• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FA Farsi
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • HY Armenian
    • ID Bahasa
    • IT Italian
    • JA Japanese
    • KO Korean
    • MG Malagasy
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • RO Romanian
    • RU Russian
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UK Ukrainian
    • UR Urdu
வெளியீட்டு தேதி 28 மே 2025

சாராளும் வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவரென்றெண்ணினாள். எபிரெயர் 11:11

வெளியீட்டு தேதி 28 மே 2025

கடந்த இரண்டு நாட்களாக, ஆண்டவர் தம்முடைய வாக்குத்தத்தங்கள் மூலம் நம்மோடு உறுதியாக இருக்க விரும்புகிறார் என்பதையும், அவர் எப்போதும் தம்முடைய வாக்கைக் காப்பாற்றுகிறார் என்பதையும் நாம் கற்றுக்கொண்டோம்.

இன்று, நாம் அவருடைய வாக்குத்தத்தங்களுக்குள் எப்படி பிரவேசிப்பது  என்பதைப் பற்றி நான் ஆராய்ந்து பார்க்க விரும்புகிறேன்.

முதலில், ஒரு  நல்ல செய்தியோடு  ஆரம்பிக்கலாம்: ஆண்டவருடைய வாக்குத்தத்தங்களை நீங்கள் சம்பாதிக்க முடியாது.

தகுதியுள்ளவர்களாக இருப்பதற்கு நீங்கள் சந்திக்க வேண்டிய "முன்நிபந்தனைகள்" அல்லது "அணுகல் நிபந்தனைகள்" என்று எதுவும் இல்லை. தேவனிடத்தில் பட்சபாதமில்லை. (ரோமர் 2:11) மேலும் உண்மையாய் தம்மைத் தேடும் எவரையும் அவர் புறக்கணிப்பதில்லை. (சங்கீதம் 51:17), (எபிரெயர் 11:6)

நாம் அவருடைய வாக்குத்தத்தங்களை அடைய எதுவும் செய்ய வேண்டியதில்லை என்றாலும், அவற்றை சுதந்தரிக்க நமக்கு உதவும் சில திறவுகோல்கள் உள்ளன. அவை:

1. விசுவாசம்

சாராளின் கதை, வாக்குத்தத்தங்கள் நிறைவேற வழிவகுத்த விசுவாசத்திற்கான ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்:

விசுவாசத்தினாலே சாராளும் வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவரென்றெண்ணி, கர்ப்பந்தரிக்கப் பெலனடைந்து, வயதுசென்றவளாயிருந்தும் பிள்ளைபெற்றாள். (எபிரெயர் 11:11

விசுவாசம் ஆண்டவரைப் பிரியப்படுத்துகிறது (எபிரெயர் 11:6) மேலும் அது ஆண்டவருடைய வாக்குத்தத்தங்களை நீங்கள் ஒருபோதும் மறவாமல் இருக்க உதவும். மிகவும் கடினமான சூழ்நிலைகளின் மறுபக்கத்தில் உள்ள பலனைக் காண விசுவாசம் உங்களுக்கு உதவும்.

2. நீடிய பொறுமை 

விருப்பத்திற்கு மாறாக, ஆண்டவருடைய வாக்குத்தத்தங்கள் கால அட்டவணையோடு வருவதில்லை. அவர் உரைத்தது அவருடைய சரியான நேரத்தில் நிறைவேறும் என்று நாம் விசுவாசிக்க வேண்டும். இதற்கிடையில், நாம் பொறுமையாக இருக்க வேண்டும்.

அந்தப்படியே, அவன் பொறுமையாய்க் காத்திருந்து, வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதைப் பெற்றான். (எபிரெயர் 6:15

அன்பரே, ஆண்டவருடைய வாக்குத்தத்தங்கள் உங்கள் வாழ்க்கையில் வெளிப்படுவதைக் காண நீங்கள் காத்திருக்கிறீர்களா? பொறுமையாக இருங்கள் மற்றும் விசுவாசத்தைக் காத்துக்கொள்ளுங்கள்... உங்களுக்கான அவரது வாக்குத்தத்தங்கள் நீங்கள் நினைப்பதை விட உங்களுக்கு மிக அருகில் உள்ளன!

Jenny Mendes
எழுத்தாளர்

Purpose-driven voice, creator and storyteller with a passion for discipleship and a deep love for Jesus and India.