வாக்குத்தத்தங்களெல்லாம் உங்களுக்கு நிறைவேறிற்று, அவைகளில் ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை யோசுவா 23:14

ஒருவரை நம்பகமானவராக்குவது எது? ஒருவரிடத்தில் உள்ள எந்த குணங்கள், "நான் என் வாழ்க்கையில் அந்த நபரைச் சார்ந்திருப்பேன்" என்று உங்களை நினைக்க வைக்கின்றன?
நம்பகமான ஒரு நபரை நன்கு வரையறுக்கும் பண்புகளில் ஒன்று நேர்மை - தன் வார்த்தையைக் காத்து, தனது கடமைகளை மதிக்கும் திறன்கொண்ட ஒருவனே நேர்மையானவன்.
ஆண்டவர் நம்பத்தக்கவர் என்றும், அவர் முற்றிலும் உண்மையுள்ளவர் என்றும், எப்போதும் தமது வாக்குத்தத்தங்களை நிறைவேற்றுகிறார் என்றும் வேதாகமம் நமக்கு மீண்டும் மீண்டும் நினைவூட்டுகிறது:
“அப்படியே என் வாயிலிருந்து புறப்படும் வசனமும் இருக்கும்; அது வெறுமையாய் என்னிடத்திற்குத் திரும்பாமல், அது நான் விரும்புகிறதைச்செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும்.” (ஏசாயா 55:11)
“அப்பொழுது கர்த்தர்: நீ கண்டது சரியே; என் வார்த்தையைத் தீவிரமாய் நிறைவேற்றுவேன் என்றார்.” (எரேமியா 1:12)
“கர்த்தர் இஸ்ரவேல் குடும்பத்தாருக்குச் சொல்லியிருந்த நல்வார்த்தைகளிலெல்லாம் ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை; எல்லாம் நிறைவேறிற்று.” (யோசுவா 21:45)
“உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்காகச் சொன்ன நல்வார்த்தைகளிலெல்லாம் ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை என்பதை உங்கள் முழு இருதயத்தாலும் உங்கள் முழு ஆத்துமாவாலும் அறிந்திருக்கிறீர்கள்; அவைகளெல்லாம் உங்களுக்கு நிறைவேறிற்று, அவைகளில் ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை.” (யோசுவா 23:14)
அன்பரே, இன்று, ஆண்டவர் உண்மையுள்ளவராய் இருப்பதற்காக நாம் சேர்ந்து அவருக்கு நன்றி சொல்லுவோம்; நீங்கள் நேற்று ஒரு பட்டியலை உருவாக்கியிருந்தால், அதை உங்கள் கைகளில் பிடித்துக்கொண்டு இவ்வாறு ஜெபியுங்கள்:
“பரலோகப் பிதாவே, உமது வாக்குத்தத்தங்கள் அனைத்தும் ஆம் என்றும் ஆமென் என்றும் இருப்பதற்காக நன்றி! உமது வார்த்தை ஒருபோதும் தோல்வியடையாது, அது ஒருபோதும் வெறுமையாகத் திரும்பாது, நீர் பொய் சொல்ல ஒரு மனிதன் அல்ல என்பதால் நன்றி! உமது வாக்குத்தத்தங்களை நான் விசுவாசிக்கிறேன். உமது உண்மைத்தன்மையை நான் விசுவாசிக்கிறேன். நீர் சொன்ன அனைத்தையும் நிறைவேற்றுவீர்! இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.”

