உம்மை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர் ஏசாயா 26:3

ஒவ்வொரு மின்னஞ்சலையும் ஏன் ‘சமாதான வாழ்த்துக்கள்’ என்று (ஆடியோவில்) நாங்கள் தொடங்குகிறோம் என்று நீங்கள் யோசித்திருக்கலாம். அதற்கான விளக்கத்தை நீங்கள் முன்பே கேட்டிருக்கலாம், ஆனால் அந்த செய்தியைக் கேட்காமல் தவறவிட்டவர்களுக்காக அதை மீண்டும் பகிர்ந்துகொள்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.😊
முதலில் பார்க்கும் ஒரு நபரை, ‘சமாதானம்’ என்று சொல்லி வாழ்த்துவது, பெரும்பாலும் மத்திய கிழக்கு வாழ்த்துக்களுடன் தொடர்புடையது என்பதால், ‘வணக்கம்’ என்று தமிழ் மொழியில் வாழ்த்துவது சரி என்று கருதப்படுகிறது.
அப்படித் துவங்குவதற்கான எங்கள் விருப்பத்தை நாங்கள் இங்கு விளக்குகிறோம்.
‘வணக்கம்’ என்பது தமிழ் வார்த்தை, இதன் பொருள் ‘உன்னை வணங்குகிறேன்’ என்பதாகும். சில கிறிஸ்தவர்கள் ஆண்டவரை மட்டுமே வணங்க வேண்டும் என்று வாதிடலாம் (பிலிப்பியர் 2:10-11), அதேவேளையில், மற்றவர்கள் ஒரு நபருக்கு மரியாதை செலுத்தும் அடையாளமாக வணங்குவது, கலாச்சார ரீதியாக ஏற்றுக்கொள்ளப்படத்தக்கது என்றும், ஆபிரகாம், யாக்கோபு மற்றும் யோசேப்பு போன்ற வேதாகம நபர்களால் இந்த முறைமை கடைப்பிடிக்கப்பட்டது என்றும் சுட்டிக்காட்டுவார்கள்.
‘சமாதானம்’ என்பது 'ஷாலோம்' என்ற எபிரேய வார்த்தையின் அர்த்தத்தை கொண்டதாக இருக்கிறது, இயேசுவும் ஜனங்களை இப்படித்தான் வரவேற்றார்! இயேசு சொன்னார்: “உங்களுக்குச் சமாதானம்.” (யோவான் 20:19)
ஷாலோம் என்பது ஆங்கிலத்தில் ‘peace’ (சமாதானம்) என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது, ஆனால், ஒரு சாதாரண வாழ்த்துதலுக்கும் மேலான ஒரு அர்த்தத்தை இது வெளிப்படுத்துகிறது.✌️ இது பரிபூரணம், முழுமை, ஆரோக்கியம், மகிழ்ச்சி, சுகம், பாதுகாப்பு மற்றும் செழிப்பு ஆகியவற்றின் ஆழமான உணர்வை உள்ளடக்கியதாக இருக்கிறது - அடிப்படையில் இது ஆண்டவரால் மட்டுமே அருளப்படக்கூடிய அனைத்து ஆசீர்வாதங்களையும் உள்ளடக்கியதாகும் (யாக்கோபு 1:17).
"உம்மை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்." (ஏசாயா 26:3)
இந்த வசனத்தில், ‘ஷாலோம்’ என்ற வார்த்தை ‘பரிபூரணம்’ மற்றும் ‘சமாதானம்’ ஆகிய இரண்டிற்கும் பயன்படுத்தப்படுகிறது 🤯 இந்த வசனம் எபிரேய மொழியில் இவ்வாறு வாசிக்கப்படுகிறது, “உம்மை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் (ஷாலோம் ஷாலோமுடன்) காத்துக்கொள்வீர்.”
‘ஷாலோம்’ என்று சொல்வதன் மூலம் ஆண்டவருடைய பரிபூரண சமாதானத்தையும் அவருடைய அனைத்து ஆசீர்வாதங்களையும் நீங்கள் உங்கள் வாழ்வில் பெற்றுக்கொள்ளும்படி வேண்டிக்கொள்கிறீர்கள், இப்படியிருக்க, ‘வணக்கம் - நான் உன்னை வணங்குகிறேன்’ என்று ஏன் சொல்ல வேண்டும்?
இந்த வாரம், ஷாலோம் என்ற தொடரில் இந்த வார்த்தையின் அழகை நாம் ஆழமாக தியானிப்போம். இன்று, உங்களுக்கான இயேசுவின் வார்த்தைகளைப் பெற்றுக்கொள்ளுங்கள்:
“அன்பரே, உனக்கு சமாதானம்; என் பரிபூரணத்தையும் மகிழ்ச்சியையும் நான் உனக்குக் கொடுக்கிறேன். உன் இதயம் கலங்க வேண்டாம், பயப்படாதே. உன் மனதை என் மீது வைத்திருப்பதால் நான் உன்னை ஆரோக்கியமாகவும் செழிப்பாகவும் வைத்திருப்பேன்.” (யோவான் 14:27 மற்றும் ஏசாயா 26:3)

