• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FA Farsi
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • HY Armenian
    • ID Bahasa
    • IT Italian
    • JA Japanese
    • KO Korean
    • MG Malagasy
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • RO Romanian
    • RU Russian
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UK Ukrainian
    • UR Urdu
வெளியீட்டு தேதி 5 மே 2025

கிறிஸ்து நம்மில் அன்புகூர்ந்ததுபோல, நீங்களும் அன்பிலே நடந்துகொள்ளுங்கள். எபேசியர் 5:2

வெளியீட்டு தேதி 5 மே 2025

தலைப்பு சொல்லிக் கூப்பிடும் அளவுக்கு நான் மிகவும் பெரியவன் அல்ல. என்னை 'பாஸ்டர்' என்று கூப்பிடுவதை நான் ஒருபோதும் ஊக்குவிப்பதில்லை, நான் முழுநேர ஊழியம் செய்து, ஆராதனை ஊழிய பாஸ்டராக இருந்தபோதும், மக்கள் என்னை 'கேம்ரன்' என்று அழைக்க வேண்டும் என்றே நான் வலியுறுத்தினேன். என் சொந்த சகோதரியின் பிள்ளைகள் கூட என்னை மாமா என்று அழைக்க நான் அனுமதிப்பதில்லை, ஏனென்றால் அது என்னை இன்னும் வயதான நபராக உணர வைக்கிறது.🤣 இருப்பினும், நான் எப்போதாவது இப்படிப்பட்ட ஒரு தலைப்பில் அழைக்கப்பட விரும்பினால், 'சீஷன் கேம்ரன்' என்பதையே தேர்ந்தெடுப்பேன், ஏனென்றால் சீஷன் என்பதற்கான அர்த்தத்தை நாம் இங்கே காணலாம்:

"பிரபலமான ஒருவரின் கருத்துக்கள் மற்றும் கொள்கைகளை நம்பும் ஒரு நபர் மற்றும் அந்த நபர் வாழும் வழியில் அல்லது வாழ்ந்த வழியில் வாழ முயற்சிக்கும் ஒரு நபர்" என்று வரையறுக்கப்படுகிறது - கேம்பிரிட்ஜ் சொல் அகராதி. 

ஒரு சீஷனாக இருப்பது என்பது கற்றலை விட மேலானது; அது தனக்குக் கற்றுக்கொடுத்த ஒரு ஆசிரியரைப்போல் ஆகுமளவிற்கு அவரது போதனைகளைப் பின்பற்றி வாழ்வதைக் குறிக்கிறது.

"சீஷன் தன் குருவுக்கு மேற்பட்டவனல்ல, தேறினவன் எவனும் தன் குருவைப்போலிருப்பான்." (லூக்கா 6:40)

 என் வாழ்க்கையில் பல ஆசிரியர்கள் எனக்குப் பாடம் கற்றுக்கொடுத்திருக்கிறார்கள், சிலர் எனக்கு விலைமதிப்பற்ற வாழ்க்கைப் பாடங்களைக் கற்பித்தார்கள். ஆனால் என் வாழ்நாள் முழுவதும் நான் முன்மாதிரியாக வைத்துப் பின்பற்ற விரும்பும் ஒரே ஒரு ஆசிரியர்: இயேசு மட்டுமே!

"ஆதலால், நீங்கள் பிரியமான பிள்ளைகளைப்போல தேவனைப் பின்பற்றுகிறவர்களாகி, கிறிஸ்து நமக்காகத் தம்மை தேவனுக்குச் சுகந்த வாசனையான காணிக்கையாகவும் பலியாகவும் ஒப்புக்கொடுத்து நம்மில் அன்புகூர்ந்ததுபோல, நீங்களும் அன்பிலே நடந்துகொள்ளுங்கள்." (எபேசியர் 5:1-2

அன்பு, மன்னிப்பு, மனதுருக்கம் மற்றும் நேர்மை போன்ற குணங்களை இயேசு போதித்ததுமட்டுமல்லாமல், அவற்றை முழுமையாக வாழ்ந்தும் காட்டினார். சுவிசேஷத்தின் ஒவ்வொரு சம்பவத்திலும் இதை நாம் காணலாம்.  அன்பரே, நீங்கள் ஏற்கனவே கிறிஸ்துவின் மாணவராக இருக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியும், அவரை அறிகிற அறிவில் ஒவ்வொரு நாளும் வளரும்படி, அனுதினமும் ஒரு அதிசயத்தை நீங்கள் வாசிக்கிறீர்கள். ஆனால் நீங்கள் ஒரு சீஷராக இருக்கவும், அவரைப்போல் மாறவும் விரும்புகிறீர்களா? இந்த ஒரு முடிவை நீங்கள் ஏனோதானோவென்று எடுக்க முடியாது ஏனென்றால் இது உங்கள் முழு வாழ்வையும் மாற்றியமைக்க கூடும்!

“பின்பு அவர் எல்லாரையும் நோக்கி: ஒருவன் என் பின்னே வர விரும்பினால் அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை அனுதினமும் எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன். தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான்; என்னிமித்தமாகத் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதை இரட்சித்துக்கொள்ளுவான்"  என்றார்" (லூக்கா 9:23-24). 

Cameron Mendes
எழுத்தாளர்

Worship artist, singer-songwriter, dreamer and passionate about spreading the Gospel.