உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக. யோவான் 14:27

வேதாகமத்தில் உள்ள 'ஷாலோம்' என்ற வார்த்தைக்குப் பல அர்த்தங்கள் உள்ளன. நாம் பெரும்பாலும் இதை 'சமாதானம்' என்று மொழிபெயர்க்கிறோம், அதில் பின்வருவன அடங்கும்:
- தேசங்களுக்கு இடையேயான சமாதானம் (வெளிப்படுத்துதல் 6:4)
- ஜனங்களுக்கு இடையேயான சமாதானம் (எபேசியர் 4:3)
- சமாதானத்தின் பாதையே நமது இரட்சிப்பு (லூக்கா 1:78-79)
- நித்திய இளைப்பாறுதல் (R.I.P) (ஏசாயா 57:2)
- வாழ்த்துக்களாக சொல்லப்படும் சமாதானம், "உங்களுக்குச்
- சமாதானம்" அல்லது "இந்த வீட்டிற்கு சமாதானம்" (யோவான் 20:19 மற்றும் லூக்கா 10:5)
ஆண்டவர் தம்முடைய பிள்ளைகளுக்கு எல்லா விதத்திலும் சமாதானத்தை விரும்புகிறார்:
- உலக நாடுகளுக்கு இடையே சமாதானம் மற்றும் உங்களது இருதயத்தில் சமாதானம்.
- நீங்கள் ஜீவனோடு இருக்கும்போதும் சமாதானம் மற்றும் நீங்கள் மரிக்கும்போதும் சமாதானம்.
- நீங்கள் வீட்டில் இருக்கும்போதும் சமாதானம் மற்றும் வெளியே செல்லும்போதும் சமாதானம்.
அன்பரே, உங்கள் சமாதானமே ஆண்டவருக்கு முக்கியம்! அவர் சமாதானத்தின் தேவன், அந்த சமாதானத்தால் உங்களை முழுமையாக நிரப்ப விரும்புகிறார் (2 தெசலோனிக்கேயர் 3.16). இயேசு இன்று உங்களுக்குச் சொல்கிறார்:
சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக. (யோவான் 14:27)
இந்தப் பாடலைக் கேட்டு ஜெபிப்போம் :
“பரம பிதாவே, எல்லாப் புரிதலுக்கும் மேலான உம்முடைய பரிபூரணமான, பரலோக சமாதானத்தை எனக்குக் கொடுத்ததற்காக உமக்கு நன்றி. இன்று நான் அதை இயேசுவின் நாமத்தில் பெற்றுக்கொள்கிறேன், ஆமென்.”

