நாம் விசுவாசத்துடன் ஆண்டவரிடத்தில் கொடுப்பதை அவர் வாங்கி பெருகப்பண்ணுகிறார்.

எனக்கு பசிக்கவில்லை என்று மனைவி சொன்னாலும் இரண்டு மடங்கு உணவை கணவன் மனைவிக்கும் சேர்த்து ஆர்டர் செய்து வாங்குகிறான், அதுதான் கணவனின் கணக்கு. கேம்ரனுக்கு இதெல்லாம் நன்றாகவே தெரியும்! நாங்கள் புதுமணத் தம்பதிகளாக இருந்தபோது, ஹோட்டலுக்குச் செல்வோம், கேம்ரன் என்னிடம், “உனக்குப் பசிக்கிறதா?” என்று கேட்பார். நான் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் துரித உணவைத் தவிர்க்க முயற்சித்து, "எனக்குப் பசிக்கவில்லை" என்று சொல்லிவிடுவேன். ஆனால் அவர் கே.எஃப்.சி சிக்கன் துண்டுகளை எடுத்துக்கொண்டு வரும்போது, எனக்கு அதை சாப்பிட வேண்டும் என்று ஆசை வரும், நான் (ஒருசில துண்டுகளை மட்டும் 😇) ஒரு வாய் அதை எடுத்து சாப்பிடுவேன். அவர் சத்தம்போட்டு, “உனக்கு பசிக்கவில்லை என்று சொன்னாய். எனக்கு எத்தனை சிக்கன் துண்டுகள் வேண்டும் என்று எண்ணி அதற்கேற்ப அளவாக ஆர்டர் செய்தேன், ஆனால் இப்போது நீ என்னுடைய சாப்பாட்டில் பாதியை சாப்பிட்டுவிட்டாய்" என்று சொல்லுவார். இது வழக்கமான ஒரு நகைச்சுவையாகிவிட்டது - இப்போதெல்லாம் கேம்ரன் கூடுதலாக ஆர்டர் செய்துவிடுவார், இருந்தாலும் கூட, "நீங்கள் அளவாக வாங்கியிருக்கிறீர்களா அல்லது நானும் இதில் கொஞ்சம் எடுத்துக்கொள்ளலாமா?" என்று அவரிடம் கேட்பதை நான் வழக்கமாக்கிக்கொண்டேன். 😅 சாப்பாட்டு விஷயத்திலும் இயேசு சில சுவாரஸ்யமான கணக்குகளை வைத்திருந்தார். மத்தேயு 14:13-21ல் இயேசுவின் போதனைகளைக் கேட்பதற்காக தங்கள் வீடுகளிலிருந்து தொலை தூரத்தில் உள்ள ஒரு இடத்தில் திரளான மக்கள் கூடியிருந்தனர். வெகுநேரம் ஆனதும், மக்கள் பசியோடு இருந்தபோது, சீஷர்கள் இயேசுவிடம் வந்து இவ்வாறு கூறினர்: "சாயங்காலமானபோது, அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்து: இது வனாந்தரமான இடம், நேரமுமாயிற்று; ஜனங்கள் கிராமங்களுக்குப்போய்த் தங்களுக்கு போஜனபதார்த்தங்களைக்கொள்ளும்படி அவர்களை அனுப்பிவிடவேண்டும் என்றார்கள். இயேசு அவர்களை நோக்கி: அவர்கள் போகவேண்டுவதில்லை; நீங்களே அவர்களுக்குப் போஜனங்கொடுங்கள் என்றார். அதற்கு அவர்கள்: இங்கே எங்களிடத்தில் ஐந்து அப்பமும் இரண்டு மீன்களுமேயல்லாமல், வேறொன்றும் இல்லை என்றார்கள். அவைகளை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றார்." (மத்தேயு 14:15-18) ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும்... 5,000 புருஷர்கள் மட்டுமல்லாது ஸ்திரீகள் மற்றும் குழந்தைகளையும் போஷிப்பதா? இயேசுவே, அந்த கணிதம் கணக்கு அல்ல! 🤔 ஆனாலும், இயேசு ஸ்தோத்திரம்பண்ணி, அப்பங்களையும் மீன்களையும் பிட்டு, அனைவரையும் போஷித்தார். எல்லோரும் திருப்தியாகும்படி சாப்பிட்டது மட்டுமல்லாமல், பன்னிரண்டு கூடைகள் நிறைய, எஞ்சிய அப்பத்துண்டுகள் இருந்தன! (மத்தேயு 14:20) இந்த சம்பவம் உணவைப் பற்றியது மட்டுமல்ல - நமது ஆண்டவர் தம்மிடம் விசுவாசத்துடன் கொடுக்கப்பட்ட அனைத்தையும் எடுத்து, அதை நமது புரிந்துகொள்ளுதலுக்கு அப்பாற்பட்ட விதத்தில் பெருகச் செய்ய வல்லவர் என்பதை நினைவூட்டுகிறது! அன்பரே, இன்று நீங்கள் விசுவாசத்துடன் ஆண்டவருக்கு எதைக் கொடுக்க விரும்புகிறீர்கள்?

