ஆண்டவருடைய திட்டங்களை எப்படி நிறைவேற்றுவது?

எரேமியா 29:11ஐ ஐந்து நாட்களாக நாம் தொடர்ந்து தியானித்த பிறகும், "ஆண்டவர் எனக்காக வைத்திருக்கும் திட்டங்களில் நான் எப்படி அடியெடுத்து வைப்பது" என்று நீங்கள் யோசிக்கலாம்.
எரேமியா 29:11ஐ தொடர்ந்து வரும் வசனங்களில் ஆண்டவர் அதற்கான திறவுகோல்களைக் கொடுக்கிறார்:
"அப்பொழுது நீங்கள் கூடிவந்து, என்னைத் தொழுதுகொண்டு, என்னை நோக்கி விண்ணப்பம்பண்ணுவீர்கள்; நான் உங்களுக்குச் செவிகொடுப்பேன். உங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடினீர்களானால், என்னைத் தேடுகையில் கண்டுபிடிப்பீர்கள். நான் உங்களுக்குக் காணப்படுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் உங்கள் சிறையிருப்பைத் திருப்பி, நான் உங்களைத் துரத்திவிட்ட எல்லா ஜாதிகளிலும் எல்லா இடங்களிலுமிருந்து உங்களைச் சேர்த்து, நான் உங்களை விலக்கியிருந்த ஸ்தலத்துக்கே உங்களைத் திரும்பிவரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்." (எரேமியா 29:12-14)
நான் முதல் நாளில் குறிப்பிட்டதுபோல, எரேமியா 29:11ஆம் வசனமானது நாடுகடத்தப்பட்டு சிறையிருப்பில் வாழ்ந்த ஆண்டவருடைய ஜனங்களுக்காக உரைக்கப்பட்டது. அவருடைய அழகான, செழிக்கச் செய்யும் திட்டங்களில் மக்கள் பங்கேற்க விரும்பினால், அவரை நோக்கிக் கூப்பிட்டு ஜெபிப்பதன் மூலம் முழு இருதயத்தோடும் அவரைத் தேடும்படி ஆண்டவர் அவர்களை ஊக்குவிக்கிறார்.
அன்பரே, இது உங்களுக்கும் பொருந்தும். ஆண்டவர் மிகவும் மென்மையானவர்; அவர் தமது திட்டங்களையோ வழிகளையோ உங்கள் மீது ஒருபோதும் பலவந்தமாகத் திணிக்கமாட்டார். உங்கள் வாழ்க்கைக்கான ஆண்டவருடைய திட்டங்கள் மிக அழகானவை; ஆனால், நீங்கள் முழு மனதுடன் அவரைத் தேடினால் மட்டுமே அவற்றுள் நீங்கள் அடி எடுத்துவைக்க முடியும்.
நல்ல செய்தி என்னவென்றால், ஆண்டவர் கண்டுபிடிப்பதற்கு கடினமானவர் அல்ல, ஒரே ஒரு ஜெபத்தில் நெருங்கி வரக்கூடிய தூரத்தில் தான் உள்ளார்!
"உங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடினீர்களானால், என்னைத் தேடுகையில் கண்டுபிடிப்பீர்கள்." (எரேமியா 29:13)
நாம் ஒன்றாக சேர்ந்து ஜெபிப்போம்:
“பரலோகப் பிதாவே, இன்று நான் உமது நாமத்தை நோக்கிக் கூப்பிட்டு, என் முழு இருதயத்தோடும் உம்மைத் தேடுகிறேன். உம்முடைய செழிப்பான மற்றும் நம்பிக்கையளிக்கும் திட்டங்கள் என் வாழ்க்கையில் வெளிப்படுவதைக் காண்பதைத் தவிர, வேறொன்றையும் நான் விரும்பவில்லை. நான் உம்மைத் தேடும்போது, நீர் எனக்கு அருகில் நெருங்கி வருவதற்காக நன்றி. இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.”

