• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FA Farsi
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • HY Armenian
    • ID Bahasa
    • IT Italian
    • JA Japanese
    • KO Korean
    • MG Malagasy
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • RO Romanian
    • RU Russian
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UK Ukrainian
    • UR Urdu
வெளியீட்டு தேதி 4 ஏப்ரல் 2025

என் கண்கள் எப்போதும் கர்த்தரை நோக்கிக்கொண்டிருக்கிறது. - சங்கீதம் 25:15

வெளியீட்டு தேதி 4 ஏப்ரல் 2025

தொலைபேசிகளில் மூழ்கி இருப்பதால், தாங்கள் எங்கு செல்கிறோம் என்பதைக் கவனிக்க மறந்துவிடும் மக்கள், கதவுகள் அல்லது அறிவிப்புப் பலகைகளை முட்டும் அளவுக்கு நடந்து செல்லும் வீடியோக்களை நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா?நீங்கள் எதைப் பார்க்கிறீர்கள் அல்லது எதை கவனிக்கத் தவறுகிறீர்கள் என்பதே நீங்கள் எங்கு செல்கிறீர்கள் அல்லது எதை எதிர்கொள்கிறீர்கள் என்பதைத் தீர்மானிக்கிறது.இது ஒரு உருவகமாக சொல்லப்பட்டாலும் உண்மையாக இருக்கிறது. உங்கள் சூழ்நிலைகள், உங்கள் வாழ்க்கையில் உள்ள சவால்கள் மற்றும் பாதையில் உள்ள தடைகளைப் பார்க்கும்போது,​ சில சமயங்களில் உங்களைச் சுற்றியுள்ள ஆண்டவருடைய கிருபையைக் காணத் தவறலாம். தாவீது இந்தப் பிரச்சனைக்கு ஒரு தீர்வைக் கண்டுபிடித்தார்:“என் கண்கள் எப்போதும் கர்த்தரை நோக்கிக்கொண்டிருக்கிறது; அவரே என் கால்களை வலைக்கு நீங்கலாக்கிவிடுவார். என்மேல் நோக்கமாகி, எனக்கு இரங்கும்; நான் தனித்தவனும் சிறுமைப்படுகிறவனுமாயிருக்கிறேன். என் இருதயத்தின் வியாகுலங்கள் பெருகியிருக்கிறது; என் இடுக்கண்களுக்கு என்னை நீங்கலாக்கிவிடும். என் துன்பத்தையும் என் வருத்தத்தையும் பார்த்து, என் பாவங்களையெல்லாம் மன்னித்தருளும். என் சத்துருக்களைப் பாரும்; அவர்கள் பெருகியிருந்து, உக்கிரபகையாய் என்னைப் பகைக்கிறார்கள்.”  (சங்கீதம் 25:15-19)தாவீது தன்னைச் சுற்றியுள்ள அனைத்துப் பிரச்சனைகளையும் நன்கு அறிந்தவராய் இருந்தார், மேலும் அவரது சவால்கள் உண்மையானவை:

  • அவரது கால்களுக்குப் பொறியாக ஒரு வலை
  • தனிமை மற்றும் துன்பம்
  • இதயத்தின் தொந்தரவுகள்
  • துன்பங்கள், துயரங்கள் மற்றும் தொந்தரவுகள்
  • பாவங்கள்
  • கொடூரமாக வெறுக்கும் எதிரிகள்

இவை தாவீது எதிர்கொண்ட சில கடுமையான பிரச்சனைகளாக இருந்தன. இருப்பினும், விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம் என்று எபிரெயர் 12:1ல் பவுல் போதித்தது போலவே, அவரது போராட்டங்களுக்கு மத்தியில், அவர் தனது கண்களை தொடர்ந்து கர்த்தர் மீதே வைத்திருக்கத் தேர்வு செய்கிறார்.அன்பரே, தாவீதைப் போல, உங்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்தாமல் ஆண்டவர் மீது உங்கள் கண்களை வைத்து, ஆண்டவருடைய அளவிட முடியாத மகத்துவம், அவரது எல்லையற்ற இரக்கம் மற்றும் நம் மீது அவர் வைத்திருக்கும் நிலையான அன்பு ஆகியவற்றுடன் அதை ஒப்பிடும்போது, உங்கள் பிரச்சனைகள் மிகவும் சிறியவை என்பதை நீங்கள் உணர்வீர்கள்.

அன்பரே, இந்த வாரம் ஒவ்வொரு நாளும் உங்களுக்காகவும் உங்கள் குடும்பத்தினருக்காகவும் 25 ஆம் சங்கீதத்தை வாசித்து ஜெபிக்கும்படி நான் உங்களை ஊக்குவிக்கிறேன். நான் செய்வது என்னவென்றால், இறுதி வசனத்தில் எங்கள் குடும்பத்தின் பெயரைச் சேர்த்து, "தேவனே, மென்டஸ் குடும்பத்தை எல்லா இக்கட்டுகளுக்கும் நீங்கலாக்கி மீட்டுவிடும்" என்று ஜெபிக்கிறேன். நீங்களும் அப்படியே ஜெபிக்கலாம். நானும் உங்களுடன் சேர்ந்து அந்த ஜெபத்தை ஏறெடுக்கிறேன்: “தேவனே, அன்பரே ஆகிய இவரை எல்லா இக்கட்டுகளுக்கும் நீங்கலாக்கி மீட்டுவிடும்.”

Cameron Mendes
எழுத்தாளர்

Worship artist, singer-songwriter, dreamer and passionate about spreading the Gospel.