கர்த்தரைப் பிரஸ்தாபம்பண்ணுகிறவர்களே, நீங்கள் அமரிக்கையாயிருக்கலாகாது. ஏசாயா 62:6

ஒரு அழகான இடத்திற்கு தேனிலவு பயணம் செல்ல எங்களுக்கு ஏற்பாடு செய்து தருவதாக, கேம்ரனும் நானும் திருமணம் செய்துகொள்வதற்கு முன்பு, ஒரு நபர் எங்களுக்கு வாக்குப்பண்ணியிருந்தார். நாங்கள் உற்சாகமாக இருந்தோம், ஆனால் நாட்கள் கடந்து செல்லச் செல்ல, தங்கள் வாக்கை அவர்கள் நிறைவேற்றுவதற்கான எந்த முயற்சியும் எடுத்ததாகத் தெரியவில்லை. நாங்கள் ஏமாற்றமடைந்தோம், ஆனால் நாங்கள் அதைப் பற்றி கவலைப்படவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக, அத்தகைய பரிசு கடமை உணர்விலிருந்து அல்ல, ஒருவரது இதயத்திலிருந்து வர வேண்டும்.
வாக்குத்தத்தங்கள் உற்சாகமளிப்பவை, ஆனால் மறுபுறம், அவை நிறைவேற்றப்படாதபோது, அது மிகவும் வேதனையாக இருக்கும். ஒருவருக்கு அவர்களின் வாக்குத்தத்தங்களை நினைவூட்டுவது நமக்கு சங்கடமாக இருக்கும்; நாம் அவர்களை தொல்லை செய்வதுபோல் காட்டிக்கொள்ள விரும்பமாட்டோம்.😣
ஆனால் அன்பரே, ஆண்டவருடைய வாக்குத்தத்தங்களை அவருக்கு நினைவூட்ட நீங்கள் ஒருபோதும் சங்கடமாக உணர வேண்டியதில்லை! உண்மையில், வேதாகமம் அதை ஊக்குவிக்கிறது.
"எருசலேமே, உன் மதில்களின்மேல் பகல்முழுதும் இராமுழுதும் ஒருக்காலும் மவுனமாயிராத ஜாமக்காரரைக் கட்டளையிடுகிறேன். கர்த்தரைப் பிரஸ்தாபம்பண்ணுகிறவர்களே, நீங்கள் அமரிக்கையாயிருக்கலாகாது. அவர் எருசலேமை ஸ்திரப்படுத்தி, பூமியிலே அதைப் புகழ்ச்சியாக்கும்வரைக்கும் அவரை அமர்ந்திருக்கவிடாதிருங்கள்." (ஏசாயா 62:6-7)
வேறு ஒரு மொழிபெயர்ப்பில், அவர்கள் கர்த்தருக்கு அவருடைய வாக்குத்தத்தங்களை நினைவூட்ட வேண்டும் என்றும், அவற்றை அவர் ஒருபோதும் மறக்க விடக்கூடாது என்றும் அது கூறுகிறது.
இன்று, இந்தத் தொடரின் கடைசி நாளில், நீங்கள் அவருக்கு (மற்றும் உங்களுக்கும்) நினைவூட்டக்கூடிய ஆண்டவருடைய வாக்குத்தத்தங்களின் பட்டியலை நான் உங்களுக்கு விட்டுச் செல்ல விரும்புகிறேன்:
- உங்களுக்கு ஞானம் தேவையா? ஆண்டவரிடத்தில் கேளுங்கள்: (யாக்கோபு 1:5)
- ஆண்டவர் உங்களது தேவைகளை சந்திக்க வேண்டுமா? பிலிப்பியர் 4:19-ஐ பற்றிக்கொள்ளுங்கள்.
- உங்களுக்கு மன்னிப்பு தேவையா? 1 யோவான் 1:9 உங்களுக்கு அது கிடைத்திருப்பதை உறுதி செய்கிறது.
- உங்களுக்கு அதிக சமாதானம் அல்லது பொறுமை தேவையா? அதை எப்படிப் பெறுவது என்பதை கலாத்தியர் 5:22-23 உங்களுக்குக் காட்டுகிறது.
- உங்களுக்கு குணமடைதல் தேவையா? ஆண்டவர் உங்களை குணப்படுத்துவதாக உறுதியளிக்கிறார்: (எரேமியா 30:17)
- நீங்கள் ஒரு ஆபத்தான சூழ்நிலையில் இருப்பது போல் உணர்கிறீர்களா? ஆண்டவர் உங்களைப் பாதுகாப்பதாக உறுதியளிக்கிறார்: (சங்கீதம் 91:10)
- நீங்கள் பயப்படுகிறீர்களா? ஆண்டவர் உங்களை விடுவிப்பார்: (சங்கீதம் 34:4)
- உங்களுக்கு ஆறுதல் தேவையா? வெளிப்படுத்தல் 21:4 உங்களுக்கு வல்லமை வாய்ந்த ஒரு ஊக்கமளிக்கும் வார்த்தையாகும்.
அன்பரே, ஆண்டவர் வாக்குத்தத்தங்களின் ஆண்டவர்... ஜீவன், சமாதானம் மற்றும் வெற்றியின் வாக்குத்தத்தங்களை அருள்பவர்! அவர் வாக்குப்பண்ணினதை நிறைவேற்ற வல்லவர். (ரோமர் 4:21)

