எல்லோருக்காகவும் ஒரேதரம் இயேசு இரத்தம் சிந்தினார்

திருச்சபைக்குள் நடந்து சென்று, ஒரு மிருகத்தின் இரத்தத்தை கிண்ணத்தில் எடுத்து, பாவ மன்னிப்பிற்காக ஏழு முறை தரையில் தெளிப்பதை உங்களால் கற்பனை செய்ய முடியுமா?? ஒருவேளை, கற்பனை செய்ய முடியாத ஒன்றாக இருக்கலாம்! நமது 21 ஆம் நூற்றாண்டு மக்களின் மனதுக்கு இதுபோன்ற ஒரு காட்சியை கற்பனை செய்வது மிகவும் கடினம். ஆனால் பழைய ஏற்பாட்டில், இது யூதர்களின் நாட்காட்டியில் மிகவும் புனிதமான நாளான பாவநிவாரண பலிக்கான நாளில் பிரதான ஆசாரியரால் செய்யப்படும் புனித சடங்கின் ஒரு பகுதியாகும். வருடத்திற்கு ஒரு முறை, இந்தக் குறிப்பிட்ட நாளில், முழு தேசமும் மனந்திரும்பி, முந்தைய ஆண்டில் அவர்கள் செய்த பாவங்கள் அனைத்திலிருந்தும் மன்னிக்கப்படுவார்கள். பாவநிவாரணபலிக்கான நாளை எவ்வாறு கொண்டாடுவது என்பது குறித்து ஆண்டவர் விரிவான அறிவுரைகளை வழங்கினார் (லேவியராகமம் 16 ஆம் அதிகாரத்தில் அதைக் காணலாம்). மக்களின் பாவங்களுக்கு "பரிகாரம்" செய்வதற்கான பல படிகளில் இரத்தத்தைத் தெளிப்பதும் ஒன்றாகும். பழைய ஏற்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள சடங்குகள் மற்றும் பண்டிகைகள் அனைத்தும் வரவிருந்த காரியங்களுக்கான நிழல் மட்டுமே என்று பவுல் கூறினார்: “...அவைகள் வருங்காரியங்களுக்கு நிழலாயிருக்கிறது; அவைகளின் பொருள் கிறிஸ்துவைப்பற்றினது." (கொலோசெயர் 2:17) பிரதான ஆசாரியர் ஏழு முறை பலியின் இரத்தத்தைத் தரையில் தெளிப்பது என்பது, நம்முடைய இறுதி பிரதான ஆசாரியரான இயேசுவின் தீர்க்கதரிசன செயலுக்கான ஒரு உவமையாகும் - அவருடைய இரத்தம் புனித வெள்ளி தினம் அன்று உங்களுக்காக ஏழு முறை பூமியில் சிந்தப்பட்டது. பழைய ஏற்பாட்டில் உள்ள பிரதான ஆசாரியர் ஒவ்வொரு ஆண்டும் பரிகார சடங்குகளைச் செய்ய வேண்டியிருந்தது. ஆனால் இயேசு வந்தபோதோ, அவர் ஒரேதரம் சகல ஜனங்களுக்காகவும் பலி செலுத்திவிட்டார்! "கிறிஸ்துவானவர் வரப்போகிற நன்மைகளுக்குரிய பிரதான ஆசாரியராய் வெளிப்பட்டு, கையினால் செய்யப்பட்டதாகிய இந்தச் சிருஷ்டிசம்பந்தமான கூடாரத்தின் வழியாக அல்ல, பெரிதும் உத்தமுமான கூடாரத்தின் வழியாகவும், வெள்ளாட்டுக்கடா, இளங்காளை இவைகளுடைய இரத்தத்தினாலே அல்ல, தம்முடைய சொந்த இரத்தத்தினாலும் ஒரேதரம் மகா பரிசுத்த ஸ்தலத்திலே பிரவேசித்து, நித்திய மீட்பை உண்டுபண்ணினார்." (எபிரெயர் 9:11-12) அன்பரே, நாம் இனி சடங்குகள் மற்றும் பலிகளின் மூலம் பரிகாரம் செய்ய வேண்டியதில்லை, மாறாக அவருடைய நித்திய பலியினால் ஒவ்வொரு நாளும் மீட்பைப் பெற்றுக்கொள்ள முடியும். ஆகவே, இன்று அதை எண்ணி ஒரு நிமிடம் இயேசுவுக்கு நன்றி சொல்லுங்கள்.

