• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FA Farsi
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • HY Armenian
    • ID Bahasa
    • IT Italian
    • JA Japanese
    • KO Korean
    • MG Malagasy
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • RO Romanian
    • RU Russian
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UK Ukrainian
    • UR Urdu
வெளியீட்டு தேதி 11 மே 2025

தனியாகச் செல்லும்போது, நீங்கள் வேகமாக செல்லலாம், ஆனால் சேர்ந்துசெல்லும்போது, நீங்கள் முன்னேறிச் செல்ல முடியும்

வெளியீட்டு தேதி 11 மே 2025

என் மனைவி ஜெனியுடன் என் கருத்துக்களையோ அல்லது தரிசனங்களையோ நான் பகிர்ந்துகொள்ளும்போது, அவள் எப்போதும் நான் எதிர்பார்க்கும் அளவுக்கு உற்சாகமாகப் பதிலளிப்பதில்லை. பெரும்பாலும், அவள், "இதை நன்கு பரிசீலனை செய்தீர்களா?" அல்லது "அது எப்படி சாத்தியமாகும்?" என்பன போன்ற அதிர்ச்சியளிக்கும் கேள்விகளைக் கேட்பாள். இது என்னை அந்த நேரத்தில் விரக்தியடையச் செய்கிறது, "நீ எனது யோசனையுடன் ஒத்துப்போவதில்லை!" என்று நான் கூச்சலிடுவேன். ஆனால் காலப்போக்கில், அவளுடைய கேள்விகள் மிகச் சிறந்த திட்டத்திற்கு நேராக வழிநடத்துகிறது என்பதை நான் கற்றுக்கொண்டேன்.

அன்பரே, மற்றவர்கள் உங்கள் வேகத்தைக் குறைக்கிறார்கள் என்று நீங்கள் எப்போதாவது உணர்கிறீர்களா?

லூக்கா 10:1ல் இயேசு தம்முடைய சீஷர்களை அனுப்பினார்: 

"இவைகளுக்குப் பின்பு கர்த்தர் வேறே எழுபதுபேரை நியமித்து, தாம் போகும் சகல பட்டணங்களுக்கும் இடங்களுக்கும் அவர்களைத் தமக்கு முன்னே இரண்டிரண்டு பேராக அனுப்பினார்."

இயேசு ஏன் அவர்களை இரண்டு இரண்டு பேராக அனுப்ப வேண்டும்? அதற்கு பதிலாக, அவர்கள் அதிக எல்லைகளை சென்றடையும் வகையில் அவர்களைத் தனித்தனியாக அனுப்புவது இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம் அல்லவா?

சில நேரங்களில், இயேசுவை மிகவும் வைராக்கியத்துடன் பின்பற்றுபவர்களுக்கும் கூட சவாலான நாட்களை சந்திக்கும் போது விடாமுயற்சியுடன் இருப்பது கடினமானது. இயேசு அவர்களை இரண்டிரண்டு பேராக இணைத்ததற்கு காரணம், ஒருவர் பலவீனமாக இருக்கும்போது, ​​மற்றொருவர் வலிமையாக செயல்பட முடியும் என்பதுதான்:

“ஒண்டியாயிருப்பதிலும் இருவர் கூடியிருப்பது நலம்; அவர்களுடைய பிரயாசத்தினால் அவர்களுக்கு நல்ல பலனுண்டாகும். ஒருவன் விழுந்தால் அவன் உடனாளி அவனைத் தூக்கிவிடுவான்; ஒண்டியாயிருந்து விழுகிறவனுக்கு ஐயோ, அவனைத் தூக்கிவிடத் துணையில்லையே. இரண்டுபேராய்ப் படுத்துக்கொண்டிருந்தால் அவர்களுக்குச் சூடுண்டாகும்; ஒண்டியாயிருக்கிறவனுக்குச் சூடுண்டாவது எப்படி? ஒருவனை யாதாமொருவன் மேற்கொள்ள வந்தால் இருவரும் அவனுக்கு எதிர்த்து நிற்கலாம்; முப்புரிநூல் சீக்கிரமாய் அறாது.” (பிரசங்கி 4:9-12)

தனியாக செல்லும்போது நீங்கள் வேகமாகச் செல்ல முடியும், ஆனால் ஒன்றாக சேர்ந்து செல்லும்போது நீங்கள் மேலும் முன்னேற முடியும்.

ஆண்டவர் நம்மை மற்றவர்களை சார்ந்திருக்கும்படி வடிவமைத்திருக்கிறார் - கணவன் மனைவி, பெற்றோர் மற்றும் குழந்தைகள், நண்பர்கள் மற்றும் கிறிஸ்துவின் சரீரம் என அனைவரும் அன்பிலும் ஒற்றுமையிலும் ஒருவரையொருவர் கட்டியெழுப்புவதற்காக வடிவமைக்கப்பட்ட உறவுகளாக இருக்கின்றனர். 

அன்பரே, ‘அனுதினமும் ஒரு அதிசயம்’ மின்னஞ்சலானது எங்களிடம் இருந்து நீங்கள் பெற்றுக்கொள்வதைவிடவும் மேலானது. நாம் ஒருவருக்கொருவர் ஆதரவளிக்கும்படி இங்கே இருக்கும் விசுவாசிகள் அனைவரும் குடும்பமாக இருக்கிறோம். உங்களுடன் கூட யாராவது ஒருவர் நடக்க வேண்டும் என்றால், நாங்கள் உங்களுக்காக இங்கே இருக்கிறோம்!

Cameron Mendes
எழுத்தாளர்

Worship artist, singer-songwriter, dreamer and passionate about spreading the Gospel.