நம்மை ஊக்கப்படுத்த ஆண்டவர் எந்த வழியையும் பயன்படுத்துவார்!

நானும் ஜெனியும் ஒருவரை ஒருவர் சந்தித்துப் பழக ஆரம்பித்த நாட்களில், ஒரு முறை அவள் தனக்குத் தெரிந்த ஒரு குழுவினருடன் - நான் இதற்கு முன்பு சந்தித்திராதவர்களுடன் - ஒரு சாலைப் பயணம் சென்றாள். சிறிது நேரம் கழித்து, நான் அவர்களைச் சந்தித்தபோது, அவர்கள், "உங்களைச் சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி! 13 மணி நேர சாலைப் பயணம் முழுவதிலும், போதும் போதும் என்று சொல்லும் அளவுக்கு, ஜெனி உங்களைப் பற்றிதான் எங்களுடன் பேசிக்கொண்டிருந்தார்!" என்று சொன்னார்கள். இது என்னை மிகவும் சிறப்பான நபராக உணர வைத்தது! 🥰
நேரடியாக ஒருவரிடமிருந்து பாராட்டு பெறுவது நமக்கு மிகவும் ஊக்கமளிக்கிறது, ஆனால் இன்னும் புகழ்ச்சிகரமான விஷயம் என்னவென்றால், ஜனங்கள் உங்களைப் பற்றி, நீங்கள் இல்லாதபோது சொல்லும் நேர்மறையான விஷயங்களைக் கேட்பதுதான்.
எதிரியின் முகாமில் இருந்த ஒரு போர்வீரன் கிதியோனைப் பற்றிக் கண்ட ஒரு கனவைப் பகிர்ந்துகொண்டபோது, கிதியோன் ஊக்கமடைந்து பலப்படுத்தப்பட்டார் (நியாயாதிபதிகள் 7:9-15).
"கிதியோன் வந்தபோது, ஒருவன் மற்றொருவனுக்கு ஒரு சொப்பனத்தைச் சொன்னான். அதாவது இதோ ஒரு சொப்பனத்தைக் கண்டேன்; சுட்டிருந்த ஒரு வாற்கோதுமை அப்பம் மீதியானியரின் பாளயத்திற்கு உருண்டுவந்தது, அது கூடாரமட்டும் வந்தபோது, அதை விழத்தள்ளிக் கவிழ்த்துப்போட்டது, கூடாரம் விழுந்துகிடந்தது என்றான். அப்பொழுது மற்றவன்; இது யோவாசின் குமாரனாகிய கிதியோன் என்னும் இஸ்ரவேலனுடைய பட்டயமே அல்லாமல் வேறல்ல; தேவன் மீதியானியரையும், இந்தச் சேனை அனைத்தையும், அவன் கையிலே ஒப்புக்கொடுத்தார் என்றான். கிதியோன் அந்தச் சொப்பனத்தையும் அதின் வியார்த்தியையும் கேட்டபோது, அவன் பணிந்துகொண்டு, இஸ்ரவேலின் பாளயத்திற்குத் திரும்பிவந்து: எழுந்திருங்கள், கர்த்தர் மீதியானியரின் பாளயத்தை உங்கள் கைகளில் ஒப்புக்கொடுத்தார் என்று சொன்னான்..."
இதற்கு முன்பு, ஆண்டவர் கிதியோனிடம், “போகப் பயப்பட்டாயானால், ... சேனையினிடத்திற்குப் போய், அங்கே என்ன பேசுகிறார்கள் என்று கேள்” என்று கூறினார் (நியாயாதிபதிகள் 7:10-11).
தனது இதயத்தில் எஞ்சியிருந்த பயத்தை நீக்கி, எதிரியைத் தாக்கத் தயாராக இருக்கும்படி, இந்தக் கனவைக் கேட்க வேண்டியது கிதியோனுக்கு அவசியம் என்பதை ஆண்டவர் அறிந்திருந்தார்.
உற்சாகமளிக்கும் அநேக வார்த்தைகளைப் பேசி, இயற்கைக்கு அப்பாற்பட்ட அடையாளங்களை ஏற்கனவே அவருக்குக் கொடுத்துவிட்ட பிறகும், அவர் இன்னும் பயந்துகொண்டிருந்ததார் என்பதற்காகவோ அல்லது அவருக்கு விசுவாசம் இல்லாமல் போய்விட்டது என்பதற்காகவோ, ஆண்டவர் கிதியோனைக் கண்டிக்கவில்லை (நியாயாதிபதிகள் 6); அதற்குப் பதிலாக, கிதியோனை வித்தியாசமான மற்றும் எதிர்பாராத வழியில் ஊக்குவிப்பதையும் பலப்படுத்துவதையும் அவர் தேர்ந்தெடுத்தார்.
நம் ஆண்டவர் நமக்கு ஊக்கமளிக்கும் ஆண்டவர், அதற்காக அவர் எந்த வழியையும் பயன்படுத்துவார், நம் எதிரிகளைக் கூட பயன்படுத்துவார்!
அன்பரே இன்று உங்களுக்கு ஊக்கம் தேவைப்படுகிறதா? உங்கள் பயங்களை ஆண்டவரிடத்தில் பகிர்ந்துகொள்ளுங்கள், இன்று எதிர்பாராத ஒரு ஊக்க செய்தியை உங்களுக்கு அனுப்பும்படி அவரிடம் கேளுங்கள்!

