• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FA Farsi
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • HY Armenian
    • ID Bahasa
    • IT Italian
    • JA Japanese
    • KO Korean
    • MG Malagasy
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • RO Romanian
    • RU Russian
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UK Ukrainian
    • UR Urdu
வெளியீட்டு தேதி 29 ஏப்ரல் 2025

நீ கர்ப்பத்திலிருந்து வெளிப்படுமுன்னே நான் உன்னைப் பரிசுத்தம்பண்ணினேன். – எரேமியா 1:5

வெளியீட்டு தேதி 29 ஏப்ரல் 2025

எது என்னை ஒருபோதும் ஆச்சரியத்தில் ஆழ்த்தாமல் இருந்ததில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்த பரந்துவிரிந்த பிரபஞ்சத்தில் ஒரு சிறிய மனுஷியாகிய என்னை - பிரபஞ்சத்தின் சிருஷ்டிகர் பார்க்கிறார் என்பதுதான்! உலக அரசியல் அல்லது உலகளாவிய திருச்சபை என பெரிய விஷயங்களில் மட்டும் ஆண்டவர் அக்கறையுள்ளவராய் இருப்பதில்லை: அவர் நமது தனிப்பட்ட வாழ்க்கை மீது அக்கறையுள்ளவராய் இருக்க விரும்புகிறார். இந்த வாரம் எரேமியா 29:11 -ஐப் படிக்கும்போது, இந்த உண்மை எனக்கு தெளிவாகத் தெரிகிறது: ஆண்டவர் தனிப்பட்ட கவனம் செலுத்துபவர். "நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே." (எரேமியா 29:11) நீங்கள் ஒருவரைப் பற்றி நன்கு அறிந்து, அவர்கள் மீது அக்கறைகொள்ளாவிட்டால் உங்களால் அவர்களுக்காகத் திட்டங்களை உருவாக்க முடியாது. அன்பரே, ஆண்டவர் உங்களை அறிந்திருக்கிறார் - உங்கள் ஆசைகள், லட்சியங்கள், கனவுகள், பயங்கள் ஆகியவற்றையும் மற்றும் உங்கள் தலையில் உள்ள முடிகளின் எண்ணிக்கையையும் கூட அவர் அறிந்திருக்கிறார்! (மத்தேயு 10:30)  “நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்குமுன்னே உன்னை அறிந்தேன்; நீ கர்ப்பத்திலிருந்து வெளிப்படுமுன்னே நான் உன்னைப் பரிசுத்தம்பண்ணி, உன்னை ஜாதிகளுக்குத் தீர்க்கதரிசியாகக் கட்டளையிட்டேன்.” (எரேமியா 1:5)  உங்களை உருவாக்கியவரை விட உங்களுக்காக சிறந்த திட்டங்களை வகுக்க யாரால் முடியும்? ஒருவராலும் முடியாது! அன்பரே, உங்கள் வாழ்க்கைக்கு ஆண்டவர் சிறந்த திட்டங்களை வைத்திருக்கிறார். அவை உங்கள் கற்பனைக்கு எட்டாத பெரிய திட்டங்கள். 

“என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல; உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று கர்த்தர் சொல்லுகிறார். பூமியைப்பார்க்கிலும் வானங்கள் எப்படி உயர்ந்திருக்கிறதோ, அப்படியே உங்கள் வழிகளைப்பார்க்கிலும் என் வழிகளும், உங்கள் நினைவுகளைப்பார்க்கிலும் என் நினைவுகளும் உயர்ந்திருக்கிறது.”  (ஏசாயா 55:8-9) ஆண்டவருடைய திட்டங்களுக்கு உங்கள் வாழ்க்கையை நீங்கள் அர்ப்பணித்தால், அவர் உங்களை எங்கு அழைத்துச் செல்கிறார் என்பதைக் காணும்போது, நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்! நாம் ஒன்றாக சேர்ந்து ஜெபிப்போம்: “பரலோகப் பிதாவே, என் திட்டங்கள் அனைத்தையும் உமது கரங்களில் அர்ப்பணித்து, என் வாழ்க்கைக்கான உமது மிகச்சரியான வடிவமைப்பின் மீது நம்பிக்கை வைக்கிறேன். பிரபஞ்சத்தின் சிருஷ்டிகரான நீர், உமது மனதில் என்னை வைத்திருப்பதற்கு நன்றி. இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.”

Jenny Mendes
எழுத்தாளர்

Purpose-driven voice, creator and storyteller with a passion for discipleship and a deep love for Jesus and India.