என்னுடைய எல்லா இக்கட்டுகளுக்கும் நீங்கலாக்கி மீட்டுவிடும்!

இந்த வாரம் நாம் 25 ஆம் சங்கீதத்தின் வாயிலாக ஜெபித்து, மனந்திரும்பி, ஆராதித்து, நம் இருதயங்களை ஊற்றியிருக்கிறோம். நீங்கள் இதை நன்கு அனுபவித்தீர்களா? நான் அதைத் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்! 25 ஆம் சங்கீதம் இந்த வசனத்துடன் நிறைவடைகிறது: “தேவனே, இஸ்ரவேலை அவனுடைய எல்லா இக்கட்டுகளுக்கும் நீங்கலாக்கி மீட்டுவிடும்.” (சங்கீதம் 25:22) இது உண்மையாக பரிந்துபேசுகிற ஒரு ஜெபம். தாவீது தன்னுடைய எல்லா உபத்திரவங்களின் மத்தியிலும், இஸ்ரவேலை மீட்கும்படி ஆண்டவரை நோக்கிக் கூப்பிடுகிறார். நாமும், நம்முடைய சொந்த உபத்திரவங்களுக்காக மட்டுமல்லாமல், நம் தேசம், சமூகம் மற்றும் அரசாங்கத்திற்காகவும் ஜெபிக்க அழைக்கப்பட்டுள்ளோம் (1 தீமோத்தேயு 2:1-2). இன்று, இஸ்ரவேலருக்கான இந்த ஜெபம் எப்போதையும் விட மிகவும் பொருத்தமானது, ஏனெனில் வேதாகமம் எருசலேமின் (இஸ்ரவேலின் தலைநகரம்) சமாதானத்துக்காக வேண்டிக்கொள்ளுங்கள் என்று போதிக்கிறது (சங்கீதம் 122:6). சில நேரங்களில், உங்கள் சொந்தப் பிரச்சனைகளால் நீங்கள் மூழ்கடிக்கப்படுவதாக உணரும்போது, நீங்கள் செய்ய வேண்டிய சிறந்த காரியம், மற்றவர்களுக்காகவோ அல்லது ஒரு முழு நாட்டிற்காகவோ ஜெபிப்பது போன்ற மகத்தான ஜெபங்களை ஏறெடுப்பதாகும். இருப்பினும், தாவீதின் ஜெபம் முற்றிலும் தன்னலமற்றதாக இல்லை. எல்லாவற்றிற்கும் மேலாக, அவர் இஸ்ரவேலின் ராஜாவாக இருந்தார், எனவே ஆண்டவர் இஸ்ரவேலர்களை அவர்களது சகல இக்கட்டுகளுக்கும் விலக்கி இரட்சித்தால், அது அவரது ராஜ பதவிக்கான வேலையை கணிசமாக எளிதாக்கும். 😅 இந்த வார தொடக்கத்தில் நான் குறிப்பிட்டது போல், 25 ஆம் சங்கீதம் இந்த வருடத்திற்கான எனது கருப்பொருளாக உள்ளது. ஜெனியும் நானும் ஒவ்வொரு நாள் இரவும் ஒன்றாக சேர்ந்து இந்த சங்கீதத்தை வாசிக்க ஆரம்பித்தோம், மேலும் என் குடும்பத்தினருக்காக இந்த சங்கீதத்தை அறிக்கையிட்டு தினமும் ஜெபிக்கிறேன். அன்பரே, நீங்களும் அவ்வாறே செய்ய நான் உங்களை ஊக்குவிக்கிறேன். இறுதி வசனத்தில் எங்கள் குடும்பத்தின் பெயரைச் சேர்த்து, "தேவனே, மென்டஸ் குடும்பத்தை எல்லா இக்கட்டுகளுக்கும் நீங்கலாக்கி மீட்டுவிடும்" என்று ஜெபிக்கிறேன். நீங்களும் அப்படியே ஜெபிக்கலாம். நானும் உங்களுடன் சேர்ந்து அந்த ஜெபத்தை ஏறெடுக்கிறேன்: “தேவனே, அன்பரே ஆகிய இவரை எல்லா இக்கட்டுகளுக்கும் நீங்கலாக்கி மீட்டுவிடும்.”

