ஆண்டவருடைய கரம் உங்களைத் தாங்குகிறது

எங்கள் மகன் ஜாக்(Zac) ஏழு மாதக் குழந்தையாக இருந்தபோது, அவன் விரும்பியதெல்லாம் எழுந்து நிற்பதுதான் (அது அவன் நோய்வாய்ப்படுவதற்கு முன்பு). ஒரு நாள், ஜெனி அவனைப் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தாள், அவன் கைகளைப் பிடித்துக்கொள்ளச் சொன்னாள். தனியாக நிற்க முடியாத அளவுக்கு அவன் மிகவும் சிறியவனாய் இருந்தபோதிலும், மிகவும் உறுதியுடனும் பெருமையுடனும், ஜாக்(Zac) நிமிர்ந்து நின்றான்.
[image]
புகைப்படத்தில், ஜாக்(Zac) தான் நட்சத்திரம். நான் புகைப்படத்தில் முழுமையாக இல்லை - என் கைகள் மட்டுமே தெரியும் - ஆனால் ஜாக்(Zac) அவை இல்லாமல் விழுந்திருப்பான்.
அந்தப் படத்தைப் பார்க்கும்போது, "நானும் உன்னை அப்படித்தான் தாங்குகிறேன்" என்று ஆண்டவர் எனக்கு நினைவூட்டினார்.
ஒரு சில நாட்கள், ஆண்டவருடைய பிரசன்னத்தை நாம் உணராமல் போகலாம்; நம் படத்தில் அவரைப் பார்க்க முடியாது. ஆனால் உண்மை என்னவென்றால், அவர் எப்போதும் நம்மை ஆதரித்துக்கொண்டே இருக்கிறார்.
இது எனக்கு ஏசாயா 41:13ஐ நினைவூட்டுகிறது:
உன் தேவனாயிருக்கிற கர்த்தராகிய நான் உன் வலதுகையைப் பிடித்து: பயப்படாதே, நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று சொல்லுகிறேன்.
இந்த வாரம், நம் கைகளைப் பிடித்து நம்மை வழிநடத்த ஆண்டவரை அனுமதித்தல் என்பதன் அர்த்தம் என்ன என்பதை நாம் ஆராய்வோம்.
மனிதர்களாகிய நம்மால் ஒருபோதும் புரிந்துகொள்ள முடியாத எண்ணற்ற குணங்கள் ஆண்டவருக்கு உண்டு. அவர் சர்வ வல்லமையுள்ளவர், எங்கும் நிறைந்தவர், எல்லாம் அறிந்தவர், மேலும் அவர் நாட்களையும் காலங்களையும் கடந்து நிற்கிறார். இது உங்களை ஆச்சரியத்துக்குள்ளாக்குகிறது: அழிவுக்கேற்ற மனிதர்களாகிய நாம் எப்படி, எல்லா புரிதலுக்கும் அப்பாற்பட்ட எல்லையற்ற மற்றும் அழியாத ஆண்டவரோடு உண்மையிலேயே இணைக்கப்பட முடியும்?
ஆனால், தம் குழந்தையைப் பிடிக்க தமது கையை நீட்டும் ஒரு தந்தையாக நாம் அவரைக் கற்பனை செய்யும்போது, அது சாத்தியமாகிறது. இது நாம் தொடர்புபடுத்தக்கூடிய ஒரு இனிமையான, தனிப்பட்ட மற்றும் மிக நெருக்கமான ஒரு சித்தரிப்பாகும்.
அன்பரே, பிரபஞ்சத்தின் சிருஷ்டிகர், உங்கள் கையைப் பிடிக்க விரும்புகிறார்!
"நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்." (ஏசாயா 41:10)
என்னுடன் சேர்ந்து இந்த ஜெபத்தைச் சொல்லுங்கள்: “ஆம், ஆண்டவரே! என் கையைப் பிடித்துக்கொள்ளும்; நான் உமது பிள்ளையாக இருக்க விரும்புகிறேன்! இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.”

