• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FA Farsi
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • HY Armenian
    • ID Bahasa
    • IT Italian
    • JA Japanese
    • KO Korean
    • MG Malagasy
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • RO Romanian
    • RU Russian
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UK Ukrainian
    • UR Urdu
வெளியீட்டு தேதி 16 மே 2025

ஒற்றுமை என்பது ஒரே மாதிரியான நபர்களாக இருப்பதல்ல, ஒரே கொள்கையுடன் இருப்பதாகும் - டோனி எவன்ஸ்

வெளியீட்டு தேதி 16 மே 2025

கிறிஸ்தவத்தில் - எல்லோரும் ஒரே தேவனை ஆராதிக்கிறபோதிலும் - எப்படி இவ்வளவு பிரிவுகள் இருக்க முடியும் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?

எண்ணற்ற பிரிவுகள் உள்ளன, ஒவ்வொரு பிரிவும் ஆண்டவருடைய வார்த்தையை மற்றவர்களை விட நன்றாகப் புரிந்துகொண்டதாக விசுவாசிக்கிறார்கள் அல்லது அவரை ஆராதிப்பதற்கான சரியான வழியைக் கண்டுபிடித்திருப்பதாக விசுவாசிக்கிறார்கள். இவ்வாறு இருக்கையில், ஆண்டவரைப் பற்றி ஒரே ஒன்றிணைந்த சத்தியம் மட்டும் தானே இருக்கவேண்டும்? என்ற கேள்வி எழும்புகிறது.

நான் பரலோகத்திற்குச் சென்றவுடன் ஆண்டவரிடத்தில் கேட்க வேண்டிய கேள்விகள் பட்டியலில் எனது இந்தக் கேள்வியும் நிச்சயமாக உள்ளது, ஆனால் அதுவரை, எனக்குத் தெரிந்த ஒரு உண்மை இதுதான்: எதிரி பிரிவினையில் பலமுள்ளவனாக வளர்கிறான். திருச்சபை ஒன்றுபட்டு சமாதானமாக இருந்தால், அது தடுத்து நிறுத்த முடியாத அளவுக்கு வல்லமை மிக்கதாக மாறும் என்பதை அவன் அறிவான்.💪🏽

இந்த வாரம், ஆண்டவருடைய ஷாலோம் - அதாவது அவருடைய பரிபூரண சமாதானம் பற்றி நாம் தியானிக்கையில் - கிறிஸ்துவின் சமூகத்தில்  கிடைக்கும் சமாதானத்தின் முக்கியத்துவத்தை மறந்துவிடக் கூடாது.⛪️✌🏽

சமாதானக்கட்டினால் ஆவியின் ஒருமையைக் காத்துக்கொள்வதற்கு ஜாக்கிரதையாயிருங்கள். உங்களுக்கு உண்டான அழைப்பினாலே நீங்கள் ஒரே நம்பிக்கைக்கு அழைக்கப்பட்டதுபோல, ஒரே சரீரமும், ஒரே ஆவியும் உண்டு; ஒரே கர்த்தரும், ஒரே விசுவாசமும், ஒரே ஞானஸ்நானமும், எல்லாருக்கும் ஒரே தேவனும் பிதாவும் உண்டு; அவர் எல்லார்மேலும், எல்லாரோடும், உங்கள் எல்லாருக்குள்ளும் இருக்கிறவர் (எபேசியர் 4:3-6). 

அன்பரே, கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களாகிய நாம் சமாதானத்தையும் ஒற்றுமையையும் தேடுபவர்களாக இருக்க வேண்டும்.

“சகோதரரே, நீங்களெல்லாரும் ஒரே காரியத்தைப் பேசவும், பிரிவினைகளில்லாமல் ஏகமனதும் ஏகயோசனையும் உள்ளவர்களாய்ச் சீர்பொருந்தியிருக்கவும் வேண்டுமென்று, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்.” (1 கொரிந்தியர் 1:10

ஆம், ஜனங்கள் வெவ்வேறு கருத்துக்களைக் கொண்டிருக்கும்போது, ஒற்றுமை சவாலானது, ஆனால் நினைவில்கொள்ளுங்கள்:

“ஒற்றுமை என்பது ஒரே மாதிரியான நபர்களாக இருப்பதல்ல; ஏக மனதுடன் இருப்பதாகும்” – டோனி எவன்ஸ்

அன்பரே, இன்று உலகளாவிய திருச்சபையில் ஒற்றுமைக்காக ஜெபிக்கும்படி ஒரு நிமிடம் எடுத்துக்கொள்வோம்:

“பரலோக பிதாவே, இன்று உலகளாவிய திருச்சபைக்காக நாங்கள் உம்மிடம் ஜெபிக்கிறோம்; உமது ராஜ்யத்திற்காக உழைக்கும்படி எங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்ட பணியில், எங்களை ஒன்றிணைப்பீராக. எங்கள் வேற்றுமைகளின் மத்தியிலும் எங்களுக்குத் தயவு காட்டுவீராக, மற்றும் வெளிப்புற ஒருமைப்பாட்டை மட்டும் காட்டாமல், ஒற்றுமையை நாட ஞானத்தை எங்களுக்குத் தந்தருளுவீராக. இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.”

Jenny Mendes
எழுத்தாளர்

Purpose-driven voice, creator and storyteller with a passion for discipleship and a deep love for Jesus and India.