• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FA Farsi
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • HY Armenian
    • ID Bahasa
    • IT Italian
    • JA Japanese
    • KO Korean
    • MG Malagasy
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • RO Romanian
    • RU Russian
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UK Ukrainian
    • UR Urdu
வெளியீட்டு தேதி 3 ஏப்ரல் 2025

கர்த்தருடைய பாதைகளெல்லாம் கிருபையும் சத்தியமுமானவைகள் – சங்கீதம் 25:10

வெளியீட்டு தேதி 3 ஏப்ரல் 2025

உங்களுக்கு சாலையில் பயணங்கள் செய்வது பிடிக்குமா? எனக்கும்  ஜெனிக்கும் அது மிகவும் பிடிக்கும், மும்பையிலிருந்து கோவா வரையிலான சாலைப் பயணம் எங்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. புதிய இடங்களுக்குச் செல்வதும், வழியில் உள்ளூர் உணவு பண்டங்களை வாங்கி ருசி பார்ப்பதும் எங்களுக்கு மிகவும் பிடிக்கும். சென்றடையும் இடத்தில் செலவிடும் நேரத்தைப் போலவே, அந்தப் பயணமும் வேடிக்கையாக இருக்கும், ஒரேயொரு எரிச்சல் உண்டாக்கும் நிலைமையைத் தவிர, பயணம் சிறப்பாக இருக்கும்: அதென்னவென்றால், சில பகுதிகளில் மோசமான சாலை நிலைமைகள் காணப்படுவதுதான். சாலையில் உள்ள குழிகள் மற்றும் விரிசல்கள் காரை சேதப்படுத்தி, பயணத்தை சற்று அசௌகரியமானதாக மாற்றுகின்றன. பிரத்தியேகமாக உள்ள சீரான சாலைகளைக் கொண்ட ஒரு வழியை எங்களால் கண்டுபிடிக்க முடிந்தால், அது ஒரு கனவு நனவானதுபோல் இருக்கும்! நமது "வாழ்க்கை பயணத்திற்கும்" இது பொருந்தும்; நமது பயணங்கள் சீரற்றதாகவோ, நிச்சயமற்றதாகவோ அல்லது கரடுமுரடானதாகவோ இருப்பதைப்போல நாம் உணரலாம். நாம் முன்னோக்கிப் பார்த்து நேரான பாதைகளை மட்டுமே தேர்வு செய்ய முடிந்தால் நன்றாக இருக்கும் அல்லவா? துரதிர்ஷ்டவசமாக, சாலைகள் சீராகவும், தங்கத்தால் செதுக்கப்பட்டதாகவும் இருக்கும் இடமாகிய - பரலோகத்தை நாம் அடையும்வரை,  (வெளிப்படுத்தின விசேஷம் 21:21)  பூமியில், நாம் குண்டும் குழியுமான சாலைகளில் பயணிக்க வேண்டியிருக்கும் (யோவான் 16:33)  அன்பரே, ஆண்டவருடைய பாதைகள் எல்லா நேரங்களிலும் சீரானதாக நமக்குத் தோன்றாவிட்டாலும், அவை கிருபை மற்றும் சத்தியத்தால் நிறைந்தவை என்று தாவீது நமக்குக் கற்பிக்கிறார். “கர்த்தர் நல்லவரும் உத்தமருமாயிருக்கிறார்; ஆகையால் பாவிகளுக்கு வழியைத் தெரிவிக்கிறார். சாந்தகுணமுள்ளவர்களை நியாயத்திலே நடத்தி, சாந்தகுணமுள்ளவர்களுக்குத் தமது வழியைப் போதிக்கிறார். கர்த்தருடைய உடன்படிக்கையையும் அவருடைய சாட்சிகளையும் கைக்கொள்ளுகிறவர்களுக்கு, அவருடைய பாதைகளெல்லாம் கிருபையும் சத்தியமுமானவைகள். கர்த்தாவே, என் அக்கிரமம் பெரிது; உம்முடைய நாமத்தினிமித்தம் அதை மன்னித்தருளும். கர்த்தருக்குப் பயப்படுகிற மனுஷன் எவனோ அவனுக்குத் தாம் தெரிந்துகொள்ளும் வழியைப் போதிப்பார். அவன் ஆத்துமா நன்மையில் தங்கும்; அவன் சந்ததி பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளும். கர்த்தருடைய இரகசியம் அவருக்குப் பயந்தவர்களிடத்தில் இருக்கிறது; அவர்களுக்குத் தம்முடைய உடன்படிக்கையைத் தெரியப்படுத்துவார்.” (சங்கீதம் 25:8-14)  விசுவாச பயணத்தை தேவனோடு கூட மேற்கொள்வதும், அவருடைய வழிகாட்டுதலை விசுவாசிப்பதும் நமது வழிகளெல்லாம் சமன் செய்யப்பட்டுள்ளது என்பதற்கான நிச்சயம் அல்ல, ஆனால் நீங்கள் தவிர்க்க முடியாமல் எதிர்கொள்ளும் தடைகளை மாற்றி பாதையை செவ்வையாக்க, ஆண்டவர் தமது கிருபையுடனும் சத்தியத்துடனும் உங்களைச் சந்திப்பார் என்ற நம்பிக்கையில் நீங்கள் உறுதியாக இருக்கலாம் (ஏசாயா 45:2). அன்பரே, உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எதிர்கொள்ளும் தடைகள் என்ன? உங்கள் பயணத்தில் அவருடைய கிருபையையும் சத்தியத்தையும் உங்களுக்குக் காட்டும்படி ஆண்டவரிடத்தில் கேளுங்கள். அன்பரே, இந்த வாரம் ஒவ்வொரு நாளும் உங்களுக்காகவும் உங்கள் குடும்பத்தினருக்காகவும் 25 ஆம் சங்கீதத்தை வாசித்து ஜெபிக்கும்படி நான் உங்களை ஊக்குவிக்கிறேன். நான் செய்வது என்னவென்றால், இறுதி வசனத்தில் எங்கள் குடும்பத்தின் பெயரைச் சேர்த்து, "தேவனே, மென்டஸ் குடும்பத்தை எல்லா இக்கட்டுகளுக்கும் நீங்கலாக்கி மீட்டுவிடும்" என்று ஜெபிக்கிறேன். நீங்களும் அப்படியே ஜெபிக்கலாம். நானும் உங்களுடன் சேர்ந்து அந்த ஜெபத்தை ஏறெடுக்கிறேன்: “தேவனே, அன்பரே ஆகிய இவரை எல்லா இக்கட்டுகளுக்கும் நீங்கலாக்கி மீட்டுவிடும்.”

Cameron Mendes
எழுத்தாளர்

Worship artist, singer-songwriter, dreamer and passionate about spreading the Gospel.