நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்குக் கொடுப்பேன் – ஏரேமியா 29:11

நாம் 3வது நாளாக எரேமியா 29:11ஐ படித்துக்கொண்டிருக்கிறோம், இன்று, நான் கொஞ்சம் வித்தியாசமாக ஒரு காரியத்தைச் செய்ய விரும்புகிறேன். எரேமியா 29:11ஐ அடிப்படையாகக் கொண்ட இந்த வார்த்தைகளை நீங்கள் வாசித்து, ஆண்டவர் தாமே அவற்றை உங்களுடன் பேசுவதுபோல், உங்கள் இதயத்தில் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன்: “அன்பரே, என் மகனே / மகளே,உன் வாழ்க்கைக்கான ஒரு திட்டம் என்னிடம் உள்ளது.நான் சொன்ன அனைத்தும்,நான் உனக்கு அளித்த வாக்குத்தத்தங்கள்,நான் உன்னைக் குறித்து அறிவித்த சொப்பனங்கள்,நான் உன்னைக் குறித்துச் சொன்னவை... அனைத்தும் நிறைவேறும்.ஆம், நான் உனக்காக எல்லாவற்றையும் முன்கூட்டியே திட்டமிட்டுள்ளேன்.நீ கடந்து செல்லும் எல்லாவற்றிற்கும் ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.துன்பம், வியாதி அல்லது பணத் தேவை என எதுவாக இருந்தாலும்,என் வார்த்தைகள் உனக்குப் போதுமானவை.நான் அறிவித்ததை யாராலும் தடுக்கவோ அழிக்கவோ முடியாது.நீ முன்னேறிச் செல்லலாம்.நான் உன்னைக் கைவிடமாட்டேன்...இறுதி வரை நான் உனக்கு அருகில் நடப்பேன்.நான் ஒரு அடி உனக்கு முன்னே செல்கிறேன். நான் உனக்கு முன்னால் நடக்கிறேன்.நீ நடக்க இருக்கும் பாதையில்... நான் ஏற்கனவே நடந்துவிட்டேன்.நான் சகல மலைகளையும் சமன் செய்து, ஒவ்வொரு தடையையும் கடந்துவிட்டேன்.நீ என்னை நம்பலாம்.” இதை வாசித்த பின் நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்? இந்த வார்த்தைகளை நன்றாகப் புரிந்துகொள்ள, நீங்கள் அவற்றை பல முறை மீண்டும் மீண்டும் சொல்லலாம். நீங்கள் சொல்லி முடித்ததும், உங்கள் வாழ்க்கையில் ஆண்டவருடைய பிரசன்னம் மற்றும் நன்மைக்காக நன்றி சொல்ல ஒரு நிமிடம் எடுத்துக்கொள்ளுங்கள். நீங்கள் இந்த ஜெபத்தை ஏறெடுக்கலாம்: “பரலோகப் பிதாவே, நான் உமக்குச் சொந்தமான நபராக இருப்பதால் நன்றி! என் வாழ்க்கை உமக்குச் சொந்தமானது, நான் விலையேறப்பெற்ற நபர். என் வாழ்க்கைக்கான உமது மிகச்சரியான திட்டம் நிறைவேறி வருவதற்காக நன்றி! நீர் என்னை ஒருபோதும் கைவிடமாட்டீர், என்னை விட்டுவிலகமாட்டீர், மற்றும் ஒவ்வொரு அடியிலும் எனக்கு முன்பாகச் செல்வதால் உமக்கு நன்றி. இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்!”

