உம்முடைய வாக்கினால் அதைச் சொன்னீர், உம்முடைய கரத்தினால் அதை இந்நாளில் இருக்கிறபடி நிறைவேற்றினீர். 2 நாளாகமம் 6:15

இன்று எரேமியா 29:11ஐ பற்றிய நமது தியானத்தை நிறைவு செய்கிறோம். நீங்கள் விரும்பினால், இந்த மின்னஞ்சலுக்குப் பதிலளிப்பதன் மூலம் அதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை எனக்குத் தெரிவிக்கலாம்.
இந்த வார்த்தைகளைக் கடைசியாக ஒரு முறை நாம் சேர்ந்து வாசிப்போம் :
“நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே.” (எரேமியா 29:11)
பல வேதவசனங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு நம்பிக்கையின் ஜெபத்துடன் இந்தத் தொடரை நான் நிறைவு செய்ய விரும்புகிறேன்.
அன்பரே, நாம் ஒன்றாக சேர்ந்து ஜெபிப்போம்:
“ஆண்டவரே, என் எதிர்காலத்திற்கான நம்பிக்கையை நான் உம்மில் பெற்றிருப்பதால் நன்றி.எனக்காக நீர் கொண்டிருக்கும் நோக்கங்களை நான் விசுவாசிப்பதால் நான் உம்மிடம் வருகிறேன். (எரேமியா 29:11)நீர் பொய் சொல்ல ஒரு மனிதன் அல்ல; (எண்ணாகமம் 23:19)நீர் என் எதிர்பார்ப்புகளைப் புரிந்துகொள்ளாமல்,இறுதியில் என்னை ஏமாற்றும் ஒரு மனிதன் அல்ல. (எபிரெயர் 13:5)நீர் உண்மையுள்ள ஆண்டவராய் இருப்பதால் நான் உம்மை நம்புகிறேன்.நீர் உமது வாயினால் சொன்னதை உமது கரத்தினால் நிறைவேற்றுகிறீர். (2 நாளாகமம் 6:15) நீர் என் இருதயத்தை அறிந்திருக்கிறீர், நான் உம்மைப் பின்பற்ற விரும்புவதால்,என்னை ஒரு பாதுகாப்பான புகலிடத்திற்கு எப்படி அழைத்துச் செல்வது என்பதை நீர் அறிந்திருக்கிறீர். (சங்கீதம் 23) என்ன நடந்தாலும், நான் தொடர்ந்து முன்னேறிக்கொண்டே இருப்பேன்!உமது இரக்கங்களுக்கு முடிவில்லை... நீரே என் முடிவில்லா நம்பிக்கை! (புலம்பல் 3:21) இன்று, நீரே என் நம்பிக்கை என்று நான் அறிக்கையிடுகிறேன்.இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.”
அன்பரே, எங்கள் அனுதினமும் ஒரு அதிசயம் குடும்பத்தின் ஒரு உறுப்பினராக நீங்கள் இங்கே இருப்பதில் கேம்ரனும் நானும் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். உங்கள் வாழ்க்கையில் ஆண்டவருடைய திட்டங்கள் வெளிப்படுவதைக் காண நான் ஆவலுடன் காத்திருக்கிறேன், மேலும் உங்கள் பயணத்தில் நானும் சேர்ந்து பயணிப்பதில் பெருமைப்படுகிறேன். 🤗

