• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FA Farsi
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • HY Armenian
    • ID Bahasa
    • IT Italian
    • JA Japanese
    • KO Korean
    • MG Malagasy
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • RO Romanian
    • RU Russian
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UK Ukrainian
    • UR Urdu
வெளியீட்டு தேதி 1 ஏப்ரல் 2025

கர்த்தாவே, உம்முடைய வழிகளை எனக்குத் தெரிவியும்; உம்முடைய பாதைகளை எனக்குப் போதித்தருளும். – சங்கீதம் 25:4

வெளியீட்டு தேதி 1 ஏப்ரல் 2025

25-ம் சங்கீதத்தின் மீதமுள்ள பகுதியை வாசித்துப் பார்த்தீர்களா? இது எனக்கு மட்டும்தானா, அல்லது நீங்களும் இந்த சங்கீதம், 2025 ஆம் ஆண்டிற்கான மையக் கருப்பொருளாக இருப்பதுபோல் உணர்கிறீர்களா? உங்கள் சிந்தனைகளைக் கேட்க நான் ஆவலாக இருக்கிறேன். இன்று 3–5 வரையுள்ள வசனங்களை நாம் ஆழமாக ஆராய்ந்து பார்ப்போம் : "உம்மை நோக்கிக் காத்திருக்கிற ஒருவரும் வெட்கப்பட்டுப் போகாதபடிச் செய்யும்;முகாந்தரமில்லாமல் துரோகம் பண்ணுகிறவர்களே வெட்கப்பட்டுப்போவார்களாக.கர்த்தாவே, உம்முடைய வழிகளை எனக்குத் தெரிவியும்; உம்முடைய பாதைகளை எனக்குப் போதித்தருளும்.உம்முடைய சத்தியத்திலே என்னை நடத்தி, என்னைப் போதித்தருளும்;நீரே என் இரட்சிப்பின் தேவன், உம்மை நோக்கி நாள்முழுதும் காத்திருக்கிறேன்." 3-ம் வசனத்தில் உள்ள 'காத்திரு' என்ற வார்த்தை முக்கியமாக நேரத்தைக் குறிக்கவில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா? இது 'குவாவா' என்ற எபிரேய வார்த்தையிலிருந்து எடுக்கப்பட்டது, அதாவது ஒன்றாக இணைத்தல் அல்லது பின்னிப் பிணைத்தல் என்பது இதன் அர்த்தமாகும். இந்த வெளிப்பாடு வசனத்தை நமக்கு மிகவும் நெருக்கமான ஒன்றாக மாற்றுகிறது: "உண்மையில், ஆண்டவருடன் தங்களை இணைத்துக்கொள்பவர்கள் அல்லது அவருடன் தங்களைப் பிணைத்துக்கொள்பவர்கள் ஒருபோதும் வெட்கப்பட மாட்டார்கள்." இது மிகவும் ஆச்சரியமானது, இல்லையா? 'குவாவா' என்ற அதே வார்த்தை வேதாகமத்தில் உள்ள புத்தகங்களின் பல பகுதிகளில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதில் எனக்கு மிகவும் பிடித்த ஒரு வசனம் ஏசாயா 40:31"கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்."  பிணைக்கப்படுவது என்பது ஒரு "விரைவான ஒட்டுதல்" அல்ல, மாறாக, அது ஒரு நீண்டகால செயலாகும். ஒரு மரத்தின் வேர்களைக் கற்பனை செய்து பாருங்கள்; அவை மண்ணுக்கு அடியில் பரந்து விரிந்து அகலமாகவும் ஆழமாகவும் செல்லும்போது, இன்னும் இறுக்கமாக ஒன்றுடன் ஒன்று பிணைக்கப்படுகின்றன. நீங்கள் மரத்தை வேரோடு பிடுங்கினாலும், அதன் வேர்களின் சிக்கலை அவிழ்க்க முடியாது. பிணைக்கப்படுதல் என்பது நெருக்கத்தையும் அருகாமையையும் சுட்டிக்காட்டுகிறது. இதற்கு அடுத்த வசனத்துடன் இது ஒத்துப்போகிறது: "கர்த்தாவே, உம்முடைய வழிகளை எனக்குத் தெரிவியும்; உம்முடைய பாதைகளை எனக்குப் போதித்தருளும்." (சங்கீதம் 25:4)  எவ்வளவு அதிகமாக ஆண்டவர் நமக்குக் கற்பிக்கும்படி அவருக்கு இடமளிக்கிறோமோ, அவ்வளவு அதிகமாக நாம் அவருடன் பிணைக்கப்படுகிறோம்.

இப்படிப் பிணைக்கப்பட வேண்டுமானால், கற்றுக்கொள்வதற்கும், வழிநடத்தப்படுவதற்கும், எல்லாவற்றிற்கும் மேலாக ஆண்டவருடைய வழிகாட்டுதலை விசுவாசிப்பதற்கும் ஆவலாய் உள்ள ஒரு தாழ்மையான இதயம் தேவை. தனது சொந்தத் திட்டங்கள் ஆசீர்வதிக்கப்பட வேண்டும் என்று தாவீது கேட்கவில்லை, மாறாக ஆண்டவருடைய வழிகளையும், ஆண்டவருடைய சத்தியத்தையும், ஆண்டவருடைய ஞானத்தையுமே அவர் நாடுகிறார் என்பதைக் கவனியுங்கள். அன்பரே, ஆண்டவர் உங்களை அவருடைய பாதைகளில் வழிநடத்துகையில், நீங்கள் அவருடன் பிணைக்கப்பட ஆவலாய் இருக்கிறீர்களா? இந்த வாரம் ஒவ்வொரு நாளும் உங்களுக்காகவும் உங்கள் குடும்பத்தினருக்காகவும் 25 ஆம் சங்கீதத்தை வாசித்து ஜெபிக்கும்படி நான் உங்களை ஊக்குவிக்கிறேன். நான் செய்வது என்னவென்றால், இறுதி வசனத்தில் எங்கள் குடும்பத்தின் பெயரைச் சேர்த்து, "தேவனே, மென்டஸ் குடும்பத்தை அவர்களுடைய எல்லா இக்கட்டுகளுக்கும் நீங்கலாக்கி மீட்டுவிடும்" என்று ஜெபிக்கிறேன். நீங்களும் அப்படியே ஜெபிக்கலாம். நானும் உங்களுடன் சேர்ந்து அந்த ஜெபத்தை ஏறெடுக்கிறேன்: “தேவனே, அன்பரே ஆகிய இவரை எல்லா இக்கட்டுகளுக்கும் நீங்கலாக்கி மீட்டுவிடும்.”

Cameron Mendes
எழுத்தாளர்

Worship artist, singer-songwriter, dreamer and passionate about spreading the Gospel.