ஆண்டவர் தம் கரத்தை உங்களுக்காக நீட்டுகிறார்

ஜாக்(Zac) நோய்வாய்ப்படுவதற்கு முன்பு, எனக்கு மிகவும் பிடித்த விஷயங்களில் ஒன்று என் கைகளை நீட்டி அவனது பதில் செயலுக்காகக் காத்திருப்பதுதான். சில சமயங்களில், நான் அவனைத் தூக்கிச் செல்ல வேண்டும் என்பதற்காக அவன் அறை முழுவதும் தவழ்ந்து செல்வான்.
ஒரு குழந்தைக்கு தனது தந்தையின் வலுவான மற்றும் அன்பான கரங்களில் தூக்கிச் செல்லப்படுவதை விட சிறந்த உணர்வு உலகில் எதுவும் இல்லை. இது இருவருக்கும் பொருந்தும்; ஒரு தந்தையாக, நான் அந்த தருணங்களை மிகவும் அதிகமாக மனதில் சந்தோஷமாக அனுபவித்தேன்.
வேதாகமம் ஆண்டவருடைய நீட்டப்பட்டிருக்கும் அன்பான கரங்களைப் பற்றிப் பேசுகிறது:
பலத்த கையினாலும் ஓங்கிய புயத்தினாலும் அதைச் செய்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது. (சங்கீதம் 136:12)
பழைய ஏற்பாட்டில், ஆண்டவர் தமது பலத்த கையினாலும், ஓங்கிய புயத்தினாலும், எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து தனது மக்களை எவ்வாறு காப்பாற்றினார் என்பதை நாம் வாசிக்கலாம் (உபாகமம் 26:8).
ஆனால் ஆண்டவருடைய நீட்டப்பட்ட கரத்திற்கான எனக்கு மிகவும் பிடித்த ஒரு உதாரணம், பேதுருவைக் காப்பாற்ற இயேசு தம் கரத்தை நீட்டிய தருணமே ஆகும்:
அப்பொழுது, பேதுரு படவை விட்டிறங்கி, இயேசுவினிடத்தில் போக ஜலத்தின்மேல் நடந்தான். காற்று பலமாயிருக்கிறதைக் கண்டு, பயந்து, அமிழ்ந்துபோகையில்: ஆண்டவரே, என்னை இரட்சியும் என்று கூப்பிட்டான். உடனே இயேசு கையை நீட்டி அவனைப் பிடித்து: அற்பவிசுவாசியே, ஏன் சந்தேகப்பட்டாய் என்றார். (மத்தேயு 14:29-31)
எனது மனதைத் தொட்டது இதுதான்: முதலில் நம்மைத் தேடிவரும் ஆண்டவரையே நாம் சேவிக்கிறோம்.
அன்பரே, பிரபஞ்சத்தைப் படைத்து, இஸ்ரவேலர்களை அடிமைத்தனத்திலிருந்து விடுவித்து, பேதுருவை தண்ணீரிலிருந்து வெளியே இழுத்த அதே கை, இன்று உங்களுக்காக நீட்டப்படுகிறது. இன்று அவர் உங்களைப் பிடித்துக்கொள்ள அனுமதிப்பீர்களா?

