தேவனுடைய வாக்குத்தத்தங்களெல்லாம் இயேசுகிறிஸ்துவுக்குள் ஆம் என்று இருக்கிறதே 2 கொரிந்தியர் 1:20

வேதாகமம் முழுவதும், ஆண்டவரிடமிருந்து கிடைக்கப்பெற்ற எண்ணற்ற வாக்குத்தத்தங்களை நாம் காண்கிறோம். ஆனால், அவர் அளித்த மிகப்பெரிய வாக்குத்தத்தம் எது? உங்கள் வாழ்க்கையையும், என் வாழ்க்கையையும், சகல ஜனங்களின் வாழ்க்கையையும் நிலைநிறுத்தக் கூடிய ஒரே வாக்குத்தத்தம் எது - என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?
ஆண்டவரிடமிருந்து வந்த ஒரு பண்டைய கால வாக்குத்தத்தத்தை என்னுடன் சேர்ந்து கவனியுங்கள், அது இப்போதும், மற்றும் ஒவ்வொரு நாளும் நமக்குப் பொருத்தமானதாக இருக்கிறது. அவர் ஆபிரகாமுக்கு அளித்த வாக்குத்தத்தம்தான் இது:
“பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும்” (ஆதியாகமம் 12:2-3)
இந்த வாக்குத்தத்தத்தை உங்களுக்கும், எனக்கும், ஒவ்வொரு மனிதனுக்கும் மிகவும் விலைமதிப்பற்றதாக மாற்றுபவர் யார்?
பதில் இயேசு!
ஆபிரகாமுக்கு ஆண்டவர் அளித்த வாக்குத்தத்தத்தின் நிறைவேற்றம்தான் இயேசு. அவர் ஆபிரகாமின் சந்ததியாக இருக்கிறார் (மத்தேயு 1:1-17). அவர் மூலம், அனைத்து குடும்பங்களும், பூமியின் அனைத்து ஜனங்களும் - நீங்களும் நானும் உட்பட, அனைவரும் ஆசீர்வதிக்கப்படுகிறோம்!
இயேசு நமக்கு ஒரு ஆசீர்வாதம் மட்டும் அல்ல; அவரே நித்திய ஆசீர்வாதமாக இருக்கிறார். நமது இரட்சிப்பு அவரிடத்தில் இருப்பதால் அவரே நமக்கான இறுதி வாக்குத்தத்தமாக இருக்கிறார்.
“அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்றான்.” (அப்போஸ்தலர் 4:12)
ஒரு நாள், நாம் இந்த உலகத்தை விட்டு கடந்து செல்லுவோம், அதுவரை நம்மை சுமந்து செல்லும் ஒரே வாக்குத்தத்தம், இவ்வுலக வாழ்க்கையிலிருந்து நித்தியத்திற்கு நம்மைக் கொண்டு செல்லும் ஒரே வாக்குத்தத்தம், இயேசு கிறிஸ்துவினால் உண்டாகும் இரட்சிப்பின் வாக்குத்தத்தமே ஆகும்.
இயேசு நமக்கான இறுதி வாக்குத்தத்தம் மட்டுமல்ல, ஆண்டவர் அளித்த மற்ற அனைத்து வாக்குத்தத்தங்களுக்கும் அவர் "ஆம்" என்றே இருக்கிறார்:
“எங்களால் தேவனுக்கு மகிமையுண்டாகும்படி, தேவனுடைய வாக்குத்தத்தங்களெல்லாம் இயேசுகிறிஸ்துவுக்குள் ஆம் என்றும், அவருக்குள் ஆமென் என்றும் இருக்கிறதே.” (2 கொரிந்தியர் 1:20)
அன்பரே, உங்களை ஆசீர்வதிக்கவும், உங்கள் நித்திய ஆசீர்வாதமாக அவரே மாறவும் இயேசு உங்களை அவரோடு ஐக்கியங்கொள்ள அழைக்கிறார். இன்றும் மற்றும் ஒவ்வொரு நாளும் அவரது அழைப்பை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள். இந்தக் கருத்து உங்களுக்குப் புதியதாக இருந்தால், அதைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள ஒரு சிறந்த இடம் இந்த வேதவாசிப்புத் திட்டமாகும்.

