உங்கள் விடுதலைக்காக இயேசு இரத்தம் சிந்தினார்

எப்போதாவது, நீங்கள் செய்த ஏதாவது பரியாசம் பண்ணப்பட்டு, அதன்பின்னர், நீங்கள் செய்தது சரி என்று நிரூபிக்கப்பட்டிருக்கிறதா? நான் சிறுமியாக இருந்தபோது, ஒரு முறை, "நீ படிப்பில் மிகவும் மந்தமானவள்" என்று என் அண்ணன் என்னிடம் கூறினார். (அதனால் சண்டையிட்டு, நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் மிகவும் கொடூரமாக நடந்துகொண்டோம் 😇 கவலைப்படாதீர்கள், இப்போது நாங்கள் நல்ல உறவில் இருக்கிறோம்). சில மாதங்களுக்குப் பிறகு, நான் என் ஆண்டிறுதித் தேர்வு விடைத்தாள்களை அவரது முகத்திற்கு முன்பாக அசைத்து, என் வகுப்பில் முதல் மூன்று பேரில் நானும் ஒரு நபர் என்பதைக் காட்ட முடிந்தது எனக்கு மிகுந்த மனதிருப்தியைத் தந்தது.😁 இயேசுவை சாட்டையால் அடித்த பிறகு, அவரைப் பரியாசம்பண்ணும்படி, ரோம படை வீரர்கள் அவருக்கு ஒரு சிவப்பு அங்கியை உடுத்துவித்து, அவரது தலையில் முட்கிரீடத்தை அணிவித்து, "யூதர்களின் ராஜா" என்று அவரைப் பரியாசம்பண்ணினர் (மத்தேயு 27:27-30). அவர்கள் ராஜாதி ராஜாவுக்கு முன்பாக மண்டியிடுகிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியாது. இந்த முட்கள் சாதாரணமானவை அல்ல; கிரீடத்தை வடிவமைக்க வீரர்கள் அநேகமாக ஒரு பேரீச்சம்பழ மரத்தைப் பயன்படுத்தியிருக்கக் கூடும், அதன் கூர்முனைகள் பன்னிரண்டு அங்குல நீளம் வரை வளரும்.😳 முட்கிரீடம் அணிந்திருந்தபோது, அதற்கு மேல் இயேசுவின் தலையில் ஒரு கோலைக் கொண்டு பலமுறை அடித்தனர். முட்கள் அவரது மண்டை ஓட்டின் வழியாக துளையிட்டபோது, அவரது முகத்தில் இரத்தம் வழிந்திருக்கும். வேதாகமத்தில் முட்களைப் பற்றிய முதல் குறிப்பு ஆதியாகமம் 3:17-19ல் உள்ளது, அங்கு ஆண்டவர், ஆதாமும் ஏவாளும் பாவம் செய்த பிறகு, பூமியை சபித்து, அது முட்களையும் குருக்குகளை பிறப்பிக்கும் என்று கூறுகிறார் (ஆதியாகமம் 3:17-18). முட்களானது, ஏதேன் தோட்டத்தில் உலகிற்குள் நுழைந்த பாவத்தினால் உண்டான சாபத்தைக் குறிக்கின்றன. ஏதேன் தோட்டத்தில் உலகிற்குள் முதன்முதலில் வந்த பாவத்தினால் உண்டான சாபத்தால் இயேசு முடிசூட்டப்பட்டார். அந்த முட்கிரீடத்தால் அவர் முடிசூட்டப்பட்டது மட்டுமல்லாமல், அந்த முள்ளின் சாபத்தை முறித்துப்போடவும் செய்தார்! “மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார்.” (கலாத்தியர் 3:13) அன்பரே, நாம் சேர்ந்து ஜெபிப்போம்: “கர்த்தராகிய இயேசுவே, பாவத்தின் சாபத்தை எனக்காக முற்றிலும் முறித்துப்போட்டதற்கு நன்றி. சிலுவையில் நீர் எனக்காகச் செய்து முடித்த அனைத்தையும் என்னால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாமல்போனாலும், நான் அதை ஏற்றுக்கொள்கிறேன். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.”

