• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FA Farsi
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • HY Armenian
    • ID Bahasa
    • IT Italian
    • JA Japanese
    • KO Korean
    • MG Malagasy
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • RO Romanian
    • RU Russian
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UK Ukrainian
    • UR Urdu
வெளியீட்டு தேதி 17 ஏப்ரல் 2025

உங்கள் சுமை மிகவும் பாரமாக இருக்கிறதா?

வெளியீட்டு தேதி 17 ஏப்ரல் 2025

எங்கள் மகன் ஜாக்குக்கு(Zac) உடல்நிலை சரியில்லாமல் போனபோது, கேம்ரனுக்கும் எனக்கும் அது இருளான பாதையாகவும் மற்றும் வேதனையான பயணமாகவும் இருந்தது. அதிலும் குறிப்பாக, இது மிகவும் நியாயமற்றது என்பதாக எங்களை உணர வைத்த விஷயம் என்னவென்றால், இதில் எங்களது தவறு எதுவும் இல்லை; நாங்கள் அதற்குக் காரணமல்ல, எங்களால் அதைத் தடுக்கவும் முடியவில்லை என்பதுதான். ஒரு முறை, நான் கேம்ரனிடம், “நான் பார்க்கும் ஒரு வேலை எனக்கு விருப்பமான ஒன்றாக இல்லாதிருந்தால், நான் அந்த வேலையை விட்டுவிடலாம். நான் தவறான ஒரு நபரைத் திருமணம் செய்திருந்தால், அவரை விட்டுப் பிரிந்து போய்விடலாம், ஆனால் என் வாழ்க்கையில் நான் முழுமையாக சிக்கிக்கொண்டதாக உணர்வது இதுவே முதல் முறை” என்று சொன்னேன். அந்த சூழ்நிலைக்குள் நாங்கள் வலுக்கட்டாயமாகத் தள்ளப்பட்டோம். சிலுவையில் அறையப்படும்படி, இயேசுவை போர்ச்சேவகர்களிடம் ஒப்படைத்தபோது, ​அவர் தமது சொந்த சிலுவையைச் சுமக்கும்படி கட்டாயப்படுத்தப்பட்டார் (யோவான் 19:16-17). போர்ச்சேவகர்கள் அவர் மீது பரிதாபப்பட்டனரா அல்லது அவர் சோர்வாக இருந்ததாலும், வாரினால் அடிக்கப்பட்டு அவரது முதுகில் சதை உரிக்கப்பட்டிருந்ததாலும் சரீரப்பிரகாரமாக இயேசு அதைச் சுமக்க முடியாத நிலைமையில் இருந்தாரா என்பது நமக்குத் தெரியாது, ஆனால் அவருக்காக சிரேனே ஊரைச் சேர்ந்தவனாகிய சீமோன் என்ற மனிதன் அவரது சிலுவையை சுமக்க கட்டாயப்படுத்தப்பட்டான். (லூக்கா 23: 26) இயேசுவின் பின்னால் சிலுவையைச் சுமந்து சென்ற சீமோன் சீஷத்துவத்திற்கு ஒரு சரியான சித்திரம். இயேசு கூறினார்: "பின்பு அவர் எல்லாரையும் நோக்கி: ஒருவன் என் பின்னே வர விரும்பினால் அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை அனுதினமும் எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன்." (லூக்கா 9:23) சிலுவையானது துன்பத்திற்கு ஒரு மிகச்சிறந்த அடையாளம், நாமும் கூட நம்முடைய சிலுவையைச் சுமக்கவே அழைக்கப்பட்டுள்ளோம் - நமது சிலுவையை நம் தோளின் மீது சுமக்கும்போது, இயேசுவை நமது முன்மாதிரியாகவும், நமது முன்னோடியாகவும் நமக்கு முன்பாக வைத்து, வாழ்க்கையின் கடினமான சூழ்நிலைகளின் வழியாக நடந்து செல்ல அழைக்கப்பட்டுள்ளோம். இயேசுவுக்காக இதைச் செய்ய சீமோன் பெருமைப்பட்டாரா அல்லது பகிரங்கமாக அவமானப்படுத்தப்பட்ட குற்றவாளிகளின் வரிசையில் நடக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்ததால் வெட்கப்பட்டாரா என்பது நமக்கு தெரியாது. எப்படியிருந்தாலும், அவருக்கு வேறு வழியில்லை. அன்பரே, சில சமயங்களில், நமக்கும் தப்பிச்செல்ல வேறு வழி இல்லாமல் போய்விடுகிறது. இதைப்போலவே, தவிர்க்க முடியாத மற்றும் தப்பிச்செல்ல முடியாத துன்பங்களை நாம் எதிர்கொள்ளும்போது,​ நம் சிலுவையை நாம் சுமப்பது எப்போதும் ஒரு விருப்பத்தேர்வாக இருக்காது. பாடுகளை எவ்வாறு சகித்துக்கொள்வது என்பதற்கான ஒரு மிகச்சிறந்த முன்மாதிரியை இயேசு நமக்கு வைத்துச் சென்றிருக்கிறார்.

“ஆகையால், மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கிநிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்; அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார்.” (எபிரெயர் 12:1-2)  அன்பரே, உங்கள் சிலுவை சுமப்பதற்கு மிகவும் கனமாக இருப்பதாக நீங்கள் உணர்கிறீர்களா? ஒரு நிமிடம் உங்கள் கண்களை மூடிக்கொண்டு, சீமோனின் இடத்தில் நீங்கள் இருப்பதைக் கற்பனை செய்து பாருங்கள். உங்கள் தோள்களின் மீது உங்கள் சுமையின் பாரத்தை நீங்கள் உணர்கிறீர்கள் என்பது உண்மைதான்... ஆனாலும் - உங்களுக்கு முன்னோடியாக, உங்கள் நிமித்தம் அனைத்து அடிகளையும், அவமானங்களையும் மற்றும் கசையடிகளையும் ஏற்றுக்கொண்ட இயேசுவை நோக்கிப் பார்த்து, உங்கள் கண்களை அவர் மீதே வைத்திருங்கள்.

Jenny Mendes
எழுத்தாளர்

Purpose-driven voice, creator and storyteller with a passion for discipleship and a deep love for Jesus and India.