எங்களது திருமண உறுதிமொழி 👰🏼♀️💒🤵🏻

நம்பிக்கை, உறுதி அல்லது எதிர்பார்ப்பு ஆகியவற்றால் உங்களை நிரப்பிய ஒரு பெரிய வாக்குத்தத்தத்தை யாராவது உங்களுக்கு அளித்திருக்கிறார்களா?
நம்மில் பலருக்கு, நமது திருமண உறுதிமொழிகள் நாம் செய்யும் மிக முக்கியமான வாக்குத்தத்தங்களாக இருக்கின்றன. கேம்ரனும் நானும் திருமணம் செய்துகொண்டபோது, நாங்கள் எங்கள் சொந்த உறுதிமொழிகளை எழுதினோம், மற்ற உறுதிமொழிகளுடன் கூட, நான் கேம்ரனுக்கு இதையும் உறுதியளித்தேன்:
"சாதகமான நேரங்களிலும் சாதகமற்ற நேரங்களிலும் இயேசுவின் மீது உங்கள் கண்களை செலுத்த நான் எப்போதும் உங்களுக்கு உதவுவேன் என்று நான் உறுதியளிக்கிறேன்.வியாதியின் நேரத்திலும் ஆரோக்கியமான நேரத்திலும் நான் எப்போதும் உங்களுக்காக ஜெபிப்பேன் என்று நான் உறுதியளிக்கிறேன்.வெற்றியிலும் தோல்வியிலும் உங்களுடன் சேர்ந்து ஆண்டவரை ஆராதிப்பேன் என்று நான் உறுதியளிக்கிறேன்.நாம் இன்னும் வளர்ந்து வயதுகளைக் கடந்து செல்லும்போது, உங்களுடன் சேர்ந்து ஆண்டவருடைய வார்த்தையை வாசிக்க விரும்புகிறேன் என்று நான் உறுதியளிக்கிறேன்."
ஆண்டவருடைய கிருபையால், இந்த வாக்குத்தத்தங்களை என்னால் இதுவரை காப்பாற்ற முடிந்ததால் நான் மகிழ்ச்சியடைகிறேன் - சில நாட்களில் மற்ற நாட்களை விட சிறப்பாக கடைபிடிப்பேன், ஆனால் எப்போதும் அவருடைய உதவியுடன் அதைச் செய்கிறேன். ☺️
வாக்குத்தத்தங்கள் எதிர்பார்ப்புகளை உருவாக்குகின்றன. அவை உறுதியளிக்கின்றன. அவை நாம் பிடித்துக்கொள்வதற்கான ஒரு நம்பிக்கையைக் கொடுக்கின்றன.
ஆண்டவரும் கூட நமக்கு வாக்குத்தத்தங்களை அளிக்கிறார்! அவருடைய வாக்குத்தத்தங்கள் ஒருபோதும் நிறைவேறாமல் போகாது.
பொய் சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல; மனம்மாற அவர் ஒரு மனுபுத்திரனும் அல்ல; அவர் சொல்லியும் செய்யாதிருப்பாரா? அவர் வசனித்தும் நிறைவேற்றாதிருப்பாரா? (எண்ணாகமம் 23:19)
ஆனால் பிரபஞ்சத்தின் சிருஷ்டிகர் நமக்கு வாக்குத்தத்தங்களை அளிக்க வேண்டியது அவசியம் என்று ஏன் உணர்கிறார்? அவர் நமக்கு ஏதாவது கடன்பட்டிருப்பதாலோ அல்லது தம்மை நிரூபிக்க வேண்டியிருப்பதாலோ அல்ல, மாறாக நாம் பற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே உறுதிமொழிகளையும் நம்பிக்கையையும் நமக்குக் கொடுக்கிறார்.
அன்பரே, நீங்கள் அவருடைய பார்வையில் மிகவும் மதிப்புமிக்க ஒரு நபர், நிச்சயமாகவே, ஆண்டவர் உங்களுக்காக எல்லாவற்றையும் செய்து முடிக்க ஆயத்தமாக இருக்கிறார்.
அடுத்த சில நாட்களுக்கு, ஆண்டவருடைய வாக்குத்தத்தங்கள் என்ற தலைப்பில், ஆண்டவர் நமக்கு அளித்த சில அற்புதமான வாக்குத்தத்தங்களை நாம் ஆராய்வோம்.
இன்று, உங்களது நினைவுக்கு வருகிற ஆண்டவருடைய ஒவ்வொரு வாக்குத்தத்தத்தையும் எழுத ஒரு நிமிடம் ஒதுக்குங்கள். உங்களுக்கு கொஞ்சம் உதவி தேவைப்பட்டால், வேதாகமத்திலோ அல்லது கூகுள் தளத்திலோ தேடுங்கள். வேதாகமம் ஆயிரக்கணக்கான தெய்வீக வாக்குத்தத்தங்களால் நிரம்பி வழிகிறது - உங்கள் இதயத்தோடு பேசும் வாக்குத்தத்தங்களைக் கண்டறியுங்கள்.

