உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன். – யோவான் 16: 33

கேம்ரன் எங்கள் உறவினரான ஒரு சிறுவனோடு தமாஷாக-சண்டையிட்டு விளையாடும்போது, அடிக்கடி விளையாட்டாக அவனிடம், "உனக்கு அடி வேண்டுமா?" என்று கேட்பார். ஆச்சரியம் இல்லாத வகையில், அவனோ, “ஆம்! அதை இரண்டு அடியாக கொடுத்துவிடுங்கள்" என்று ஒருபோதும் சொல்லமாட்டான். 🤣 மத்தேயு 5ல், உங்களை ஆச்சரியப்படுத்தும் ஒரு காரியத்தை இயேசு கூறுகிறார்: “நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம்; ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக்கொடு.” (மத்தேயு 5:39-41) யாராவது நம்மை அறைந்தால், மீண்டும் அறைய அவர்களை அழைக்க வேண்டும் என்று இயேசு உண்மையிலேயே பரிந்துரைக்கிறாரா? மேலோட்டமாகப் பார்த்தால், அநீதியை அப்படியே ஏற்றுக்கொள்ளும்படி அவர் நம்மிடம் கூறுவதுபோல் தெரிகிறது. இந்த வசனத்தின் உண்மையான அர்த்தத்தை அதன் கலாச்சார சூழலுக்கு வெளியே நின்று புரிந்துகொள்ள முடியாது. அடிமைகளை இழிவுபடுத்தும்படி அவர்களது எஜமானர்கள் அவர்களைத் தங்கள் புறங்கைகொண்டு அறைவதைப் பற்றி இயேசு இங்கே குறிப்பிடுகிறார்; அந்நாட்களில், அது மிகப்பெரிய அவமதிப்பாகக் கருதப்பட்டது. மற்றொரு கன்னத்தைத் திருப்பிக் காட்டினால், ஒடுக்குபவர் அடுத்த அடியை திறந்த கையால் நேரடியாக அடிக்க வேண்டும், இப்படி நேரடியாக அறையும் செயலானது தனக்கு நிகரானவர்களை அடிக்க பயன்படுத்தும் பழக்கமாக இருந்தது, தன்னைவிட தாழ்ந்தவர்களை அப்படி அடிக்க மாட்டார்கள். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், மறு கன்னத்தைத் திருப்பிக் காட்டுவது என்பது அவமானத்தை ஏற்றுக்கொள்வதாகக் கருதப்படாது - இது ஒரு முழுமையான எதிர்ப்பின் செயலாக கருதப்படும்; அதாவது, "நான் உனது அடிக்கு பயப்படவில்லை. என் மீது உனக்கு அதிகாரம் இல்லை. நீ என்னை அவமதிக்க முடியாது, ஏனென்றால் எனது மரியாதை மனித அங்கீகாரத்தை சார்ந்தது அல்ல" என்று எதிர்த்து பேசுவதைப் போன்றதாகும். "தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம்" என்று இயேசு சொன்னபோது, நீங்கள் ஒன்றும் செய்ய வேண்டாம் என்று அவர் சொல்லவில்லை. மாறாக, அவர் வன்முறையற்ற பதிலடிக்கான தீவிர முறையை வெளிப்படுத்தினார் - அதாவது வன்முறையை நாடாமல் அநீதியை எதிர்க்கும் ஒரு வழியைக் காட்டினார். அன்பரே, நீங்கள் சமீபகாலமாக "அறையப்பட்டது போன்ற ஒரு சூழலில் இருப்பதாக" உணர்கிறீர்களா? நீங்கள் யாரோ ஒரு நபரால் அவமானப்படுத்தப்படுகிறீர்களா, புண்படுத்தப்படுகிறீர்களா அல்லது இழிவுபடுத்தப்படுகிறீர்களா? உங்களது குறிப்பிட்ட அந்த சூழ்நிலையில், "அடுத்த கன்னத்தைத் திருப்பிக் கொடுப்பது" எப்படி என்பதை வெளிப்படுத்திக் காண்பிக்கும்படி பரிசுத்த ஆவியானவரிடம் கேளுங்கள். இயேசு சொன்னதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்: “என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும்பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன்." (யோவான் 16:33)

