• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FA Farsi
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • HY Armenian
    • ID Bahasa
    • IT Italian
    • JA Japanese
    • KO Korean
    • MG Malagasy
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • RO Romanian
    • RU Russian
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UK Ukrainian
    • UR Urdu
வெளியீட்டு தேதி 7 ஏப்ரல் 2025

பூரண பலியாகும்படி இயேசு இரத்தம் சிந்தினார்

வெளியீட்டு தேதி 7 ஏப்ரல் 2025

இது ஏப்ரல் மாதம் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை - நேரம் பறந்து சென்றுகொண்டிருக்கிறது! நேற்றுதான் கிறிஸ்துமஸ் என்பதுபோல் காணப்பட்டது, ஆனால் ஈஸ்டர் பண்டிகைக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ளன! 😳 இயேசுவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலைக் கொண்டாட நாம் தயாராகும் வேளையில், ஒரு அர்த்தமுள்ள பயணத்திற்கு உங்களை அழைக்க விரும்புகிறேன். அடுத்த இரண்டு வாரங்களுக்கு, இயேசுவின் சிலுவையைக் குறித்த ஆழமானதும் அற்புதமானதுமான சில நிகழ்வுகளைப் பற்றி நாம் சிந்திப்போம். பூமியில் தமது கடைசி 18 மணிநேரங்களில் இயேசு ஏழு முறை இரத்தம் சிந்திய விஷயத்தில் கவனம் செலுத்துவோம். இந்தத் தருணங்கள் ஏதேச்சையானதோ அல்லது தற்செயலானதோ அல்ல - அவை பண்டைய கால தீர்க்கதரிசனங்களை நிறைவேற்றின, அவர் இரத்தம் சிந்திய ஒவ்வொரு தருணமும் ஆழமான முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. வேதாகமத்தில், ஏழு என்ற எண் முழுமை, நிறைவு மற்றும் பரிபூரணத்தைக் குறிக்கிறது. இயேசு இரத்தம் சிந்தும் ஒவ்வொரு முறையும், அவர் ஒரு பூரண பணியை செய்து நிறைவேற்றினார்:

  1. மன்னிப்பு
  2. மீட்பு
  3. சுத்திகரிப்பு
  4. சுகமளிப்பு
  5. விடுவிப்பு
  6. ஒப்புரவு
  7. இரட்சிப்பு

இந்த ஏழும் இயேசு சிலுவையில் நமக்காகச் செய்த முழுமையான மற்றும் பரிபூரணமான தியாகத்திற்கு அடையாளம்.

“உங்கள் முன்னோர்களால் பாரம்பரியமாய் நீங்கள் அனுசரித்துவந்த வீணான நடத்தையினின்று அழிவுள்ள வஸ்துக்களாகிய வெள்ளியினாலும் பொன்னினாலும் மீட்கப்படாமல், குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே.” (1 பேதுரு 1:18-19)  சுவாரஸ்யமாக, ஏழு என்ற எண் வேதாகமத்தில் பரிசுத்த ஆவியானவரின் கிரியையுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஆண்டவருடைய ஏழு ஆவிகளைக் குறிக்கும் ஏழு குத்துவிளக்குகளை யோவான் கண்டார் (வெளிப்படுத்தின விசேஷம் 4:5). இதேபோல், கூடாரத்தில் ஏழு கிளைகளைக் கொண்ட விளக்குத்தண்டு, ஒருபோதும் தீர்ந்துபோகாத எண்ணெயாக இருக்கும் பரிசுத்த ஆவியானவரின் மூலம் எல்லா நேரங்களிலும் கிடைக்கும் ஆண்டவருடைய பிரசன்னத்தை மக்களுக்கு நினைவூட்டியது (யாத்திராகமம் 25). அன்பரே, இயேசு சிலுவையில் உங்களுக்காகச் செய்த சகலத்தையும் பரிசுத்த ஆவியானவர் உங்கள் வாழ்க்கையில் இயற்கைக்கு அப்பாற்பட்ட விதத்தில் நிறைவேற்ற விரும்புகிறார். உங்கள் விசுவாசத்தின் மூலம், பரிசுத்த ஆவியானவர் உங்கள் வாழ்க்கையில் ஏழு கிரியைகளையும் நிறைவேற்ற விரும்புகிறார்! “கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்” (எபேசியர் 2:8) அன்பரே, இந்தப் பயணத்தில் நீங்கள் என்னுடன் இணைந்துகொள்வீர்களா? அப்படியானால், என்னுடன் சேர்ந்து இந்த ஜெபத்தை ஏறெடுக்கவும்: “பரிசுத்த ஆவியானவரே, நாங்கள் உயிர்த்தெழுந்த ஞாயிறு பண்டிகையைக் கொண்டாட இன்னும் கொஞ்ச நாட்களே இருப்பதால், இயேசுவின் பலியைக் குறித்த புதிய வெளிப்பாடுகளுக்கு என் இதயத்தைத் திறந்து, அவர் சிலுவையில் எனக்காக செய்து முடித்து, சம்பாதித்த அனைத்தையும் விசுவாசத்தில் பெற்றுக்கொள்ள எனக்கு உதவுவீராக.”

Jenny Mendes
எழுத்தாளர்

Purpose-driven voice, creator and storyteller with a passion for discipleship and a deep love for Jesus and India.