ஆதிகாலமுதல் கிறிஸ்து இயேசுவுக்குள் நமக்கு அருளப்பட்ட கிருபை – 2 தீமோத்தேயு 1:9

உங்கள் தொலைபேசியில் பத்து நிமிடம் மட்டுமே திரையை தள்ளிக்கொண்டிருக்கும்போது நேரம் எப்படி பறந்து செல்கிறது என்பதை நீங்கள் எப்போதாவது கவனித்திருக்கிறீர்களா, அதேவேளையில் பத்து நிமிட மௌனமானது நம் வாழ்நாள் முழுவதுக்குமான நேரம் என்பது போல தோன்றுகிறதா? ஆண்டவருக்கு அந்தப் பிரச்சனை இல்லை; ஆண்டவரது கணக்கில், ஒரு நாள் ஆயிரம் வருஷம் போலவும், ஆயிரம் வருஷம் ஒரு நாள் போலவும் இருக்கிறது. 😵💫 "உமது பார்வைக்கு ஆயிரம் வருஷம் நேற்றுக்கழிந்த நாள்போலவும் இராச்சாமம்போலவும் இருக்கிறது." (சங்கீதம் 90:4) "பிரியமானவர்களே, கர்த்தருக்கு ஒருநாள் ஆயிரம் வருஷம்போலவும், ஆயிரம் வருஷம் ஒருநாள்போலவும் இருக்கிறதென்கிற இந்த ஒரு காரியத்தை நீங்கள் அறியாதிருக்கவேண்டாம்." (2 பேதுரு 3:8) மனிதர்களாகிய நாம், நமது அழிவுக்கேதுவான இந்த மனதால் ஆண்டவரைப் புரிந்துகொள்ள முயற்சிக்கிறோம். ஆனால் ஆண்டவரோ நம்மால் புரிந்துகொள்ள முடியாத அளவுக்குப் பெரியவரும், மகத்தானவரும், மிகவும் வல்லமை வாய்ந்தவருமாய் இருக்கிறார்! நேரம் குறித்து அவர் சொல்லியிருக்கிற கருத்து அதற்கு ஒரு மிகச்சிறந்த உதாரணம். ஆயிரம் வருடங்கள் ஒரு நாள் போலவும், அதற்கு எதிர்மாறானதாகவும் எப்படி இருக்க முடியும்? நமது மனித அறிவை மட்டுமே கொண்டு இதைப் புரிந்துகொள்ள முடியாது. நேரம் உட்பட - ஆண்டவர் எல்லாவற்றிற்கும் மேலானவராக நிற்கிறார். அவர்தாமே அதைக் கண்டுபிடித்தார்! கர்த்தரால் சிருஷ்டிக்கப்பட்ட பூமி, சூரியன், சந்திரன் இவையனைத்தின் இயக்கங்களின் அடிப்படையில்தான் நமது காலமும், நாட்காட்டியும் அமைகின்றன! இன்னும் நம் மனதைக் கவரும் விஷயம் என்னவென்றால் 🤯, ஆதி காலம் முதலே அவர் நம்மை மனதில் வைத்திருந்தார் என்பதுதான். “அவர் நம்முடைய கிரியைகளின்படி நம்மை இரட்சிக்காமல், தம்முடைய தீர்மானத்தின்படியும், ஆதிகாலமுதல் கிறிஸ்து இயேசுவுக்குள் நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியும், நம்மை இரட்சித்து, பரிசுத்த அழைப்பினாலே அழைத்தார்." (2 தீமோத்தேயு 1:9) அன்பரே, இன்றே சிறிது நேரம் ஒதுக்கி ஆண்டவருடைய அளவிட முடியாத மகத்துவத்தை எண்ணி அவரைத் துதிக்கும்படி, "என் இயலாமையில் நீர் செயல்படுவீர், உம் கரம் என்னை விடாதிருக்கும்" என்ற இந்தப் பாடலை நாம் பாடி ஆராதிப்போம்.

