உங்களை சுத்திகரிக்க இயேசு இரத்தம் சிந்தினார்

உங்களுக்குப் பிடித்த முக அம்சம் எது? உங்களது மூக்கு, புன்னகை அல்லது கண்கள் உங்களுக்குப் பிடிக்குமா? எனக்கு, என் கன்னங்களில் விழும் குழிகள் பிடிக்கும். என் இடது கன்னத்தில் ஒரு முழு குழியும் வலதுபுறத்தில் ஒரு சிறிய குழியும் உண்டு, ஜாக்(zac) அவற்றை என்னிடமிருந்து அப்படியே பெற்றுக்கொண்டான். 🥰 வேதாகம காலங்களில் வாழ்ந்த ஒரு யூத மனிதரிடம், ‘உங்களுக்குப் பிடித்த முக அம்சம் எது?’ என்று நீங்கள் கேட்டால், அவர் பெருமையுடன் "என் தாடிதான்" என்று கூறுவார். தாடியானது ஆண்மை, அதிகாரம் மற்றும் சமூக அந்தஸ்தின் அடையாளமாக இருந்தது. அவை வலிமை மற்றும் ஆண்மையைக் குறிக்கின்றன - இது ஆண்களை சிறுவர்களிடமிருந்து வேறுபடுத்துகின்றன. அதனால்தான் ஒருவரின் தாடியை சிரைப்பது என்பது தண்டனையின்போது இறுதி அவமானமாகக் கருதப்பட்டது (நெகேமியா 13:25) மற்றும் (2 சாமுவேல் 10:4). நிந்தையும் அவமானமும் உண்டாகும்படி, சிலுவையில் அறையப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட ஆண்களின் தாடிகள் எப்போதும் அவர்களின் முகங்களிலிருந்து பிடுங்கப்பட்டன. அன்பரே, இயேசு உங்களுக்காக மூன்றாவது முறையாக இரத்தம் சிந்தியது, அவரது தாடி மயிர் பிடுங்கப்பட்டபோதுதான்: “அடிக்கிறவர்களுக்கு என் முதுகையும், தாடைமயிரைப் பிடுங்குகிறவர்களுக்கு என் தாடைகளையும் ஒப்புக்கொடுத்தேன்; அவமானத்துக்கும் உமிழ்நீருக்கும் என் முகத்தை மறைக்கவில்லை.” (ஏசாயா 50:6) நம்முடைய அவமானத்தைத் துடைத்தெறிய ஒரு யூதர் அனுபவிக்கக்கூடிய உச்சக்கட்ட அவமானத்திற்கு இயேசு உட்படுத்தப்பட்டார். “நித்திய ஆவியினாலே தம்மைத்தாமே பழுதற்ற பலியாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு உங்கள் மனச்சாட்சியைச் செத்த கிரியைகளறச் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம்!” (எபிரெயர் 9:14) நாம் இயேசுவின் மீது விசுவாசம் வைத்து, சிலுவையில் அவர் நமக்காக நிறைவேற்றி முடித்த அனைத்தையும் பெற்றுக்கொள்ளும்போது, அவமானத்துக்கு இனி நம் மீது அதிகாரம் இருக்காது! “அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லையென்று வேதம் சொல்லுகிறது.” (ரோமர் 10:11) அன்பரே, அடுத்த முறை நீங்கள் கண்ணாடியில் பார்க்கும்போது, நீங்கள் வெட்கப்பட்டுபோகாமல், முழுமையாக நேசிக்கப்படும்படி இயேசு உங்கள் அவமானத்தைச் சுமந்தார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

