• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FA Farsi
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • HY Armenian
    • ID Bahasa
    • IT Italian
    • JA Japanese
    • KO Korean
    • MG Malagasy
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • RO Romanian
    • RU Russian
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UK Ukrainian
    • UR Urdu
வெளியீட்டு தேதி 5 ஏப்ரல் 2025

நான் வெட்கப்பட்டுப்போகாதபடிச் செய்யும் – சங்கீதம் 25:20

வெளியீட்டு தேதி 5 ஏப்ரல் 2025

2025 ஆம் ஆண்டிற்கான வார்த்தையாக, எனக்காகவும் என் குடும்பத்திற்காகவும் ஆண்டவர் என் இருதயத்தில் வைத்த 25 ஆம் சங்கீதம் குறித்த நமது தொடரின் இறுதி தியானத்துக்கு நாம் நெருங்கி வந்துவிட்டோம். இன்று, சங்கீதம் 25:20-21 ஆகிய வசனங்களை நாம் கவனிக்கப்போகிறோம்: "என் ஆத்துமாவைக் காப்பாற்றி என்னை விடுவியும்; நான் வெட்கப்பட்டுப்போகாதபடிச் செய்யும்; உம்மை நம்பியிருக்கிறேன். உத்தமமும் நேர்மையும் என்னைக் காக்கக்கடவது; நான் உமக்குக் காத்திருக்கிறேன்." (சங்கீதம் 25:20-21)  தாவீது ஜெபிப்பதையும், மனந்திரும்புவதையும், ஆராதிப்பதையும், தன் இருதயத்தை ஊற்றுவதையும் 25 ஆம் சங்கீதம் முழுவதிலும் நாம் பார்க்கலாம். இப்போது, ​சங்கீதம் முடிவுக்கு வரும் இந்த கடைசி வசனங்களில், ​தாவீது கர்த்தர் மீது தனது நம்பிக்கையை வைக்கிறார். ஆண்டவர் மட்டுமே உண்மையான அடைக்கலத்தையும் பாதுகாப்பையும் தருகிறார் என்பதை அவர் தெரிந்துவைத்திருக்கிறார். நம்பிக்கை வல்லமைவாய்ந்தது, அது ஒரு மதிப்புமிக்க சொத்து. இது வேதாகமத்தில் பலன் அளிக்கப்படத் தகுதியான அல்லது ஆசீர்வாதத்தைப் பெற பாத்திரமான ஒன்றாகக் குறிப்பிடப்பட்டுள்ளது: "பரிசுத்த ஆவியின் பலத்தினாலே உங்களுக்கு நம்பிக்கை பெருகும்படிக்கு, நம்பிக்கையின் தேவன் விசுவாசத்தினால் உண்டாகும் எல்லாவித சந்தோஷத்தினாலும் சமாதானத்தினாலும் உங்களை நிரப்புவாராக.." (ரோமர் 15:13) நம்பிக்கை இல்லாமல், வாழ்க்கை அதன் அர்த்தத்தை இழக்கிறது. நம்பிக்கை இல்லாதவர்களை வேதாகமம் "நித்திரையடைந்தவர்கள்" மற்றும் "துக்கிக்கிறவர்கள்" என்று விவரிக்கிறது (1 தெசலோனிக்கேயர் 4:13). எங்கள் மகனின் வியாதி மற்றும் குறைபாடுகளுடனான பயணத்தில் நானும் ஜெனியும் பயணிக்கும்போது, ஆண்டவரை அறியாத மக்கள், இதேபோன்ற துன்பங்களில் வாழும்போது, தங்கள்  வாழ்வைத் தொடர்வதற்கான வலிமையை எங்கே கண்டடைகிறார்கள் என்று நாங்கள் அடிக்கடி யோசித்திருக்கிறோம். எங்களைப் பொறுத்தவரை, வலியைத் தாங்கிக்கொள்ள உதவும் ஒரே விஷயம், ஆண்டவர் ஜாக்கைக் (Zac) குணப்படுத்துவார் என்ற நம்பிக்கையும், இறுதியில், வியாதி மற்றும் குறைபாடுகள் இல்லாமல் மகிமையடைந்த சரீரத்துடன் இயேசுவோடு கூட பரலோகத்தில் நித்தியத்தைக் கழிப்போம் என்ற நிச்சயமும்தான். ஒரு கிறிஸ்தவராக இருத்தல் என்பதன் அர்த்தம், நாம் ஒருபோதும் நம்பிக்கையின்மையை எதிர்கொள்ள வேண்டியதில்லை என்பதாகும், ஏனென்றால், தாவீதைப் போலவே, நாம் ஆண்டவர் மீது தொடர்ந்து நம்பிக்கை வைக்கலாம்.

அன்பரே, நீங்கள் சமீப காலமாக நம்பிக்கையற்று இருப்பதாக உணர்கிறீர்களா? ஆண்டவர் மீது உங்கள் கண்களை வைக்கிறீர்கள் என்பதற்கு, சரீரப்பிரகாரமான ஒரு அடையாளமாக, பரலோகத்தை நோக்கிப் பாருங்கள், மற்றும் அவர் உங்கள் இருதயத்தை நம்பிக்கையால் நிரப்ப இடங்கொடுங்கள். அன்பரே, இந்த வாரம் ஒவ்வொரு நாளும் உங்களுக்காகவும் உங்கள் குடும்பத்தினருக்காகவும் 25 ஆம் சங்கீதத்தை வாசித்து ஜெபிக்கும்படி நான் உங்களை ஊக்குவிக்கிறேன். நான் செய்வது என்னவென்றால், இறுதி வசனத்தில் எங்கள் குடும்பத்தின் பெயரைச் சேர்த்து, "தேவனே, மென்டஸ் குடும்பத்தை எல்லா இக்கட்டுகளுக்கும் நீங்கலாக்கி மீட்டுவிடும்" என்று ஜெபிக்கிறேன். நீங்களும் அப்படியே ஜெபிக்கலாம். நானும் உங்களுடன் சேர்ந்து அந்த ஜெபத்தை ஏறெடுக்கிறேன்: “தேவனே, அன்பரே ஆகிய இவரை எல்லா இக்கட்டுகளுக்கும் நீங்கலாக்கி மீட்டுவிடும்.”

Cameron Mendes
எழுத்தாளர்

Worship artist, singer-songwriter, dreamer and passionate about spreading the Gospel.