• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FA Farsi
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • HY Armenian
    • ID Bahasa
    • IT Italian
    • JA Japanese
    • KO Korean
    • MG Malagasy
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • RO Romanian
    • RU Russian
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UK Ukrainian
    • UR Urdu
வெளியீட்டு தேதி 2 ஏப்ரல் 2025

உம்முடைய தயவினிமித்தம் என்னை நினைத்தருளும் – சங்கீதம் 25:7

வெளியீட்டு தேதி 2 ஏப்ரல் 2025

சில நாட்களுக்கு முன்பு நான் பகிர்ந்துகொண்டதுபோல, 25 ஆம் சங்கீதமானது 2025 ஆம் ஆண்டிற்காக ஆண்டவர் என் இதயத்தில் வைத்த வார்த்தையாகும். "இந்த ஆண்டின் தொடக்கத்தில் இதை நீங்கள் ஏன் பகிர்ந்துகொள்ளவில்லை?" என்று நீங்கள் யோசிக்கலாம். இது ஒரு சரியான கேள்வி, யாராவது ஒருவர் எனக்கு இதை நினைவூட்டியிருந்தால், நான் இதை முன்பே பகிர்ந்துகொண்டிருப்பேன் என்பதைத் தவிர, வேறு ஒரு வலுவான பதில் என்னிடம் இல்லை. ஆண்டவரைத் தவிர, நமக்கெல்லாம் சில சமயங்களில் நினைவூட்டல்கள் தேவைப்படுகிறது... இல்லையா? அதாவது, பிரபஞ்சத்தை சிருஷ்டித்தவருக்கு ஏன் ஒரு மனிதனிடமிருந்து நினைவூட்டல் தேவை? 🤔 ஆனாலும், 25 ஆம் சங்கீதத்தின் இன்றைய பகுதியில் ஆண்டவருக்கு நினைவூட்டல்கள் அவசியம் என்று தாவீது நினைக்கிறார்: "கர்த்தாவே, உம்முடைய இரக்கங்களையும் உம்முடைய காருணியங்களையும் நினைத்தருளும், அவைகள் அநாதி காலமுதல் இருக்கிறதே. என் இளவயதின் பாவங்களையும் என் மீறுதல்களையும் நினையாதிரும்; கர்த்தாவே, உம்முடைய தயவினிமித்தம் என்னை உமது கிருபையின்படியே நினைத்தருளும்."  (சங்கீதம் 25:6-7)  உண்மையில், தாவீது ஆண்டவர் மறந்துவிட்ட விஷயங்களை அவருக்கு நினைவூட்டவில்லை; அவர் ஆண்டவரிடத்தில் இரக்கத்திற்காக மன்றாடுகிறார். நீங்களும் தாவீதைப்போல இருப்பீர்களானால், நீங்கள் தவிர்க்க விரும்பும் தீர்மானங்கள் அல்லது நீங்கள் சரியானதைச் செய்யாமல் விலகிச் சென்ற தருணங்கள் - என வருத்தங்களின் பாரத்தை ஒருவேளை நீங்கள் சுமந்துகொண்டிருக்கலாம். தாவீது ஆண்டவரிடத்தில் தனது தவறுகளின் கோணத்தில் அல்ல, ஆண்டவருடைய தயவு மற்றும் கிருபை ஆகியவற்றின் வெளிச்சத்தில் தன்னைப் பார்க்கும்படி கேட்கிறார். தகுதியின் அடிப்படையில் அல்ல, மாறாக இரக்கத்தின் அடிப்படையில் நினைவுகூரப்பட வேண்டும் என்று அவர் கேட்டார். ஆண்டவர் நம் கடந்த கால தவறுகளை வைத்து நம்மை வரையறுப்பதில்லை என்ற நம்பிக்கையை தாவீதின் ஜெபம் நமக்கு அளிக்கிறது. அதற்குப் பதிலாக, நம்மைப் பற்றி அவர் கொண்டிருக்கிற நினைவு அவரது மாறாத அன்பால் வடிவமைக்கப்படுகிறது. நாம் மனத்தாழ்மையுடன் நமது நொறுங்கிய உள்ளத்துடன் அவரை அணுகும்போது, மன்னிப்பு, வழிகாட்டுதல் மற்றும் எல்லையற்ற கிருபையுடன் அவர் நம்மைச் சந்திக்கிறார். அன்பரே, இந்த வாரம் ஒவ்வொரு நாளும் உங்களுக்காகவும் உங்கள் குடும்பத்தினருக்காகவும் 25 ஆம் சங்கீதத்தை வாசித்து ஜெபிக்கும்படி நான் உங்களை ஊக்குவிக்கிறேன். நான் செய்வது என்னவென்றால், இறுதி வசனத்தில் எங்கள் குடும்பத்தின் பெயரைச் சேர்த்து, "தேவனே, மென்டஸ் குடும்பத்தை எல்லா இக்கட்டுகளுக்கும் நீங்கலாக்கி மீட்டுவிடும்" என்று ஜெபிக்கிறேன். நீங்களும் அப்படியே ஜெபிக்கலாம். நானும் உங்களுடன் சேர்ந்து அந்த ஜெபத்தை ஏறெடுக்கிறேன்: “தேவனே, அன்பரே ஆகிய இவரை எல்லா இக்கட்டுகளுக்கும் நீங்கலாக்கி மீட்டுவிடும்.”

Cameron Mendes
எழுத்தாளர்

Worship artist, singer-songwriter, dreamer and passionate about spreading the Gospel.