வெளியீட்டு தேதி 19 மே 2024

நீ ஒரு விசேஷித்த பாத்திரம்!

வெளியீட்டு தேதி 19 மே 2024

அருமை நண்பனே / தோழியே, அன்பரே!

நீ சரியான இடத்தில்தான் இருக்கிறாய்! குயவன் ஒரு விசேஷித்த பாத்திரத்தைத் தயாரிக்க ஒதுக்கி வைத்திருக்கும் களிமண் நீ.

நீ எத்தகைய செயல்பாட்டில் இருக்கிறாய் என்பது எனக்குத் தெரியாது. சிலர் களிமண் மென்மையாகவும், வளைந்து கொடுக்கக் கூடியதாகவும் மாறும்படி தண்ணீர் தெளிக்கப்படும் செயல்பாட்டில் உள்ளனர். மற்றவர்கள் (மரொம்பா/ வனையும் சக்கரம்), வனையப்படும் தளத்துக்குச் செல்ல சரியான பதத்திற்கு மண்ணைப் பிசையும் செயல்முறையில் உள்ளனர். இன்னும் சிலர் ஏற்கனவே சுழன்றுகொண்டிருக்கிறார்கள், ஆண்டவர் மட்டுமே அவர்கள் சுழலும் வேகத்தை அறிவார் (பல விஷயங்களைப் புரிந்துகொள்ளாமலேயே சுழன்றுகொண்டிருக்கிறார்கள்). சிலர் குவளைகளின் வடிவத்தைப் பெற்று எழுகிறார்கள். சிலரை ஆண்டவர் மறுபடியும் வனைகிறார். மற்றவர்கள் உலர்த்தப்படும் காலத்தில் உள்ளனர். சிலர் அடுப்பில், ஆனால் குறைந்த வெப்பநிலையின் ஊடே கடந்து செல்கின்றனர். மற்றவர்கள் அதிகபட்ச வெப்பநிலையில் சுடப்படுகின்றனர். சிலர் ஏற்கனவே இந்த செயல்முறையைக் கடந்து சென்று தயார் நிலையில் உள்ளனர்.

தயாராக இருக்கும் குவளையைத் தட்டும்போது, அது ஒரு தனித்துவமான ஒலியை வெளியிடுகிறது. நீ அப்படிப்பட்டவர்களை நம்பலாம். அவர்கள் நம்பகமானவர்கள் (அவர்கள் சொல்லக்கூடாததைச் சொல்ல மாட்டார்கள்). அவர்கள் ஆண்டவரின் பார்வையில் ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி, எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை நன்கு அறிந்தவர்களாய் இருப்பார்கள், தங்கள் அண்டை வீட்டாரால் நற்சாட்சி பெற்றவர்களாய் இருப்பார்கள்.

அன்பரே, அவர் உனக்காகத் திட்டமிட்டபடியே நீ வாழ, குயவர் உன் வாழ்வில் கிரியை செய்யட்டும்.

குயவன் களிமண்ணை வனைவதுபோல, நம்முடைய அன்பான, ராஜரீகமுள்ள தேவன் உன்னைத் தொடர்ந்து வடிவமைக்கிறார். அவருடைய திட்டங்களிலிருந்து நீ விலகிச் சென்றாலும் அவர் உன்னைக் கைவிடுவதில்லை. மாறாக, அவர் பொறுமையுடன் கிருபையினால் உன்னை மறுபடியும் வனைகிறார், ஏனென்றால் குயவனின் திட்டமே எப்போதும் மிகச்சரியானது.

"இஸ்ரவேல் குடும்பத்தாரே, இந்தக் குயவன் செய்ததுபோல நான் உங்களுக்குச் செய்யக்கூடாதோ என்று கர்த்தர் சொல்லுகிறார்." (எரேமியா 18:6)

Eric Célérier
எழுத்தாளர்