• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FA Farsi
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • HY Armenian
    • ID Bahasa
    • IT Italian
    • JA Japanese
    • KO Korean
    • MG Malagasy
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • RO Romanian
    • RU Russian
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UK Ukrainian
    • UR Urdu
வெளியீட்டு தேதி 4 ஜூன் 2025

ஆண்டவருடைய கரம் உங்களை வடிவமைக்கிறது

வெளியீட்டு தேதி 4 ஜூன் 2025

நீங்கள் எப்போதாவது உங்கள் கைகளால் மட்பாண்டங்களை செய்யும்படி முயற்சித்திருக்கிறீர்களா? நான் முயற்சித்ததில்லை, ஆனால் அது காணப்படுவதை விட மிகவும் சிக்கலானது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். சக்கரம் சுழலும்போது, உங்கள் கைகளில் களிமண்ணைப் பிடித்து அதை வடிவமைத்தல் - இது எளிமையானதாகத் தெரிகிறது. ஆனால் உண்மையில், இது மிகவும் சிக்கலான செயல்முறை, அழுத்தம், வேகம் மற்றும் நீர் ஆகியவை துல்லியமான சமநிலையில் இருக்க வேண்டும். ஒரே ஒரு தவறான அசைவு, முழுவதையும் நிலைகுலைத்துவிடும்.

குயவன் தான் உருவாக்கும் பானையின் மீது முழுமையாக கவனம் செலுத்த வேண்டும். சிறிதளவு கவனச்சிதறல் கூட செயல்முறையை அழிக்கக்கூடும்.

இப்போது ஆண்டவரை குயவனாகவும், உங்களை களிமண்ணாகவும் கற்பனை செய்து பாருங்கள்.

இப்பொழுதும் கர்த்தாவே, நீர் எங்களுடைய பிதா, நாங்கள் களிமண்; நீர் எங்களை உருவாக்குகிறவர், நாங்கள் அனைவரும் உமது கரத்தின் கிரியை. (ஏசாயா 64:8)

ஆண்டவர் தமது அன்பு மற்றும் நோக்கத்திற்கு ஏற்றபடி, சரியான பாத்திரமாக உங்களை வடிவமைக்க அவர் கிரியை செய்யும்போது, அவரது முழு கவனமும் பார்வையும் உங்கள் மீதே உள்ளது.

ஆகையால் ஒருவன் இவைகளைவிட்டு, தன்னைச் சுத்திகரித்துக்கொண்டால், அவன் பரிசுத்தமாக்கப்பட்டதும், எஜமானுக்கு உபயோகமானதும், எந்த நற்கிரியைக்கும் ஆயத்தமாக்கப்பட்டதுமான கனத்துக்குரிய பாத்திரமாயிருப்பான். (II தீமோத்தேயு 2:21)

உங்கள் வாழ்க்கையில் ஆண்டவர் தனிப்பட்ட விதத்தில் செயல்படுகிறார், மேலும் நீங்கள் எவ்வாறு வளர்கிறீர்கள், மற்றும் வடிவம் பெறுகிறீர்கள் என்பதில் கவனம் செலுத்துகிறார். ஆண்டவருடைய கைகள் உங்களை உருவாக்கி வடிவமைக்கின்றன, கரடு முரடானவைகளை மென்மையாக்குகின்றன, விருப்பமான வடிவத்தை நீங்கள் அடையும்வரை உங்களை இறுக்கமாகப் பிடித்துக்கொள்கின்றன. ஒரு குயவன் சக்கரம் சுழலும்போது களிமண்ணை விட்டுவிட முடியாது, அப்படி செய்தால் அது சரிந்துவிடும். அதேபோல உங்கள் வாழ்க்கை சுழன்றுகொண்டிருப்பது போல தோன்றும்போதும் ஆண்டவர் தமது கைகளை உங்கள் வாழ்க்கையிலிருந்து நீக்கிவிட மாட்டார்.

அன்பரே, உங்கள் வாழ்க்கையை அவர் தொடர்ந்து வடிவமைத்துக்கொண்டிருப்பதற்காக ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்:

பரலோகத் தகப்பனே, நீர் குயவனாகவும், நான் களிமண்ணாகவும் இருப்பதற்கு நன்றி. நீர் என்னை ஒரு நோக்கத்திற்காக வடிவமைக்கிறீர் என்பதை அறிந்து, உமது உறுதியான, வலிமையான மற்றும் அன்பான கைகளில் நான் பாதுகாப்பாக இருப்பதை உணர்கிறேன். கனம், அன்பு மற்றும் உமது நோக்கத்திற்கான ஒரு  பாத்திரமாக நீர் என்னை வடிவமைப்பீராக.  இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

Cameron Mendes
எழுத்தாளர்

Worship artist, singer-songwriter, dreamer and passionate about spreading the Gospel.