்த தியாகம், நாம் அவரது பிரசன்னத்தை எல்லா நேரங்களிலும் எல்லா இடங்களிலும் அனுபவிக்கச் செய்கிறது.

நீ தான் தேவனுடைய வீடு. உனது சரீரமே ஆவியானவர் தங்கும் தேவாலயம். தாவீதைப் போல நீயும் தேவ பிரசன்னத்தை போற்றிடு, உன் வாழ்வின் கடைசி நாள் வரை, நித்திய நித்தியமாக அதை பெரும் பாக்கியமாக கருது. ஏனெனில் உனக்காக பரலோகம் காத்திருக்கிறது…

Eric Célérier
எழுத்தாளர்