• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FA Farsi
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • HY Armenian
    • ID Bahasa
    • IT Italian
    • JA Japanese
    • KO Korean
    • MG Malagasy
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • RO Romanian
    • RU Russian
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UK Ukrainian
    • UR Urdu
வெளியீட்டு தேதி 16 ஏப்ரல் 2025

உங்கள் மனதைப் புதிதாக்கவே இயேசு இரத்தம் சிந்தினார்

வெளியீட்டு தேதி 16 ஏப்ரல் 2025

நேற்று, முட்கிரீடத்தின் அடையாளத்துக்கான அர்த்தத்தை நாம் ஆராய்ந்து அறிந்தோம். இன்று, நான் இன்னும் கொஞ்சம் ஆழமாக அதை உங்களுடன் சேர்ந்து ஆராய்ந்து பார்க்க விரும்புகிறேன். இயேசு சிலுவையில் அறையப்பட்டபோது நடந்த சம்பவங்களை நான் மீண்டும் நினைவுகூர்ந்து இந்தத் தொடரை எழுதிக்கொண்டிருக்கையில் - என் மனதில் ஒரு கேள்வி எழுந்தது:  “முட்கள் ஏன் இயேசுவின் தலை மீது வைக்கப்பட வேண்டும்?” அவரது சரீரம் முழுவதும் அடிகள் விழுந்தன, அவரது முதுகில் சவுக்கடி விழுந்தது, அவரது கைகள் மற்றும் கால்களில் ஆணிகள் துளைத்தன. ஆனால் முட்களோ, ஒரு கிரீடம்போல முறுக்கப்பட்டு, குறிப்பாக அவரது தலையின் மீது வைக்கப்பட்டன. ஏன் அவரை அவற்றின் மீது ஏறி மிதிக்க வைக்கவில்லை? அல்லது ஏன் அவற்றைச் சுமக்க வைக்கவில்லை? இதுவரை,​ இயேசுவை மரணத்திற்கு நேராக வழிநடத்துகிற எதுவும் தற்செயலாக நடக்கவில்லை என்பதை நாம் கண்டோம். ஒவ்வொரு காரியமும் ஆழமான, தீர்க்கதரிசன அர்த்தத்தால் நிரம்பியிருந்தது - கிரீடமானது இதற்கு விதிவிலக்காக இல்லை. தலை என்பது நமது மனம், சிந்தைகள், ஆசைகள் மற்றும் சித்தம் ஆகியவை எழும்பும் இடமாக உள்ளது. பாவம் பெரும்பாலும் நம் மனதிலிருந்து எழும்பத் தொடங்குகிறது, விசுவாசமும் கூட மனதிலிருந்துதான் உண்டாகிறது.

  • கடந்த காலத்தில் ஏற்பட்ட வலி
  • எதிரியின் பொய்கள்
  • பாவத்தினால் உண்டான குற்ற உணர்வு

ஆகிய எண்ணங்களை மீண்டும் மீண்டும் மனதிற்குள் சுற்ற இடமளித்தால், அவை நம்மை சிறைப்படுத்திவிடக் கூடும். இயேசுவின் தலை மீது முட்கிரீடம் சுற்றிவளைத்து வைக்கப்பட்டதுபோல, தேவையில்லாத எண்ணங்களும் நம் மனதை ஒன்றாக சுற்றிவளைத்துக்கொள்கின்றன. (மத்தேயு 27:27-30).  அன்பரே, ஏதோ ஒரு வகையில், நாம் அனைவருமே முட்கிரீடத்தை சுமந்துகொண்டிருக்கிறோம். இப்போது கேள்வி என்னவென்றால்: அந்த முட்கிரீடத்தை இயேசுவிடம் கொடுத்துவிடவும், உங்களுக்காக அவர் அதை சுமக்க இடமளிக்கவும் நீங்கள் ஆயத்தமா? நீங்கள் இயேசுவைப் பின்பற்றத் தொடங்கும்போது: "முந்தின நடக்கைக்குரிய மோசம்போக்கும் இச்சைகளாலே கெட்டுப்போகிற பழைய மனுஷனை நீங்கள் களைந்துபோட்டு, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியுள்ளவர்களாகி, மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள்" என்று பவுல் போதிக்கிறார். (எபேசியர் 4:22-24)  ஒரு புதிய மனம்! இது ஆச்சரியமான ஒன்றாக இல்லையா? சிலுவையின் மூலம் அது உங்களுக்குக் கிடைக்கும்படி இயேசு செய்தார். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் அவர் மீது நம்பிக்கை வைப்பதுதான். "உம்மை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்." (ஏசாயா 26:3"தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார்." (II தீமோத்தேயு 1:7)

Jenny Mendes
எழுத்தாளர்

Purpose-driven voice, creator and storyteller with a passion for discipleship and a deep love for Jesus and India.